For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடலையும் மனதையும் காக்கும் யோகா - உலக யோகா தினம் கூறும் ஜோதிட ரகசியங்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்று உலக யோகா தினம்-இந்தியா முழுவதும் கொண்டாட்டம்- வீடியோ

    சென்னை: இன்று ஜூன் 21ம் தேதி வியாழக்கிழமை உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஐ.நா. சபை யோகா தினத்தை அறிவித்தது. ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

    இன்றைய அவசர உலகில் அனைவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டோம்.அதனால் பல வியாதிகளை சுமந்து வாழ்ந்து வருகிறோம். யோகா உடம்பையும் மனதையும் சீராக, கட்டுக்கோப்பாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களில் அனைவருக்குமே உடல் முழுவதும் கொழுப்பு சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. சிலருக்கு இடுப்பில், சிலருக்கு தொடையில், சிலருக்கு முதுகில், சிலருக்கு அடிவயிற்றில், சிலருக்கு மேல் வயிற்றில், சிலருக்கு மார்பில் பருமன் வெவ்வேறு வடிவில் இருக்கும். குறிப்பிட்ட யோகாசனத்தை மட்டும் செய்தால் போதும். உடல் முழுவதும் ஒரே மாதிரியாக சீராகும். மேலும் மனதும் புத்துணர்ச்சி பெறும்

    International yoga day is used to celebrate to make the people to get knowledge and effects of yoga on the health of the people

    நமது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட ஒரு நாள் போதும்! நாம் ஆரோக்கியம், ஆனந்தம், அமைதி, அன்பு - இவற்றில் எதைத் தேடி சென்றாலும் உலகில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் உள்நிலை மாற்றம்தான் நோக்கம் என்றாலும் யோகப் பயிற்சிகள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை களைந்து வாழ்வை மிகச் சுலபமாய் கையாள வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.

    International yoga day is used to celebrate to make the people to get knowledge and effects of yoga on the health of the people

    நோய் வந்தபின் மருத்துவரிடம்சென்று அவர் தரும் மருந்துகளையும் மாத்திரைகளையும் சாப்பிடுவதைவிட நோய் வருமுன்யோகாசனகளை செய்தால் நம் உடலோடு சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு காணப்படும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல் காலங்கடந்து யோகா செய்வதால் பலன் கிடைக்காது.

    ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசானங்கள் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆசானங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச் சியை அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள் நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல் களிலும் ஓவ்வொரு ஆசனங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    International yoga day is used to celebrate to make the people to get knowledge and effects of yoga on the health of the people

    இன்று அவசரகதியில் வாழ்ந்துக்கொண்டு வருகிறோம். நேரமில்லை என்ற நொண்டிச்சாக்கை நீங்கள் மூட்டை கட்டிவைத்துவிட்டு நமது உடலுக்காக தினசரி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒதுக்கவேண்டும். முதலில் சற்று தினசரி தடுமாற்றம் ஏற்படும். பிறகு போகப்போக அன்றாட வாழ்க்கையில் யோகா ஓர் அங்கமாக மாறிவிடும்.

    International yoga day is used to celebrate to make the people to get knowledge and effects of yoga on the health of the people

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயதுக்கேற்றபடி யோகா செய்தால் நிம்மதியாக வாழலாம். 7 வயது முதல் யோகாசன பயிற்சியை ஆரம்பித்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

    ஜோதிடத்தில் யோகாசனத்திற்கான கிரக நிலைகள்:

    1.யோகாசனம் கற்கவும் தொடர்ந்து செய்யவும் ஒருவர் ஜாதகத்தில் லக்னம், முயற்சி பாவம் எனப்படும் மூன்றாம் பாவம் நிறைவேற்றும் பாவமான பதிறோராம் பாவம் ஆகிவை பலமாக இருக்க வேண்டும்.

    2.காலபுருஷனுக்கு லக்னமாக மேஷமும் மூன்றாம் பாவமாக மிதுனமும் பதினொராம் பாவமாக கும்பமும் வருவதால் ஜாதகத்தில் செவ்வாய், புதன், சனி ஆகியவற்றின் தொடர்பு அவசியமாகும்.

    3.கிரகங்களில் விளையாட்டை குறிக்கும் செவ்வாயும் சுவாசத்தை குறிக்கும் புதனும் எலும்பை குறிக்கும் சனியும் தொடர்பு பெற்றிருக்கவேண்டும். இவற்றோடு உடம்பை குறிக்கு சந்திரனும் தொடர்பு பெற்றிருக்கவேண்டும்.

    4. உடம்பை எப்படி வேண்டுமாணாலும் வளையும் தன்மை கொண்ட ராகு கேதுகளின் தொடர்பு மூன்று மற்றும் பதினோராம் பாவத்திற்க்கு தொடர்பு பெற்றால் யோகாசனத்தில் சிறந்து விளங்குகிறார்கள்.

    5.வளையும் தன்மை பெறுவதற்க்கு மூலை ராசிகளின் தொடர்பும் லக்னத்திற்க்கோ அல்லது பூர்வ புன்னிய ஸ்தானங்களுக்கோ அமைய வேண்டும்.

    6. யோகா ஆசிரியர்களாக அமைய ஆறு மற்றும் பத்தாம் பாவ தொடர்போடு குரு சனி இவர்களோடு கேதுவின் சேர்க்கையும் பெற வேண்டும்.

    7.பிரபல யோகா குருமார்களின் ஜாதகங்களில் மூலை ராசிகளில் லக்னம் அமைவது அல்லது செவ்வாயின் வீடுகளில் லக்னம் அமைவது, சனியின் வீடுகளில் லக்னம் அமைந்து செவ்வாய் உச்சம் பெறுவது போன்ற நிலைகள் காணப்படுகின்றன. மேலும் செவ்வாய் உச்சம் பெற்று நிற்பது, சந்திரன் உச்சம் பெற்று நிற்பது ஆகியவையும் குறிப்பிடத்தக்க நிலைகளாகும்.

    8.செவ்வாயின் வீடுகளை லக்னமாக பெற்றவர்களுக்கு மூன்றாம் பாவம் அல்லது பதினோறாம் பாவம் புதனின் வீடுகளாக வருவது யோகாவில் சிறக்க சிறப்பான கிரக நிலைகளாகும்.

    9. ஓருவர் ஜாதகத்தில் ஆத்ம காரகனாகவோ உச்ச ராசியிலோ நின்று பல வர்கங்களில் வர்கோத்தம பலம் பெறுவது முக்கியமாக துவாதசாம்சத்தில் ஆட்சி, உச்ச வீடுகளில் நின்று சுப பலத்துடன் நிற்பது ஆகியவை ஜாதகருக்கு சூரிய நமஸ்காரம் செய்யும் நிலையை ஏற்படுத்துகிறது.

    10. ஒருவர் ஜாதகத்தில் மனோ காரகர் சந்திரன், மூளை மற்றும் நரம்புகளின் காரகர் புதன் ஆகியவர்கள் ஆட்சி உச்சம் மற்றும் கேந்திர திரிகோன பல பெற்று நிற்க அவர்கள் ஆழ்நிலை தியானத்தில் சிறந்து விளங்கும் அமைப்பை பெறுகிறார்கள்.

    International yoga day is used to celebrate to make the people to get knowledge and effects of yoga on the health of the people

    ஆழ்நிலைத் தியானத்தை உலகமெங்கும் பரவச் செய்த, உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலைவர் மகரிஷி மகேஷ் யோகி மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூர் அருகேயுள்ள சிச்லி என்ற கிராமத்தில் பிறந்தவர். மகேஷ் பிரசாத் வர்மா என்பது இவரது இயற்பெயர். பள்ளிப் படிப்புக்குப் பிறகு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளங்கலை, இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அறிவியல் பயின்றாலும் இவர் மனம் ஆன்மிகத்திலேயே மூழ்கியிருந்தது. 1939-ம் ஆண்டு பிரம்மானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சீடரானார். தன் சீடருக்கு அவர் 'பால் பிரம்மச்சாரி மகேஷ்’ என்று பெயர் சூட்டினார். 12 ஆண்டுகள் அவரிடம் தியானம், யோகம் உள்ளிட்டவற்றைக் கற்றார். 1953-ல் இமயமலைச் சாரலில் ஆசிரமம் அமைத்து, ஆழ்நிலைத் தியானத்தை போதித்து வந்தார். 1957-ல் சென்னையில் தியான மையம் தொடங்கினார். மன வலிமையாலும் பிரார்த்தனையாலும் எத்தகைய அற்புதங்களையும் சாதிக்க முடியும் என்பதை மக்களிடம் எடுத்துச்சொன்னார். 'மகரிஷி’ என்று அழைக்கப்பட்டார். ரிஷிகேஷில் சர்வதேச ஆசிரியர் பயிற்சிப் பாடத் திட்டத்துக்கான அமைப்பைத் தொடங்கினார்.

    மகரிஷி மகேஷ் யோகி அவர்களின் ஜாதகத்தில் குருவின் வீடு மற்றும் மூலை ராசி எனப்படும் தனுர் ராசியே லக்னமாகி லக்னாதிபதி குரு பதினோரம் பாவமான துலா ராசியில் சூரியன் மற்றும் கேதுவுடன் சேர்ந்து நிற்க முயற்சி பாவம் எனப்படும் மூன்றாம் பாவாதிபதி சனி ஐந்தாமிடத்தில் வக்ரம் பெற்று ராகுவோடு சேர்ந்து நின்று நீசனை நீசன் பார்த்து நீச பங்கத்த பெற்று பதினோரம் பாவம், பதினோரம் பாவாதிபதி ஆகியவர்களை பார்க்க சிறந்த யோகா குருவாக்கியது. மேலும் அஷ்டமாதிபதி மற்றும் சந்திரன் ஒன்பதில் நிற்க, பத்தாமதிபதி புதன் உச்சம் பெற்று நிற்பது மற்றும் சூரியன் சுக்கிரன் பரிவர்தனை ஆகியவை மேலும் அவருக்கு புகழ் சேர்த்தது.

    மேலும் ஆத்ம காரகன் எனப்படும் சூரியன் இவருக்கு பாக்கிய ஸ்தானதிபதியாகி லக்னம், நவாம்சம், த்ரேகானம், சதுர்தாம்சம், சப்தாம்சம், தசாம்சம், ஏகாதசாம்சம், துவாதசாம்சம், பாதம்சம் ஆகிய ஒன்பது வைசேசிகாம்சங்களில் வர்க பலம் பெற்று நின்றதோடு அல்லாமல் துவாதசாம்சத்தில் முதல் வர்கத்திலேயே நின்று கணேஷ் எனும் கணபதியின் அருளை பெற்று நின்றது அவரை உலகம் புகழும் யோகா மற்றும் ஆழ்நிலை தியான ஆசிரியராக விளங்க செய்தது.

    யோக கலையில் சிறந்து விளங்க வழிபடவேண்டிய திருக்கோயில்கள்:

    1. பதஞ்சலி முனிவர் இன்று உலகெங்கும் பிரபலமாகப் பின்பற்றப்படும் யோக கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் ஆவார். இவரது யோக சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது.

    திருச்சி சென்னை சாலையில் பெரம்பலுருக்கு அருகில் திருப்பட்டூர் எனும் இடத்தில் ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரர் கோயில் எனும் பிரம்மா மற்றும் குருவிற்கான கோயில் உள்ளது அதன் அருகே பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதியும் புலிக்கால் முனிவரின் திருக்கோயிலும் அமைந்துள்ளது. அங்கு சென்று குரு, பதஞ்சலி முனிவர், புலிக்கால் முனிவர் ஆகியவர்களை வணங்குவது யோகக்கலையில் சிறப்பை தரும்.

    2.அகத்தியர் முதலான பதினெட்டு சித்தர்கள் யோகக்கலைகளில் சிறந்து விளங்கியது புராணங்களின் வாயிலாக அறிய முடிகிறது. அவர்களின் ஜீவ சமாதிகளை வணங்குவது, தாம்பரம் கேம் ரோடு அருகே பதினெட்டு சித்தர்களுக்கான ஆலயத்தில் சென்று வழிபடுவது ஆகியவை யோகக்கலை பயில விரும்பும் மற்றும் யோக கலை ஆசிரியர்களாக விளங்க சிறந்த வழிபாட்டு தலங்களாகும

    3.தமிழ் சித்தர்களின் முதற்கடவுளாக விளங்குபவர் முருக பெருமானாவார். அவரே செவ்வாய்க்கும் அதிபதியாவார். அவரை பழனி மலையில் சென்று தரிசிப்பது யோககலையில் சிறந்த நிலை அடைய உதவும்.

    4.சிதம்பரம் நடராஜபெருமானின் நடன நிலை யோகக்கலையின் உச்ச நிலையினை குறிக்கும் அம்சமாகும். சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம், திருவாலங்காடு ஆகிய பஞ்ச சபைகளில் நடராஜ பெருமானை வணங்குவது, நடனம் யோககலை ஆகியவற்றில் உன்னத நிலை அடைய செய்யும்.

    -அஸ்ட்ரோ சுந்தரராஜன்

    9498098786

    English summary
    The world is celebrating the fourth International Yoga Day on June 21, 2018. Yoga events are being held in different parts of the country and the world. While Yoga is an age-old practice, the celebration of this practice as the International Day of Yoga has given it a boost. Yoga is a union of physical, mental as well as spiritual practices and disciplines that is said to have originated in India almost 5,000 years ago. While Yoga finds a mention in the Rigveda, it became more prominent as hatha yoga texts emerged around the 11th century. Yoga includes breath control, simple meditation, and the adoption of specific bodily postures. It is widely practiced for health and relaxation. The theme for Yoga Day 2018 is “Yoga for Peace.”
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X