For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் தெரியாத சூரிய கிரஹணத்தால் பாதிப்பு ஏற்படுமா?

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    திங்கள் கிழமை நிகழும் அதிசயமான சூரிய கிரகணம்-வீடியோ

    -அஸ்ட்ரோ சுந்தரராஜன்

    சென்னை: சூரியன் -பூமி -சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அது இன்று இரவு ஏற்படுகிறது. இந்தியாவில் தெரியாது.

    சூரிய கிரஹணம்:

    கிரஹணத்தை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்லது ஒரு பார்வையாளர் பார்க்கும் போது, ஒரு பொருள் நகர்ந்து செல்லும் போது, ஏற்கனவே இருக்கும் பொருளை மறைப்பது போன்று தோன்றும் காட்சியாகும்.

    indians cannot witness the solar eclipse today

    சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அது ஒரு அமாவாசை நாளன்று ஏற்படும்.

    சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும் நிலையில் முழு சூரிய கிரகணம் இன்று (21/08/2017) திங்கள் கிழமை ஸோமவார அமாவாசை தினத்தில் இரவு இந்திய நேரப்படி இரவு 9.17 முதல் இரவு 2.34 வரை தோன்றுகிறது.

    இந்த அரிய சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றுகிறது. அப்போது சூரியனை சந்திரன் முழுவதும் மறைத்து 3 நிமிடங்கள் வரை கிரகணம் ஏற்படும். இந்த தகவலை 'நாசா' மையம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவில் 14 மாகாணங்களில் முழுமையாக தெரியும்.

    அமெரிக்காவில் முழுமையாக காணக்கூடிய வகையில் ஏற்படும் இந்த சூரிய கிரகணம், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அரைவாசியாக தென்படும்.

    ஜோதிடமும் கிரஹணமும்:

    வானவியலின் அடிப்படையில் தான் ஜோதிடம் அமைந்திருக்கிறது என்றாலும் கிரஹணம் பற்றிய கருத்தில் வானிவியலும் ஜோதிடமும் சிறிது மாறுபட்டு நிற்கிறது.

    வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரஹணம் என கூறுகிறது. ஆனால் ஜோதிடத்தில் நிழல் கிரஹங்களான ராகு மற்றும் கேதுவும் சூரியன் மற்றும் சந்திரனோடு இனைவதை கிரஹணம் என கூறுகிறது.

    சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில் - சூரியன், சந்திரன், ராகு ஒரே வீட்டில் இருக்கும். சந்திர கிரகணம் ஏற்படும். பௌர்ணமி நாளில் - சந்திரன் - ராகு, சந்திரன்-கேது, சூரியன்-ராகு, சூரியன்-கேது எதிர்எதிர் ராசிகளில் இருக்கும்.

    எல்லா நேரங்களிலும் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேதுவோடு ஒரே வீட்டில் இனைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறுகிறார்கள் சில பஞ்சாங்க கணித வல்லுநர்கள். ஒரு குறிப்பிட்ட பாகை வித்தியாசத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நின்றாலும் கிரஹணம் நிகழும் என கூறியுள்ளனர்.

    அதை தொடர்ந்து இன்று ஏற்படும் சூரிய கிரஹணத்தில் திருகணித பஞ்சாங்க படி சூரியனும் சந்திரனும் சிம்மராசியில் நின்று ராகு கடக ராசியிலும் கேது மகர ராசியிலும் நிற்கும் வேளையில் திங்கட்கிழமையுடன் கூடிய. ஸோமவார அமாவாசை தினத்தில் கங்கண சூரிய கிரகணம் நிகழ்கிறது.

    இந்த சூரிய கிரஹணம் ஜோதிட ரீதியாக என்ன செய்யும்?

    இன்றைய சூரிய கிரஹனத்தின்போது கால புருஷனின் அயன சயன போக ஸ்தானம் எனப்படும் மீன லக்னத்தில் நீர் ராசி மற்றும் மோக்ஷ திரிகோணத்தில் அமைந்து மற்றொரு மோக்ஷ திரிகோணமான கடகத்தில் ராகு சுக்கிரனோடு இனைவு பெற்று நின்று மற்றொறு மோக்ஷ திரிகோணமாகிய விருச்சிகத்தில் சனி வக்ரம் பெற்று நிற்கும் வேளையில் சூரிய கிரஹணம் நிகழ்கிறது.

    பொதுவாக பதினைந்து நாட்களில் இரண்டு கிரஹணங்கள் ஏற்படுவது ராஜாங்க விஷயங்களில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தும் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இயற்க்கை பேரிடர்கள், உற்பாதங்கள், பிரபலமானவர்கள் மரணம் ஆகியவற்றையும் ஏற்படுத்த கூடும் என கூறுகின்றன.

    அரசியல் மாற்றத்திற்க்கு முக்கிய காரக கிரஹங்கள் ராகு-கேதுவாகும்.

    இந்த இரு தொடர் கிரஹன காலங்களில் சூரியன் சந்தரன் ராகுகேதுகளின் பிடியில் பலமிழந்து நிற்கிறது.

    மேலும் வரும் 17-8-2017 அன்று திருகணித பஞ்சாங்க படி முழுமையாக

    ராகு சிம்மத்திலிருந்து கடகத்திற்க்கும் கேது கும்பத்திலிருந்து மகரத்திற்க்கும் சென்றுவிட்டனர். அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன் சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீட்டதிபதியான சனைஸ்வர பகவானும் ஆவர்.

    தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் பலரும் அரசியலில் மாற்றத்தை நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில்

    இந்நிலையில் சூரிய கிரஹனம் சூரியனின் ஆட்சி நிலையில் ஏற்படுகிறது.

    அரசியல், அதிகாரம், அந்தஸ்து, கௌரவம், உயர்பதவிகள் ஆகியவற்றை குறிக்கும் சூரியன் ஆடி மாதம் பிறந்ததில் இருந்து தனது ராசிக்கு பன்னிரெண்டில் கடகத்தில் மறைந்து பலமிழந்து நின்றிருந்தது. மேலும் ஆண்மை, வீரம், பலம், அதிகாரம், ராணுவம் ஆகியவற்றை குறிக்கும் செவ்வாய் நீசவீட்டில் பலமிழந்து நின்றிருந்நது. இந்நிலையில் சூரியன் மட்டும் சிம்மத்திற்கு சென்று கிரஹண கால லக்னத்திற்கு ஆறாம் வீட்டதிபதியாகி (சத்ரு ஸ்தானம்) நிற்கிறது.

    எனவே அரசியலில் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டுவதோடு காலைவாரிவிடும் நிகழ்வுகளும், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும்விதமாக அமையும்.

    நீசமடைந்த செவ்வாயோடு ராகு சேர்க்கை பெற்று கேதுவின் பார்வை ஏற்படுவதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பல புரட்சியாளர்கள் தோன்றி யுத்தம் ஏற்படவும் வாய்பிருக்கிறது.

    நீர் ராசிகளில் ராகு சுக்கிரன் வக்கிர சனி ஆகியவை நின்று கிரஹணம் ஏற்படுதால் கடல் சீற்றம், தொடர்மழை, வெள்ள சேதங்கள் ஆகியவையும் இந்த ஆண்டு இறுதி வரை ஏற்பட்ட வண்ணம் இருக்கும். மேலும் விஷங்களால் பாதிப்பு ஏற்படும். பங்கு சந்தையும் திடீர் வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புகள் உண்டு.

    மோக்ஷ திரிகோணங்களில் கர்ம விணைகளை குறிக்கும் ஸர்ப கிரகங்கள், அசுர குருவான சுக்கிரன் மற்றும் சனைஸ்வரர் வக்ரம் பெற்று நிற்பதால் ஆன்மீக பெரியோர்களுக்கு மோக்ஷ நிலை ஏற்படும். புதிய ஆன்மீகவாதிகள் தோன்றுவர்.

    இந்தியாவில் கிரஹணம் தெரியாது என்பதால் அறிவியல் ரீதியாக நேரடி பாதிப்புகள் இருக்காதென்றாலும் மறைமுக பாதிப்புகள் இருக்கம் என்பதை மறுக்கமுடியாது. ஜோதிட ரீதியாக மக நக்ஷத்திர காரர்கள் கிரஹண சாந்தி செய்துக்கொள்வது நல்லது.

    English summary
    Solar eclipse or Surya Grahan 2017 in India will be marked on 21st August 2017, Monday. The occurrence of one of the biggest astronomical events the great American solar eclipse that will blackout the entire country after 99 years. Solar eclipse appears when the moon moves between the Earth and the Sun.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X