For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அக்னி நட்சத்திரம், அட்சய திருதியை, வைகாசி விசாகம் - மே மாத முக்கிய விஷேச நாட்கள்

Google Oneindia Tamil News

சென்னை: மே மாதத்தில் முக்கிய விரத நாட்கள், முகூர்த்த நாட்கள் உள்ளன. செல்வ வளம் தரும் அட்சய திருதியை, பலராமர் ஜெயந்தி, சங்கரர் ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி, முருகப்பெருமானுக்கு உகந்த வைகாசி விசாகம் உள்ளிட்ட பல விஷேச நாட்கள் உள்ளன.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் மே மாதம் 26 நாட்கள் வாட்டி வதைத்து எடுக்கும் இந்த நாட்களில் கோடை மழை பெய்தால் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பித்து விடலாம்.

மே மாதத்தில் சூரியன் மேஷம் ரிஷபம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். புதன், சுக்கிரன் இடப்பெயர்ச்சி மீனத்தில் இருந்து மேஷம் ராசிக்கு நிகழ்கிறது. செவ்வாய் ரிஷபத்தில் இருந்து மிதுனம் ராசிக்கு சென்று ராகு உடன் இணைகிறார். மே மாதத்தில் என்னென்ன விரத நாட்கள், விஷேச நாட்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்.

Important muhurtham days for the month of May

முக்கிய விரத நாட்கள் :

2ஆம் தேதி தேய்பிறை பிரதோஷம் நோய்கள், மன பிரச்சினைகள் தீர தேய்பிறை பிரதோஷ நாளில் சிவபெருமானையும் நந்தியையும் வழிபடலாம். அன்றைய தினம் மத்ஸ்ய ஜெயந்தி.

மே 2 தேய்பிறை சுப முகூர்த்த நாள்

மே 3ஆம் தேதி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் தேரோட்டம்

4ஆம் தேதி அமாவாசை முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம்.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை முடிவடைகிறது.

6ஆம் தேதி கிருத்திகை முருகனை வழிபட நன்மைகள் நடைபெறும்.

7ஆம் தேதி அட்சய திருதியை அன்றைய தினம் உப்பு வாங்கலாம் உப்பு மகாலட்சுமியின் அம்சம். கல் உப்பு இந்து உப்பு வாங்குங்கள். செல்வம் செழிக்கும். தங்கம் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உப்பு வாங்கி வீட்டில் வைத்தாலே செல்வம் செழிக்கும். தான தர்மம் செய்தாலும் புண்ணியம் பல மடங்காக பெருகும்.

மே 7 ஆம் தேதி பலராமர் ஜெயந்தி, ராஜ மாதங்கி ஜெயந்தி

மே 9ஆம் தேதி சங்கரர் ஜெயந்தி அத்வைதத்தை கொடுத்த சங்கரர் ஜெயந்தி, திருவாதிரை நட்சத்திரம் ராமானுஜர் ஜெயந்தி லாவண்ய கௌரி விரதம்.

மே 14ஆம் தேதி வாசவி ஜெயந்தி

மே 15ஆம் தேதி புதன் ஜெயந்தி

16ஆம் தேதி வளர்பிறை பிரதோஷம் சுப நிகழ்ச்சிகளுக்காக வேண்டுபவர்கள் வளர்பிறை பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடலாம்.

மே 17ஆம் தேதி ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி

மே 18ஆம் தேதி வைகாசி விசாகம் பவுர்ணமி முருகன் வழிபாடு குழந்தை பாக்கியம். வேனல் கட்டி பிரச்சினை தீரும் மருத்துவ துறைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் முருகனை வழிபடலாம் புத்த பூர்ணிமாவாகவும் கொண்டாடப்படுகிறது.

மே 22ஆம் தேதி சங்கடஹர சதுர்த்தி விநாயகரை வழிபட நன்மைகள் நடைபெறும்.

மே 30 தத்தாத்ரேய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

திருமணம், சீமந்தம் உபநயனம் உள்ளிட்டவை செய்ய முக்கிய முகூர்த்த நாட்கள்

மே 2, 8,10,16,17,29 ஆகிய நாட்களில் மாங்கல்யம் செய்ய திருமணம், சீமந்தம் செய்யலாம். அக்னி நட்சத்திர காலங்களில் கிரக ஆரம்பம், கிரக பிரவேசம், வாசல்கால் வைப்பதை தவிர்ப்பது நல்லது.

காது குத்த கடன் தீர்க்க நல்ல நாட்கள்

மே 8 15,24 ஆகிய நாட்களில் காது குத்தலாம்.

மே 7,8,10,11,14 17,18,22,25 ஆகிய நாட்களில் கடன் தீர்க்கலாம்.

தன்வந்திரி பகவானுக்கு திருவோண தைலாபிஷேகம் - நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம்தன்வந்திரி பகவானுக்கு திருவோண தைலாபிஷேகம் - நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம்

English summary
Here is the list of Important days and Muhurtam days for the Month of May.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X