For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரலட்சுமி விரதம் இருந்தால் நாளை அஷ்டலட்சுமிகளும் வீடு தேடி வருவார்கள்

வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமிகளும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம். மகாலட்சுமி கணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள்.

Google Oneindia Tamil News

மதுரை: வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமிகளும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம். மகாலட்சுமி கணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள். எனவே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது. நாம் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள். மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எனவே தான் அவளை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொள்கிறார்கள்.

ஆகஸ்டு 9 ம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருமகளான லட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் வரலட்சுமி பண்டிகை கொண்டாடுகிறோம். ஆவணி மாதம் பௌர்ணமி நாளுக்கு முந்தையதாக வரும் வெள்ளிக் கிழமையில் தான் இவ்விரத பூஜை அனுசரிக்கப்படுகிறது. ஆவணி மாதம் பௌர்ணமி அமைவதைப் பொறுத்து ஆடியிலோ ஆவணியிலோ கொண்டாட்டப் படுகிறது.

வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் என்றால் முதல் நாளான வியாழனன்றே அம்மனை அழைக்கிறோம். பூஜை செய்யப் போகுமிடத்தில் இழை கோலம் போட்டு காவியிட்டு ஒரு தட்டில் அட்சதையைப் பரப்பி அம்மனை ஆவாஹனம் செய்யப் போகும் கலசத்தை அதன் மீது வைக்க வேண்டும். கலசத்தினுள் அட்சதையுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள் ஒரு வெள்ளிக் காசு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழமும் வைத்து மாவிலையைக் கலசத்தின் மீது வைத்து அதன் மீது தேங்காயை வைக்கிறோம். அம்மனின் முகத்தைக் கலசத்தோடு இணைத்து வைத்து விளக்கேற்றி வெண்பொங்கல் நிவேதனம் செய்கிறோம். அம்மனை அழைப்பதாக உள்ள பாடல்கள் பாடி வரலட்சுமி அம்மனை வரவற்கிறோம்.

மணமாலை தேடி வரும்

மணமாலை தேடி வரும்

வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும். வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

மாங்கல்ய வரம்

மாங்கல்ய வரம்

எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர். மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.

 வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம்

திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் வரலட்சுமி விரதத்தன்று புதுமணம் முடித்த பெண்ணிற்கு இந்நோன்பு எடுத்து வைக்கப்படும். புகுந்த வீட்டில் இந்நோன்பு அனுசரிக்கும் வழக்கம் உள்ளது. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.

லட்சுமி பூஜைக்கு ஏற்ற தீபாவளி

லட்சுமி பூஜைக்கு ஏற்ற தீபாவளி

தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள். யானையின் முகத்திலும் குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள். லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும். தீபாவளித் தினத்தன்று லட்சுமியை கொண்டாடுவதால் மகாலட்சுமியின் பேரருளைப் பரிபூரணமாக பெறலாம். புதுக்கணக்கு எழுதுபவர்கள் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்து விட்டு நோட்டுப் புத்தகங்களின் மீது சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து மலர்தூவி பூஜை செய்து பிறகு வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.

வியாழன் விளக்கேற்றுங்கள்

வியாழன் விளக்கேற்றுங்கள்

லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை குபேர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது. மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது. தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள் பெற உதவும்.

மகாவிஷ்ணுவின் லட்சுமி

மகாவிஷ்ணுவின் லட்சுமி

லட்சுமியின் திருக்கரங்கள் ஸ்வர்ண ஹஸ்தம் எனப்படுகிறது. எல்லா லட்சுமிகளும் அபய வரத ஹஸ்தத்துடன் அருள்புரிகின்றார்கள். லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன. மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.

விளக்கேற்றுங்கள்

விளக்கேற்றுங்கள்

வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும். மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும். அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.

English summary
Varalakshmi Vratham is an important and auspicious festival, dedicated to Goddess Varalakshmi. She is the another form of Goddess Lakshmi, the divine consort of Lord Vishnu. This festival is grandly celebrated in Andhra Pradesh, Telangana, Karnataka, Maharashtra and TamilNadu. It is mostly observed by married womens .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X