• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கவுரவர்களின் கூடவே இருந்து குழி பறித்த சகுனி - கண்ணன் சொன்ன காரணம்

|

சென்னை: மகாபாரதம் படித்தவர்களுக்கு சகுனியை வில்லனாகத்தான் தெரியும். கவுரவர்களுடன் இருந்து பாண்டவர்களுக்கு தொல்லை கொடுத்தவர் என்றுதான் மகாபாரதம் படித்தவர்களுக்கு தெரியும். ஆனால் சகுனியோ கவுரவர்களை வேரோடு சாய்க்கவே அவர்களுடன் கூடவே இருந்து குழி பறித்தவர்கள். பாண்டவர்களுடன் சண்டை போட வைத்து அவர்களின் கோபத்தை தூண்டி போரிட வைத்தவர் என்று கதை உள்ளது. சகுனியைப் பற்றி இன்றைய புராண புதனில் பார்க்கலாம்.

காந்தார நாட்டு மன்னன் சுபலன் இவரின் கடைசி மகன் சகுனி. துரியோதனனின் தாய் காந்தாரியின் தம்பிதான் இந்த சகுனி. காந்தாரிக்கு செவ்வாய் தோஷம் இருக்கவே அவரை திருமணம் செய்யப் போகும் கணவனுக்கு ஆயுள் குறைவு என்று ஜோதிடர் கூறுகிறார். முதல் கணவருக்கு நீண்ட ஆயுள் இல்லை என்பதால் காந்தாரியை ஒரு ஆட்டுக்கு திருமணம் செய்து வைத்து அந்த ஆட்டை பலியிடுகின்றனர். இதைப்படி பார்த்தார் காந்தாரி ஒரு விதவை.

இந்த உண்மையை மறைத்து திருதிராஷ்டிரருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். கண் தெரியாதவருக்கு அக்கா காந்தாரியை திருமணம் செய்து கொடுப்பதா என்ற கோபம் சகுனிக்கு இருக்கிறது. ஆனால் பிதாமகர் பீஷ்மரோ என்னை சுவலன் தங்களை ஏமாற்றிவிட்டான், விதவை என்று சொல்லாமல் மணம் முடித்து கொடுத்து விட்டானே என்று கோபப்படுகிறார்.

குழந்தை வரம் தரும் சஷ்டி விரதம் - சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

பீஷ்மரின் கோபம்

பீஷ்மரின் கோபம்

என் வீட்டுக்கு மருமகளாக கொண்டு வந்தேன். வெளி உலகத்திற்கு தெரிந்தால் சிரிப்பார்களே என்று கூறி கோபப்படுகிறார். சுவலன் குடும்பத்தை அழித்து அந்த ரகசியத்தை வெளிவராமல் செய்துவிடுகிறேன் என்று சுவலனையும அவன் மகன்களையும் பிடித்து சிறையில் அடைக்கிறார் பிதாமகர் பீஷ்மர்.

ஒரு குடும்பத்தையே கொல்வது அதர்மம் என்பதை அறிந்த பீஷ்மர் தினமும் ஒரு கைபிடி அரிசி மட்டும் உண்ணக்கொடுத்தார்.

உயிர் பிழைத்த சகுனி

உயிர் பிழைத்த சகுனி

நாட்கள் செல்லச் செல்ல,நிலைமை மோசமாகியது,சகோதரர்களுக்குள் உணவுக்காக சண்டை வந்தது,சுவலன் ஒரு யோசனை சொன்னான் நம்மில் யாராவது புத்திசாலியானவன் ஒருவன் மட்டும் உணவை உண்டு பிழைத்து இந்த அநியாயத்தைச் செய்த பீஷ்மரை பழிவாங்கட்டும்" இந்த யோசனைக்கு அனைவரும் உடன்பட்டனர். வயதில் இளையவனான சகுனிதான் உணவை சாப்பிட தேர்ந்தெடுக்கப்பட்டான். குடும்பத்தில் சகுனியின் முன் பட்டினி கிடந்து ஒவ்வொருவராக மடிந்தனர்.

நொண்டியான சகுனி

நொண்டியான சகுனி

இறக்கும் முன் சுவலன் சகுனியின் கால்களில் ஒரு காலின் கணுக்காலை அடித்து உடைத்தான், அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. "இனி நீ நடக்கும் போதெல்லாம் நொண்டுவாய், ஒவ்வொரு முறை நொண்டும் போதும் கவுரவர்கள் செய்த அநீதியை நினைவில் கொள், அவர்களை மன்னிக்காதே" என்றார். அதை மனதில் போட்டு புதைத்து வஞ்சக தண்ணீர் ஊற்றி வளர்த்தான்.

எலும்பு தாயக்கட்டை

எலும்பு தாயக்கட்டை

சகுனிக்கு தாயத்தின் மீது ஒரு சபலம் உண்டு என்று சுவலனுக்கு தெரியும், சாகும் தறுவாயில் தன் மகனிடம் "நான் இறந்த பிறகு என் கை விரல் எலும்புகளை எடுத்து தாயக்கட்டையை உண்டாக்கு, அதில் என் ஆத்திரம் முழுவதும் நிறைந்து இருக்கும் நீ எப்படி தாயக்கட்டையை போட்டாலும் நீ விரும்பிய படியே எண்ணிக்கை விழும் நீயே எப்போதும் வெற்றி பெறுவாய் என்றார்.

சகுனியின் வஞ்சகம்

சகுனியின் வஞ்சகம்

சிறிது காலத்தில் சுவலனும், அவனது பிள்ளைகளும் மடிந்து போயினர். சாவதற்கு முன் சகுனியை மட்டும் காந்தாரியுடன் வைத்துக்கொள்ளுங்கள் அவன் உதவுவான் என்று கூறவே அவனை மட்டும் தப்பிக்க வைத்தனர். கவுரவர்களுடன் வாழ்ந்த சகுனிக்கு பீஷ்மரை பார்க்கும் போதெல்லாம் தனது குடும்பம் மடிந்தது நினைவுக்கு வந்தது.

குருச்சேத்திர போர்

குருச்சேத்திர போர்

கவுரவர்களின் நண்பனாகக் காட்டிக்கொண்டான், ஆனால் பீஷ்மர் தன் குடும்பத்தை அழித்தது போல பீஷ்மரின் குடும்ப வீழ்ச்சிக்காக திட்டமிட்டு காய் நகர்த்தினான். கவுரவர்கள், பாண்டவர்கள் சண்டை போட்டனர். பொறாமை தீயை துரியோதனனுக்கு வளர்த்தான். பாண்டவர்களை அவமானப்படுத்த வைத்தான். அனைத்தையும் அறிந்த கிருஷ்ணர் வழக்கம் போல மர்மப்புன்னகை பூத்தார். குருச்சேத்திரப் போர் ஏற்பட்டது. போரில் கவுரவர்கள் நூறு பேரும் கொல்லப்பட்டனர்.

சகுனியின் சதி

சகுனியின் சதி

அம்புப்படுக்கையில் பீஷ்மரின் மரணத்தைப் பார்த்த சகுனி சந்தோஷத்தில் சிரித்தான். கடைசியில் அவனும் போரில் மடிந்தான். இப்படி தாய் மாமனே தனது சகோதரியின் குடும்பத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தான். சகுனிக்கு என கேரளாவில் கோவில் இருக்கிறது. அந்த கோவிலில் குறவர் இன மக்களின் இஷ்ட தெய்வமாக சகுனி வணங்கப்படுகிறார். இளநீரும் வேஷ்டி துண்டும்தான் சகுனிக்கு படைக்கப்படுகிறதாம்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Shakuni We know that Shakuni was the person who masterminded, Shakuni The gambler whose wishes were obeyed by the dice was the brother of Gandhari. Seven occasions when Lord Krishna saved Pandavas.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more