For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அக்டோபரில் குருப்பெயர்ச்சி, நவராத்திரி - நல்ல நாட்கள் நிறைய இருக்கு

அக்டோபர் மாதம் திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் செய்ய முக்கிய தினங்கள் காது குத்த, புது வண்டி வாகனம் வாங்க முக்கிய நாட்கள்

Google Oneindia Tamil News

சென்னை: ஆள் செய்யாததை நாளும் கோளும் செய்யும் என்பார்கள். அக்டோபர் மாதத்தில் புரட்டாசி, ஐப்பசி என தமிழ் மாதங்கள் இணைந்து வருகிறது. புரட்டாசியில் திருமணம் செய்ய, கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாட்கள் இல்லை. அதே நேரத்தில் ஐப்பசியில் காது குத்த, வீடு கிரகப்பிரவேசம் செய்ய, புது வண்டி, வாகனம் வாங்க தொழில் தொடங்க முக்கிய நாட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அக்டோபரில் குருப்பெயர்ச்சி, நவராத்திரி, துலா ஸ்தானம், ஐப்பசி அன்னாபிஷேகம் என முக்கிய விஷேச தினங்களும் உள்ளன.

Important and Special Days of October 2018

புது வண்டி வாகனம் வாங்க

அக்டோபர் 4,10,11,28,31 ஆகிய நாட்கள் நல்ல நாட்கள

அக்டோபர் மாதம் வாஸ்து நாள்

அக்டோபர்
28 ஆம் தேதி ஐப்பசி 11ஆம் தேதி புது வீடு, கட்டிடம் கட்ட வாஸ்து செய்யலாம். வாஸ்து நேரம் காலை 7.55 முதல் 8.31 வரை

வீடு கிரகப்பிரவேசம்

அக்டோபர் 19,28,29,31 ஆகிய நான்கு நாட்கள் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம். அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிவரை பால் காய்ச்சலாம்.

கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம்

அக்டோபர் 10,11,19,20,21 28,29,31 நாட்களில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் செய்யலாம்.

திருமணம்

அக்டோபர் 19,28,31 திருமணம், மாங்கல்யம் செய்ய ஏற்ற நாட்கள்

காது குத்த நல்ல நாட்கள்

அக்டோபர் 19,29 நாட்களில் காது குத்தலாம்

தோஷ பரிகார சாந்தி

அக்டோபர் 7 முதல் 12 வரையிலும் 15, 18,19,21,26,28,29,31 நாட்களில் தோஷ பரிகார சாந்தி செய்ய நல்ல நாட்கள்

கடன் தீர்க்க நல்ல நாட்கள்

அக்டோபர் 6 சனிக்கிழமை 12 மணி முதல் 1 மணிவரை

அக்டோபர் 8 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணிவரை

அக்டோபர் 12 வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணி முதல் 1.30 மணிவரை

அக்டோபர் 13 சனிக்கிழமை 12 மணி முதல் 1 மணிவரை

அக்டோபர் 20 சனிக்கிழமை பிற்பகல் 12 மணி முதல் 1 மணிவரை

அக்டோபர் 23 செவ்வாய்கிழமை11 மணி முதல் 12 மணிவரை

அக்டோபர் 27 சனிக்கிழமை 12 மணி முதல் 1 மணிவரை

அக்டோபர் 28 ஞாயிறு 11 மணி முதல் 12 மணி வரை

புனித நீராட, பூஜை செய்ய நல்ல நாள்

அக்டோபர் 8 மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு திதி கொடுக்க சிறப்பான நாள்.

அக்டோபர் 10 நவராத்திரி பூஜை ஆரம்பம் - கொலு வைக்கலாம்

அக்டோபர் 12 முதல் தாமிரபரணியில் மகாபுஷ்கரம் ஆரம்பம் புனித நீராடலாம்.

அக்டோபர் 18 ஐப்பசி 1 ஆம் தேதி துலா ஸ்தானம் செய்யலாம். இன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நாள்.

அக்டோபர்
19 ஐப்பசி 2 விஜயதசமி, புது தொழில் தொடங்க கல்வி சாலைகளுக்கு செல்ல நல்ல நாள்.

அக்டோபர் 24 ஐப்பசி 7 பவுர்ணமி. அன்னாபிஷேகம். இரவில் லட்சுமி பூஜை செய்யலாம்.

English summary
List of all the important days held in October month and festivals in India year 2018.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X