For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த வாரம் இந்த 4 ராசிக்காங்க எந்த வம்புக்கும் போகாதீங்க

Google Oneindia Tamil News

சென்னை: இந்த வாரம் நவகிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மகரம் ராசியில் சூரியன், சனி, கும்பம் ராசியில் சுக்கிரன்,புதன் மிதுனம் ராசியில் ராகு விருச்சிகம் ராசியில் செவ்வாய், தனுசு ராசியில் குரு, கேது, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் இந்த வாரம் மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிகளில் சஞ்சரிக்கிறார். இந்த வாரம் சிம்மம்,கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. இந்த வாரம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம்

சூரியன் - மகரம்
செவ்வாய் - விருச்சிகம் ராசி
புதன் - கும்பம் ராசி
குரு - தனுசு ராசி
சுக்கிரன் - கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு 2ஆம் தேதி மாறுகிறார்
சனி - மகரம் ராசி
ராகு - மிதுனம் ராசி
கேது - தனுசு ராசி

சந்திராஷ்டமம் ராசிகள்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஜனவரி 31,2020 மாலை 6.09 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை.

கன்னி ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 1, 2020 முதல் பிப்ரவரி 3, 2020 காலை 5.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம் வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம். பிப்ரவரி 28, 2020 அதிகாலை 1.08 மணி முதல் மார்ச் 1,2020 வரை சந்திராஷ்டமம் உள்ளது.

துலாம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 3, 2020 காலை 5.40 மணி முதல் பிப்ரவரி 5,2020 பிற்பகல் 2 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 5,2020 பிற்பகல் 2 மணி முதல் பிப்ரவரி 7,2020 பிற்பகல் 6.24 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.

சந்திராஷ்டமம் ராசிகள்

சந்திராஷ்டமம் ராசிகள்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஜனவரி 31,2020 மாலை 6.09 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை.

கன்னி ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 1, 2020 முதல் பிப்ரவரி 3, 2020 காலை 5.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம் வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம். பிப்ரவரி 28, 2020 அதிகாலை 1.08 மணி முதல் மார்ச் 1,2020 வரை சந்திராஷ்டமம் உள்ளது.

துலாம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 3, 2020 காலை 5.40 மணி முதல் பிப்ரவரி 5,2020 பிற்பகல் 2 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 5,2020 பிற்பகல் 2 மணி முதல் பிப்ரவரி 7,2020 பிற்பகல் 6.24 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.

மேஷம்

மேஷம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்க ராசிநாதன் செவ்வாய் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் இருக்கிறார். ஒன்பதாம் வீட்டில் கேது, குரு, பத்தாம் வீட்டில் சூரியன்,சனி, லாப ஸ்தானத்தில் சுக்கிரன்,புதன் மூன்றாம் வீட்டில் ராகு என கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக இருக்கிறது. சுக்கிரன் 2ஆம் தேதிக்கு மேல் விரைய ஸ்தானத்தில் உச்சமடைகிறார். வேலை செய்யும் இடத்தில் உங்க நிர்வாகத்திறமை அதிகரிக்கும். சுப செலவுகள் கூடும். நிறைய மாற்றங்கள் ஏற்படும். புதிய வேலை கிடைக்கும். கோடீஸ்வர யோகம் கூடி வந்துள்ளது. புதிய தொழில் தொடங்கலாம். வெளிநாடு யோகம் கை கூடி வரும், திருமண தடைகள் நீங்கும். சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால் தூர தேச பயணங்கள் நன்மையில் முடியும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நோய்கள் நிவர்த்தியாகும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்களின் மனநிலை உற்சாகமாக இருக்கும். சாதகங்கள் நிறைந்த நன்மைகள் தரக்கூடிய மாற்றங்களாக அமைந்துள்ளது. வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனமாகவும் விழிப்புணர்வுடனும் செல்வது நல்லது.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்க ராசிநாதன் சுக்கிரன் புதனோடு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அஷ்டம ஸ்தானத்தில் கேது, குரு, ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சூரியன், சனி, இரண்டாம் வீட்டில் ராகு என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. சுக்கிரன் 2ஆம் தேதிக்கு மேல் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். இந்த வாரம் உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும் காரணம் உங்க ராசிநாதன் உச்சம் பெற்று லாப ஸ்தானத்திற்கு வருவது சிறப்பு. நிறைய பணவரவு கிடைக்கும். வங்கி சேமிப்பு உயரும். ஆட்டி வைத்த அஷ்டமத்து சனி விலகி விட்டது. இனி சந்தோஷம் பொங்குதே என்று பாடத் தொடங்குவீர்கள். நீங்க கேட்ட இடத்தில் உங்களுக்கு இனி ஈசியாக உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் வாசலை தேடி வரும். நீங்க நினைத்தது நடக்கும் காலம் வந்து விட்டது. வேலையில் மாற்றம் வீடு மாற்றம் நல்லதாக நடக்கும். உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை கை கூடி வரும். மாணவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம் கல்வியில் உயர்வு ஏற்படும். தேர்வுக்காக பிரமாதமாக தயாராவீர்கள். உங்க உடல் நிலையும் மன நிலையும் உற்சாகமாக இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசியில் ராகு களத்திர ஸ்தானத்தில் குரு, கேது, அஷ்டம ஸ்தானத்தில் சூரியன்,சனி, ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன்,புதன் ஆறாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சுக்கிரன் 2ஆம் தேதிக்கு மேல் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் சுமார்தான். காரணம் அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். உங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வண்டி வாகனங்களில் போகும் போது நிதானமாக போங்க. சுக்கிரன் பத்தில் உச்சம் பெற்றிருக்கும் காலத்தில் உங்களுக்கு சுகமான பதவி கிடைக்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. குரு பலனால் கல்யாண யோகம் கை கூடி வருகிறது. சிலருக்கு காதல் மலரும். திருமணம் முடிந்து குழந்தைக்காக ஏங்கி தவிப்பவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். வேலையில் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் ஆனால் அவசரப்பட வேண்டாம். புது வேலைக்கு போகும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பண்ணுங்க. பிரச்சினைகள் எதுவும் வராமல் இருக்க நீங்கதான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். புதிய வண்டி வாகனங்கள் எதுவும் வாங்க வேண்டாம். சூரியன் பெயர்ச்சியாகும் வரை காத்திருங்கள்.

கடகம்

கடகம்

ராசிக்கு விரைய ஸ்தானத்தில் ராகு, ஐந்தாம் வீட்டில் செவ்வாய், அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், ஏழாம் வீட்டில் சூரியன், சனி, ஆறாம் வீட்டில் குரு, கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். சுக்கிரன் 2ஆம் தேதிக்கு மேல் பாக்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய வேண்டாம். இருக்கிறதை விட்டு விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாதீங்க. புதிய வேலை கிடைத்தாலும் எந்த முடிவும் எடுக்காதீங்க. இருக்கிற வேலையை விட்டு விடாதீங்க. யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்காதீங்க. பிசினஸ் செய்பவர்கள் புதிய முதலீடுகள் எதையும் பெரிதாக செய்யாதீர்கள். கூட்டணி தொழில் வேண்டாம். உங்க சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விட்டு நீங்க சுறுசுறுப்பாக வேலையை செய்து முடிங்க. உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டினை குரு பார்வையிடுவதால் நிறைய பணவரவு அதிகமாகும். உறவினர்கள் வருகையால் சுப செலவுகள் அதிகமாகும் பொறுமையோடு இருங்க பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இந்த வாரத்தை கடந்து விடலாம்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு, நான்காம் வீட்டில் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் குரு, கேது, ஆறாம் வீட்டில் சூரியன், சனி களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன்,புதன் என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. சுக்கிரன் 2ஆம் தேதிக்கு மேல் எட்டாம் வீட்டிற்கு மாறுகிறார். பணவருமானம் அற்புதமாக இருக்கும். அரசுத்துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல மாதம் வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு பிரச்சினைகள் நிவர்த்தியாகும். சேமிப்புகள் பெருகும். எட்டில் சுக்கிரன் இருப்பதால் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பெண்கள் பாதுகாப்பில் கவனம். பங்குச்சந்தை, ரேஸ் என எந்த அதிர்ஷ்டத்தையும் நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். கணவன் மனைவி உறவில் சில சண்டை சச்சரவுகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து போங்க சரியாகிவிடும். பிரச்சினைகளை பெரிதாக்க வேண்டாம். சின்னச் சின்ன உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் வரும் வெளிநாட்டு வாய்ப்பும் தேடி வரும். குல தெய்வ வழிபாடு செய்யுங்கள் நன்மைகள் நடைபெறும்.

மாலை 6.09 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்கு இந்த வாரம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சூரியன்,சனியோடு இந்த வாரம் உங்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மூன்றாம் வீட்டில் செவ்வாய்,சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் கேது, குரு, இணைந்திருக்கிறார்கள். ஆறாம் வீட்டில் சுக்கிரன், புதன் பத்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டிற்கு பிப்ரவரி 2ஆம் தேதி மாறுகிறார். நான்காம் வீட்டில் உள்ள குருவின் பார்வை உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை தேடித்தரும். முயற்சிகள் நல்ல பலனை தரும். வார தொடக்கத்தில் சந்திராஷ்டமம் இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் சந்திரன் நகர்வு உற்சாகத்தை தரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நான்காம் வீட்டில் குரு கேது சேர்க்கை இருப்பதால் உங்க உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தை கவனமாக இயக்குங்க. தேவையான கடன் உதவிகள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். மனைவி உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள். வியாபாரிகளுக்கு கடன் கிடைக்கும். பெண்களின் பாதுகாப்பில் கவனமாக இருக்கும். பிள்ளைகளுக்கு முன்னேற்றகரமான காலகட்டம். சிறு சிறு பயணங்கள் செல்வீர்கள் பயணங்கள் செல்லும் போது விழிப்புணர்வு தேவை. உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி முடிந்து விட்டது. ஐந்தாம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதால் பித்ரு காரியங்கள் செய்ய மறந்து விட வேண்டாம். பிப்ரவரி 1, 2020 முதல் பிப்ரவரி 3, 2020 காலை 5.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம் வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம். பிப்ரவரி 28, 2020 அதிகாலை 1.08 மணி முதல் மார்ச் 1,2020 வரை சந்திராஷ்டமம் உள்ளது.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே இந்த வாரம் சூரியன் சனி நான்காம் வீட்டிலும் முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் கேது, குரு, இணைந்திருக்கிறார்கள். இரண்டாம் வீட்டில் செவ்வாய், ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், புதன் பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சுக்கிரன் 2ஆம் தேதிக்கு மேல் ஆறாம் வீட்டிற்கு மாறுகிறார். உங்க ராசி அதிபதி உச்சம் பெற்றிருப்பதால் நிறைய சாதனைகள் செய்வீர்கள். படிக்கும் மாணவர்கள் மனக்குழப்பத்தையும் பயத்தையும் விட்டு விடுங்கள். படித்து முடித்து விட்டு வேலை செய்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். ஒன்பதாம் வீட்டில் ராகு நான்காம் வீட்டில் சனி சூரியன் இருப்பதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்களின் முயற்சிக்கு வெற்றிகள் கிடைக்கும் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. போட்டி தேர்வுகளில் வெற்றிகள் தேடி வரும். செல்ல வளம் தரும் மாதம். மாணவர்கள் துர்க்கையை வழிபடுங்க நன்மைகள் நடைபெறும். தேர்வுகளை பயமின்றி எதிர்கொள்வீர்கள். பிப்ரவரி 3, 2020 காலை 5.40 மணி முதல் பிப்ரவரி 5,2020 பிற்பகல் 2 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே இந்த வாரம் சூரியன்,சனி மூன்றாம் வீட்டிலும் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் கேது, குரு இணைந்திருக்கிறார்கள். உங்க ராசிநாதன் செவ்வாய் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். நான்காம் வீட்டில் சுக்கிரன்,புதன் எட்டாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சுக்கிரன் 2ஆம் தேதிக்கு மேல் ஐந்தாம் வீட்டிற்கு மாறுகிறார். நல்ல பணவருமானம் வரும். கடன்கள் படிப்படியாக அடையும். பேச்சிற்கு மதிப்பு கூடும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. மாணவர்களின் கவனம் படிப்பில் அதிகமாகும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தினால் காதல் மலரும், மனதிற்கு பிடித்த வரன் அமையும் யோகம் தேடி வருகிறது. வயிற்றில் பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும் கவனமாக இருங்க. பிசினஸ்ல நல்ல முன்னேற்றம் ஏற்படும் மாதம். வியாபாரத்தில் போட்ட முதலீடுகள் இரண்டு மடங்காக திரும்ப வரும் இதுநாள் வரை பட்ட பாட்டிற்கு பலன் கிடைக்கப்போகிறது. பிப்ரவரி 5,2020 பிற்பகல் 2 மணி முதல் பிப்ரவரி 7,2020 பிற்பகல் 6.24 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு கவனமாக இருப்பது அவசியம், வீண் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் மவுன விரதம் இருப்பது அவசியம்.

தனுசு

தனுசு

குருவை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, சூரியன்,சனி குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிலும் உங்க ராசியில் கேது, குரு, இணைந்திருக்கிறார்கள். மூன்றாம் வீட்டில் சுக்கிரன்,புதன், ஏழாம் வீட்டில் ராகு சஞ்சரிக்கிறார். 12ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கின்றன.
சுக்கிரன் 2ஆம் தேதிக்கு மேல் நான்காம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். பேச்சில் கவனமாக இருங்க கோபமான வார்த்தைகளை பேசி யார் மனதையும் காயப்படுத்த வேண்டாம். வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு வண்டி வாகன யோகம், வீடு வாங்கும் யோகம் கிடைக்கும். நகைகளை வாங்குவீர்கள். படிப்பில் கவனம் செலுத்துங்கள். ராசியில் உள்ள கேது சில தடைகளை ஏற்படுத்துவார். ராகு ஏழாம் வீட்டில் இருந்து வேகத்தை தருவார். எதிர்மறை எண்ணங்களை விட்டுத்தள்ளுங்கள். பாசிட்டிவ் எண்ணங்களை அதிகமாக வளர்த்துக்கொள்ளுங்கள். புதன்கிழமைகளில் நரசிம்மரை வணங்குங்கள் உயர்கல்வி யோகம் கூடி வருகிறது. கணவன் மனைவி உறவில் சில பிரச்சினைகள் பிரிவுகள் வரலாம். நரம்பு, எலும்புகள் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். அதிர்ஷ்டங்கள் அதிகரிக்க குலதெய்வ வழிபாடு செய்யுங்கள் நன்மை நடைபெறும்.

மகரம்

மகரம்

சனியை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே உங்க ராசியில் சூரியன்,சனி விரைய ஸ்தானத்தில் கேது, குரு, இரண்டாம் வீட்டில் சுக்கிரன்,புதன், ஆறாம் வீட்டில் ராகு, லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சுக்கிரன் 2ஆம் தேதிக்கு மேல் 3ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த மாதம் உங்களுக்கு முதலீடுகள் அதிகமாகும். பண வருமானமும் கூடும். பொன் நகைகளை வாங்குவீர்கள். மூன்றாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் உங்க பேச்சு வார்த்தையில் உற்சாகம் பிறக்கும். நினைத்த இடத்திற்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும். பேச்சில் இனிமை கூடும், பேச்சிற்கு மதிப்பு மரியாதை அதிகமாகும். ஜென்ம சனி என்று கவலைப்பட வேண்டாம் சனி பகவான் ஆட்சி பெற்றிருக்கிறார். சனி சூரியனோடு இணைந்திருப்பதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தை பாருங்க. மருத்துவமனைக்கு கூட்டிட்டு போங்க. குடும்பத்திலும் வேலை செய்யும் இடத்திலும் வீணான வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். அரசு அதிகாரிகள், அரசை பகைத்துக்கொள்ள வேண்டாம். உயரதிகாரிகளைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். அரசியல்வாதிகள் கவனமாக இருங்க. நிதானத்தை கடைபிடிக்க. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு நல்ல காலகட்டம். படிப்பில் இருந்த மந்த நிலை மாறும். கணினி துறையில் இருப்பவர்களுக்கு யோகங்களை அள்ளித்தரும் கால கட்டம். பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனிபகவானை வழிபடுங்க நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்குள் சுக்கிரன், புதன், விரைய ஸ்தானத்தில் சூரியன், சனி, லாப ஸ்தானத்தில் குரு,கேது தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மகிழ்ச்சிகரமான வாரம். சுக்கிரன் 2ஆம் தேதிக்கு மேல் தன ஸ்தானத்தில் உச்சமடைகிறார். இரண்டாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதால் நிறைய பண வருமானம் வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். கணவன் மனைவி இடையே காதல் அதிகமாகும் அன்பு மழை பொழியும் நேரம் இது. மாணவர்களுக்கு அதிர்ஷ்டகரமான வாரமாகும். லாபங்கள் அதிகமாக இருக்கும் காரணம் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கிறார். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் மீது கவனமாக இருங்க. வேலையில் புரமோசன் கிடைக்கும். கண்களில் சில பிரச்சினைகள் வந்தாலும் சூரிய நமஸ்காரம் பண்ணுங்க நல்லதே நடக்கும். கண் திருஷ்டி அதிகமாக தாக்கும் கவனமாக இருங்க. செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை விளக்கேற்றி வழிபடுங்க நன்மைகள் நடைபெறும்.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களே இந்த மாதம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், லாப ஸ்தானத்தில் சூரியன், சனி சஞ்சரிக்கின்றனர். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு,கேது, பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய், சுக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சுக்கிரன் 2ஆம் தேதிக்கு மேல் உங்க ராசியில் உச்சமடைகிறார். குருவினால் ஹம்ச யோகமும் சுக்கிரனால் மாளவியா யோகமும் தேடி வரும். நிறைய விருந்து விழாக்கள் என போவீர்கள். நிறைய பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாகும் மாதமாகும். சுக்கிரன் உங்க ராசியில் உச்சம் பெற்றிருப்பதால் சில மறைமுக தொடர்புகளை ஏற்படுத்தும் எச்சரிக்கையாக இருங்கள். பயணங்களினால் உற்சாகமடைவீர்கள். வீடு வண்டி வாகனம் யோகம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். தான தர்மங்கள், அன்னதானம் செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். வயதானவர்களுக்கு உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மாணவர்களுக்கு மிகச்சிறந்த வாரம் படிப்பில் கவனம் அதிகமாகும். நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவீர்கள். சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால் பிசினஸ் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். பத்தில் குரு பதவியில் இடமாற்றம் வேலையில் மாற்றம் கிடைக்கும். வெளிநாடு யோகம் சிலருக்கு ஊர் மாற்றமும் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். காதல் கைகூடி சிலருக்கு திருமணம் நடக்கும்.

English summary
Intha vara rasi palan in tamil weekly horoescope for 12 zodiac signs mesham to meenam from 31-01-2020 to 06-02-2020
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X