For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த வாரம் என்ன விஷேசம் - ஆகஸ்ட் 19 முதல் 25 வரை விரத நாட்கள்

ஆவணி மாதம் பிறந்து விட்டது. இந்த வாரத்தில் மகா சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, கோகுலாஷ்டமி என முக்கிய பண்டிகைகள், விரத நாட்கள் உள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: இன்றைய தினம் மஹா சங்கடஹர சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகிறது. விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியை மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். சென்னை மயிலாப்பூர் லஸ் நவசக்தி விநாயகர் மற்றும் திருச்சி உச்சி பிள்ளையார், மாணிக்கவிநாயகர், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் என தமிழகம் முழுவதும் உள்ள விநாயகர் கோயில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக செய்யப்படுகின்றன.

சங்கட ஹர சதுர்த்தி தவிர வேறு இந்த வாரம் என்னென்ன விஷேச நாட்கள் இருக்கு என பார்க்கலாம்.

Intha varam Enna Vishesham

இந்த வார விஷேச நாட்களை டைரியில் குறிங்க விரதம் இருங்க:

ஆகஸ்ட் 19 ஆவணி 2 திங்கட்கிழமை மகா சங்கடஹர சதுர்த்தி விரதம் விநாயகரை வணங்கி விரதம் இருக்க வேண்டிய நாள்

ஆகஸ்ட் 21 ஆவணி 4 புதன்கிழமை தேய்பிறை சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்கலாம்.

ஆகஸ்ட் 23 ஆவணி 6 கிருத்திகை விரதம் முருகனுக்கு உகந்த நாள். கோகுலாஷ்டமி கிருஷ்ணர் அவதார தினம் பகவான் கிருஷ்ணரை வணங்க நல்ல நாள்.
தேய்பிறை அஷ்டமி கால பைரவரை வணங்க நன்மைகள் நடைபெறும்

ஆவணி 6 வாஸ்து பூஜை செய்ய நல்ல நாள் வீடு, கட்டிடம் கட்ட காலை 7.23 மணி முதல் 7.59 மணிவரை வாஸ்து செய்யலாம்

ஆகஸ்ட் 24 ஸ்ரீ சனி ஜெயந்தி - சனிபகவனை வணங்க நன்மைகள் நடைபெறும்.

மகா சங்கடஹர சதுர்த்தி

சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள். சந்திர திசை, கேது திசை நடப்பவர்கள் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியிலும், விநாயகர் சதுர்த்தியிலும் பிள்ளையாரை வழிபட்டால் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும். இன்றைய தினம் மஹா சங்கடஹர சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகிறது. விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியை மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். சந்திராஷ்டம தினம், சந்திரன் 6/8/12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் நிற்க்க பெற்றவர்கள், சந்திர திசை, கேது திசை நடப்பவர்கள் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியிலும், விநாயகர் சதுர்த்தியிலும் பிள்ளையாரை வழிபட்டால் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும்.

தேய்பிறை சஷ்டி, கிருத்திகை

சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பார்கள். சஷ்டி திதி முருகப்பெருமானுக்கு உகந்தது. அதே போல கிருத்திகை திதியும் கந்தனுக்கு உகந்தது. இந்த நாட்களில் விரதம் இருக்க நன்மைகள் நடைபெறும். புத்திரபாக்கியம் கிடைக்கும்.

கிருஷ்ண ஜெயந்தி

பகவான் கிருஷ்ணன் அவதார தினம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீட்டில் பாதம் வரைந்து அந்த கண்ணனை அழைக்கலாம். படையல் வைத்து கண்ணனை வணங்க வீட்டிற்குள் கண்ணன் ஏதாவது ரூபாத்தில் வந்து பூஜையில் பங்கேற்பார் என்பது ஐதீதகம்.

தேய்பிறை அஷ்டமி

தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கு உகந்த நாள். பைரவர் சனியின் குரு. பைரவரை வழிபட சனி தோஷங்கள் விலகும் நன்மைகள் நடக்கும். மிளகு தீபம் ஏற்றி அரளிப்பூ மாலை சாற்றி பைரவரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

வாஸ்து நாள்

வாஸ்துபகவான் விழித்திருக்கும் நாளில் வாஸ்து பூஜை செய்ய கட்டிடம், வீடு கட்டும் பணிகள் விரைவாக நடந்து முடியும். தடங்கல்கள் இன்றி வீடு கட்டி கிரகப்பிரவேஷம் செய்யலாம்.

சனி ஜெயந்தி

சனி பகவான் நவகிரகங்களில் மிக மெதுவாக நகர்பவர். சனிப்பெயர்ச்சியை மக்கள் ஆர்வத்துடனும் பயத்துடனும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சனி ஜெயந்தி நாளில் தனி சனீஸ்வரருக்கோ நவ கிரக தலத்தில் உள்ள சனீஸ்வரருக்கோ அர்ச்சனை செய்யலாம் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

English summary
Here is the list of Important festival days for this week from August 19 to 25
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X