For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரத தாய் மண்ணே வணக்கம்...

By Staff
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

இன்று நாடுமுழுவதும் 71 வது சுதந்திர தினவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், 'நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்' மற்றும் 'ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்' என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம்

independence day of india

இன்றைய சுதந்திர தின பதிவிற்கு சுதந்திர இந்தியாவின் ஜாதகத்தை ஆராயலாம் என தோன்றியது.

சரி! சுதந்திர இந்தியாவின் ஜாதகம் நமக்கு என்னதான் சொல்கிறது என பார்ப்போம்.

ரிஷப லக்னம். லக்னத்தில் உச்ச ராகு. மிதுனத்தில் செவ்வாய். மாந்தி. நீர் ராசி மற்றும் சகோதர ஸ்தானமான கடகத்தில் சூரியன் சந்திரன் சுக்கிரன், புதன் மற்றும் சனி.

ஆறாம் வீடு மற்றும் துலா ராசியில் குரு. ஏழு மற்றும் நீர் ராசியான விருச்சிகத்தில் கேது.

குடும்ப வாழ்க்கை என்றவுடன் நமது நினைவுக்கு வருபவர் சுக்கிரன்தான். கணவன் மனைவி எனும் புனிதமான உறவிற்கு உலகளவில் முன்னுதாரனமாகவும் இலக்கணமாகவும் திகழ்வது நமது நாடு. எனவேதான் காலபுருஷனுக்கு குடும்ப ஸ்தானாமான ரிஷபத்தை லக்னமாக கொண்டுள்ளது போலும். மேலும் ஜோதிடத்தில் கணவனை குறிக்கும் கிரகம் செவ்வாய். மனைவியை குறிக்கும் கிரகம் சுக்கிரன். எனவேதான் அவர்களின் ராசிகள் அருகருகே (மேஷ-ரிஷபம்) அமைந்தது போலும். மேலும் கணவனை குறிக்கும் மேஷத்திற்கு ஏழாமதிபதியாக அதாவது மனைவியை குறிக்கும் களத்திர ஸ்தானமாக சுக்கிரனின் வீடும் (துலாம்) மனைவியின் வீடாகிய ரிஷபத்திற்க்கு ஏழாமதிபதியாக கணவனின் செவ்வாய் வீடாகிய விருச்சிகமும் அமைந்திருப்பது கணவன் மனைவி உறவிற்க்கு மேலும் கட்டியம் கூறுவது போல் அமைகிறது.

மேலும் லக்னம் ஜன வசிய ராசியான சுக்கிரனின் வீடாகி நிற்பதால் இந்தியாவின் வளரச்சி இன்றளவும் பலரை கவரும் வண்ணம் அமைந்திருக்கிறது. பொருளாதாரம், அரசியல், பக்தி மற்றும் கலாச்சாரத்தில் முன்னனியில் நிற்கிறது. பல கலைகளை தன்னகத்தே கொண்டது.

என்றாலும் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் தனது கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். அதற்கு தக்கவாறே இந்தியாவும் தனது கொள்கையை ஒருபோதும் யாருக்கும் விட்டுக்கொடுத்தது கிடையாது.

மேலும் லக்னம் விவசாயத்தின் காரகனான சந்திரன் உச்சமடையும் இடமாகவும் சுக்கிரனின் ரிஷப ராசியானதாலும் நில ராசியானதாலும் விவசாயம் சார்ந்த நாடாக விளங்கிறது போலும்.

லக்னத்தில் ராகுவும் கேதுவும் இருப்பவர்கள் தங்கள் மதக்கோட்பாடுகளோடு பிற மதங்களின் கொள்கைகளையும் மதிப்பார்கள்.

உச்ச ராகுவை லக்னத்திலும் உச்ச கேதுவை ஏழாமிடத்திலும் கொண்டதால்தான் அயல்நாட்டு மதங்களான இஸ்லாத்தையும் கிறித்துவத்தையும் (ராகு -இஸ்லாம், கேது -,கிறித்தவம்) அரவனைத்து செல்கிறது. மேலும் பல்வேறு மத சிந்தனைகளையும் ஆதரிக்கிறது.

ஸர்ப கிரகங்களான ராகுவை லக்னத்திலும் கேதுவை நீர் ராசியான விருச்சிகத்திலும் உச்சம் பெற்று நிற்பதால் கர்ம பூமியாகவும் பல புனிதர்களின் அவதார ஸ்தலங்களாகவும் பல இதிகாசங்களை தன்னகத்தே கொண்டதாகவும் பலரின் பாவங்களை போக்கும் கங்கை, காசி, ராமேஸ்வரம் போன்ற புனித தீர்தங்களை கொண்டதாகவும் திகழ்கிறது போலும்.

களத்திர ஸ்தானாதிபதியாகிய செவ்வாய் குடும்ப தன வாக்கு ஸ்தானம் மற்றும் பகைவனின் வீடாகிய மிதுனத்தில் மாந்தியுடன் சேர்ந்து நிற்பதால்தான் சில அன்டை நாடுகளுடன் அடிக்கடி போரிட வேண்டியிருக்கிறது போலும்!

மாத்ரு காரகனின் வீடு மற்றும் சகோதர ஸ்தானதாகிய கடகத்தில் பல கிரகங்கள் நிற்பதை பார்க்கும்போது பாரத அன்னைக்கு பார பட்ச மின்றி அனைவர் மீதும் பாசத்தோடும் நேசத்தோடும் விளங்குவதின் காரணம் புரிகிறது. சந்திரனுக்கு எந்த கிரகங்களும் பகையில்லையல்லவா!

ஜன வசிய ராசியான துலா ராசியில் குரு விபரீத ராஜயோகம் பெற்று நிற்பது அரசியலில் அவ்வப்போது சில விபரீதங்கள் நேர்ந்தாலும் ஜனநாயகத்திற்கும் நேர்மையான

அரசியலுக்கும் முன்னுதாரனமாகவே திகழ்கிறது. மேலும் சேவை மனப்பான்மைக்கும் அதுவே காரணமாகிறது.

சூரிய சந்திரர்கள் இனைந்து நிற்பதும் சுக்கிர சந்திர இனைவும் சந்திர சனி இனைவின் புணர்ப்பும் இந்தியா பல விதத்திலும் பெண்களை ஆதரித்து பெண்களை சார்ந்தே இருப்பதை குறிக்கிறது.

மொத்தத்தில் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாக திகழ்கிறது.

ஜெய் ஹிந்த்!!!

English summary
India’s Independence Day is a day of great significance for the people of India. Independence Day is an annual observance celebrated every year on 15thof August. At this day India got freedom from the British rule after long years of slavery. It has been declared as the National and Gazetted Holiday all across the India to celebrate this day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X