For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜூலை மாத ராசிபலன்கள் 2019: மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் பரிகாரங்கள்

ஜூலை மாதம் கிரகங்களின் சஞ்சாரம் அதி அற்புதமாக உள்ளது. சில ராசிக்காரக்களுக்கு மாற்றங்களும் ஏற்றங்களும் நிறைந்த மாதமாக உள்ளது.12 ராசிகளில் சில ராசிக்காரர்களுக்கு காதல் யோகம் வரும், சிலருக்கு பணவரவு அத

Google Oneindia Tamil News

Recommended Video

    04-07-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ

    மதுரை: ஜூலை மாதம் அதி அற்புதமான மாதம். ஜூலை மாதம் கொண்டாட்டமான மாதம் மாற்றங்களும் ஏற்றங்களும் நிறைந்த மாதம். 12 ராசிக்காரர்களுக்குமே இது நல்ல மாதமாக இருந்தாலும் ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் மனசு என்று சில ராசிக்காரர்கள் மட்டுமே பாடப்போகிறார்கள். சில ராசிக்காரர்களுக்கு வருமானம் கொட்டப்போகிறது. சில ராசிக்காரர்கள் மறந்தும் கூட இந்த மாதத்தில் கடன் வாங்கி விட வேண்டாம் ஏனென்றால் கிரகங்களின் கூட்டணி அப்படி இருக்கிறது.

    இந்த மாதத்தை பொறுத்தவரை சூரியன் முதல் 16 நாட்கள் மிதுனத்திலும் 17ஆம் தேதி முதல் கடக ராசியிலும் சஞ்சரிக்கிறார். கூட்டணியை பொருத்தவரை பாதி நாட்கள் ராகு சுக்கிரனுடன் மிதுனத்தில் இணையும் கூட்டணி மாத பிற்பகுதியில் கடகத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் என மாறுவதால் 12 ராசிக்காரர்களுக்குமே நன்மையும் தீமையும் கலந்ததாகவே இருக்கும். கடகத்தில் செவ்வாய் நீசமடைந்து புதனுடன் இணைந்துள்ளார், விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் கேது சனி என இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

    இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொருத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், பணவருமானம் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.

    மேஷம்

    மேஷம்

    வீரத்தின் அதிபதியான செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே. உங்க ராசி அதிபதி செவ்வாய் நான்காம் வீட்டில் நீசம் பெற்றிருந்தாலும் உங்களுக்கு பாதகமில்லை. காரணம் குருபகவானின் பார்வை உங்க ராசி அதிபதி மேலே விழுகிறது. அற்புதமான யோகங்கள் கிடைக்கப் போகிறது. புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழிலில் புது முயற்சி ஏற்படும். புதிய கட்டடம் கட்டலாம். செவ்வாய் புதனோடு இருப்பதால் நன்மை அதிகரிக்கும். மாத முற்பகுதியில் மூன்றாம் வீட்டில் சுக்கிரன் சூரியன் ராகு ஒரே வீட்டில் சஞ்சரிப்பதால் பூமி, செங்கல் கட்டிடத்தொழில் மருந்து ரத்தம் தொடர்பான தொழில் காவல்துறை, அரசு துறை சார்ந்தவர்கள். உணவு தொடர்பானது நெருப்பு தொடர்பான தொழில்கள் நல்ல லாபத்தை தரும்.

    திருமண பொருத்தம் பார்க்கலாம் அற்புதமாக பொருந்தி வரும். காதல் விசயங்களில் கவனம். பக்குவப்பட்ட மனிதராக இருந்து அறிவிப்பூர்மாக பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் அதிக அளவில் பெரிய முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். அளவான அளவில் முதலீடு செய்ய வியாபாரம் மிகப்பெரிய வெற்றியைத் தரும். நல்ல வேலை கிடைக்கும். முடிவெடுங்கள். 17ஆம் தேதிக்கு மேல் நான்காம் வீடான கடகத்தில் சூரியன் செவ்வாய், புதனுடன் இணைகிறார். சுக்கிரனும் 24ஆம் தேதி கடகத்தில் கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் அதி அற்புதமான மாற்றங்கள் ஏற்பட உள்ளது.

    மாணவர்களுக்கு இது வெற்றிகரமான மாதம். தேர்வு எழுதி வெற்றி பெறுவீர்கள். அரியர் எழுதி வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் ஏற்றம் கிடைக்கும். வெளிநாட்டு யோகமும் அமையும். சனியால் யோகம் அதிகரிப்பதால் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். புதிய வீடு வாங்குவீர்கள். வங்கி கடன் மூலம் நன்மைகள் நடைபெறும். அற்புதமான எதிர்காலம் அமையப்போகிறது. இந்த மாதம் தினசரியும் சூரியனை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

    ரிஷபம்

    ரிஷபம்

    சுக்கிரபகவானை ராசிநாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே இந்த மாதம் நீங்க ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. காரணம் கிரகங்களின் கூட்டணி உங்களுக்கு ரொம்ப சாதகமாக இருப்பதால் அதிகம் நன்மைகள் நடைபெறும். கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், ராகு மூன்றாம் வீட்டில் செவ்வாய், புதன் ஏழாம் வீட்டில் குரு, எட்டாம் வீட்டில் சனி கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. மாத பிற்பகுதியில் சூரியனும் சுக்கிரனும் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகின்றனர். இந்த மாதம் கிரகப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு என்னென்ன சாதக பாதகங்களை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம். உங்களின் முக வசீகரமும் பொலிவும் கூடும். உங்கள் ராசிக்கு இந்த மாதம் திடீர் அதிர்ஷ்டமும் எதிர்பாரத வருமானம் கூடும் காரணம் இரண்டாம் வீட்டில் உள்ள சூரியன், சுக்கிரன் ராகுதான். மூன்றாம் வீட்டில் புதன் செவ்வாய் உடன் இணைந்திருப்பது ராஜயோகம். தொழில் ரீதியான வெற்றி கிடைக்கும். பொழுதுபோக்கு சந்தோஷம் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். புகழ் கூடும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல தன லாபம் கிடைக்கும். அஷ்டமத்தில் உள்ள சனியின் பார்வை உங்கள் தன ஸ்தானத்தின் மீது இருப்பதால் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். பெண்களின் பிரச்சினைகள் தீரும். பணம் கையிருப்பு அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு இருக்கும் பிரச்சினைகள் தீரும் மனக்குறைகள் நீங்கும். கணவன் மனைவி உறவில் சில உரசல்கள் வந்தாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள். விட்டுக்கொடுத்து போங்கள். வெளிநாட்டு யோகம் கிடைக்கும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வணங்கவும். லட்சுமி நரசிம்மரை வணங்க இந்த மாதம் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. சனிக்கிழமை தானம் செய்யுங்கள். விருப்பமான கடவுளை வணங்குங்கள்.

    மிதுனம்

    மிதுனம்

    புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பிரம்மாண்ட யோகம் தேடி வரப்போகுது. மிகச்சிறந்த வெற்றிகள் கைகூடி வரப்போகுது. உங்கள் ராசிக்குள் சூரியன், சுக்கிரன் ராகு மாத தொடக்கத்தில் இணைந்திருக்கின்றனர். மாத பிற்பகுதியில் சூரியனும், சுக்கிரனும் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு மாறுகின்றனர். இப்போது ராசிக்கு இரண்டாம் வீட்டில் செவ்வாய், புதன் சஞ்சாரம் உள்ளது. ராசிக்கு ஆறாம் வீட்டில் குரு, ஏழாம் வீட்டில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. ராசியில் உள்ள சுக்கிரன், சூரியன், ராகு. ராகு குழப்பத்தை கொடுத்தாலும் உற்சாகத்தை தருவார். முகப்பொலிவு ஏற்படும். உஷ்ணம் தொடர்பான நோய்கள் ஏற்படும். சனி பார்வை மிதுனத்தின் மீது விழுகிறது. கேதுவும் பார்ப்பதால் உற்சாகம் குறைவாக இருக்கும். அவசரப்பட வேண்டாம். அடிக்கடி கோபம் வரும். உணர்ச்சிவசப்பட்டு நிதானத்தை இழக்க வேண்டாம். தியானம் செய்யுங்கள். செவ்வாய் வாக்கு ஸ்தானத்தில் இரண்டாம் வீட்டில் இருப்பதால் யாருடனும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் தேடி வரும். பெரியவர்கள் ஆலோசனையுடன் எதையும் தேர்வு செய்யுங்கள். வாகன போக்குவரத்தில் கவனம், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வாய்ப்புகள் தேடி வரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பணியிட மாற்றம் கிடைக்கும் மிகச்சிறந்த வெற்றிகள் தேடி வரும் மாதம். பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உயர்பதவிகள் தேடி வரும். பிரம்மாண்ட யோகம் தேடி வரும். வார்த்தைகளில் கவனம் தேவை. மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும் வெளிநாடு சென்று படிக்கலாம். கல்விக்கடன்கள் கிடைக்கும். கண்டகச்சனி இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் தடைகள் இருக்கும் என்றாலும் கவலை வேண்டாம்.

    உங்கள் ராசியில் உள்ள சூரியன், சுக்கிரன் ராகு கூட்டணி 17ஆம் தேதிக்கு மேல் பிரிகிறது. 17ஆம் தேதி சூரியன் கடகம் ராசிக்கு நகர்ந்து செவ்வாய் உடன் இணைகிறார். சுக்கிரன் 24ஆம் தேதி முதல் புதன் செவ்வாயுடன் இணைகிறார். இந்த மாதம் லாபங்கள் கிடைக்கும். சாதனைகள் செய்யும் வாய்ப்புகள் தேடி வரும். மிகச்சிறந்த மேன்மைகள் உருவாகும் மாதம் இதுவாகும்.

    கடகம்

    கடகம்

    மனோகாரகன் சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே... ராசியில் செவ்வாய், புதன், ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், ராகு ஐந்தாம் வீட்டில் குரு ஆறாம் வீட்டில் சனி கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. 12ல் சுக்கிரன் சூரியன் இருந்தாலும் ராசி மீது குரு பார்வை விழுவதால் இந்த மாதம் முழுவதும் சுப விரையங்கள் ஏற்படும். தொழில் ஸ்தானதிபதி செவ்வாய் கடகத்தில் அமர்ந்து இருப்பது யோகம். உங்கள் ராசியில் இருப்பதால் சுய தொழில் யோகம் கூடி வரும் பிசினஸ் செய்பவர்களுக்கு புதிய சிந்தனைப் பற்றிய எண்ணம் தோன்றும்.

    காதல் விவகாரங்கள் வெற்றி பெறும். காதல் துணை மீது இந்த மாதம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். சுய தொழில் யோகம் கூடி வரும் பிசினஸ் செய்பவர்களுக்கு புதிய சிந்தனைப் பற்றிய எண்ணம் தோன்றும். முருகனை வழிபட செய்தொழில் சிறப்படையும். பொருட்களை அதிகம் வாங்கி ஸ்டாக் வைக்க வேண்டாம். ஷேர்மார்க்கெட் முதலீடுகளைத் தவிர்க்கவும். உங்களின் பணவருமானம் இருந்தாலும் நிறைய தடைகள் வரும் செலவுகளும் அதிகரிக்கும். இரண்டாம் அதிபதி சூரியன் 17ஆம் தேதிக்கு மேல் உங்கள் ராசிக்கு வரும் போது பணவருமானம் அதிகரிக்கும். சூரியன் சனி பார்க்கும் இந்த காலகட்டத்தில் கவனம். நெருங்கிய நண்பர்களின் உடல்நலனிலும் உங்க உடல்நலனிலும் அக்கறை காட்டுங்கள். கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வழிபடலாம். படிக்கும் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு தேடி வரும். வெளிநாட்டு யோகம் கைகூடி வரும். 24ஆம் தேதிக்கு மேல் சுக்கிரன் உங்க ராசிக்கு வருகிறார். யோக காலம் திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கை கூடி வரும். ஆறில் சனி, கேது ராசியில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையால் சில ஏமாற்றங்களையும் நம்பிக்கை மோசடிகளையும் சந்திக்க நேரலாம். அதிகமாக கடன் வாங்க வேண்டாம். மாத இறுதியில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை கூடவே குரு பார்வை இருக்கிறது. இந்த கால கட்டத்தில் பெண்கள் பாதுகாப்பில் கவனமாக இருங்கள். கணவன் மனைவி உறவில் கவனம் தேவை. ஆண் நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. தடைகள் நீங்க பாதிப்புகள் குறைய செவ்வாய்கிழமை கந்த சஷ்டி கவசம் படிங்க.

    சிம்மம்

    சிம்மம்

    ஜூலை மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். கடல் கடந்து செல்லும் யோகம் கைகூடி வருகிறது. இந்த மாதம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், ராகு, விரைய ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன், சுக ஸ்தானத்தில் குரு, பஞ்சம ஸ்தானத்தில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மாத பிற்பகுதியில் சூரியனும், சுக்கிரனும் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு மாறுகின்றனர். நீங்கள் நினைத்தது நிறைவேறும். செலவுகள் அதிகம் வந்தாலும் சுப செலவுகள்தான் ஏற்படும். இந்த மாதம் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் அவசரம் காட்டவேண்டாம். நிதானமாக முடிவுகளை எடுங்கள். திருமணமோ, வேலையோ எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது அவசியம். பிரச்சினைகள் சரியாகும். வேலை மாற்றம் பற்றிய தகவல்கள் வரலாம். இடமாற்றங்களும் வரும். 17ஆம் தேதிக்கு மேல் கடகத்திற்கு வந்து செவ்வாய் புதன் உடன் இணைகிறார். விரையத்தில் இருக்கும் சூரியனால் வீடு வாகனங்கள் வாங்க முதலீடுகள் செய்யலாம் ஆனால் எச்சரிக்கை தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார மேம்பாடு உற்சாகமாக இருக்கும். குருவின் பார்வை 12ஆம் வீட்டில் இணையும் செவ்வாய் புதன் மீது மாத பிற்பகுதியில் இணையும் சூரியன் சுக்கிரன் மீது விழுவதால் கடன்கள் அடைபடும். கடன்கள் அதிகம் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகம் பயன்படும்.

    இந்த மாதம் சிம்மத்திற்கு லாபங்கள் நிறைந்த மாதம். நினைத்தது நிறைவேறும். உயர்கல்வி யோகம் கூடி வருது. அசாத்திய திறமைகள் வெளிப்படும். மாணவர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் நல்ல வாய்ப்பு அமையும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

    வீடு, நிலம் வாங்குபவர்கள் அவசரப்பட்டு பணத்தில் முதலீடு செய்ய வேண்டாம். கார் வாங்குபவர்களுக்கு இது யோகமான காலம். வண்டி வாகனம் வாங்கலாம். மாத பிற்பகுதியில் மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். பெண்களுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். கடக ராசியில் சந்திரன் வீட்டில் சூரியன் மாறும் கால கட்டத்தில் செலவுகள் வந்தாலும் குருவின் பார்வை இருப்பதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். நிதானம் தேவை. திருமணம், வேலை விசயங்களில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யுங்கள். கவனமும் எச்சரிக்கையும் தேவை. சிவ ஆலயங்களில் ஞாயிறு கிழமைகளில் செந்தாமரை சாற்றி நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

    கன்னி

    கன்னி

    அறிவின் நாயகன் புதனை ராசி நாதனாகக் கொண்டவர்களே இந்த மாதம் சிரமங்களில் இருந்து நீங்கள் வெளியே வருவீர்கள். நோய்கள், கஷ்டங்கள் அலைச்சல்கள் தீரும். தடையை தாண்டும் தைரியம் வரும். பதவி உயர்வை எதிர்பார்ப்பவர்களுக்கு பதவு உயர்வு கிடைக்கும் குரு 3 சனி கேது 4ல் இருப்பதால் மறதிகள் ஏற்படும். நான்காம் வீட்டில் சனி கேது இருப்பதால் பிரச்சினைகள் ஏற்படும். மனதை கட்டுப்படுத்துங்கள் அர்த்தாஷ்டம சனியால் நோய்கள் வெளிப்படும். அதை சரி செய்ய மருத்துவ பரிசோதனை அவசியம். மாற்று மருந்து மாற்று நிவர்த்தி வழி கிடைக்கும். குரு பார்வை ஏழாம் வீட்டில் இருந்தாலும் சுக்கிரன் ராகு உடன் இருப்பதால் திருமணத்தில் தடைகள் ஏற்படும். வருமானம் பெரிதாக கிடைக்காது. ரிஸ்க் எடுக்க வேண்டாம். கன்னி ராசியைப் பொருத்தவரை அதிக மாற்றமில்லை. சுக்கிரன் அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. பத்தாம் வீட்டில் உள்ள சுக்கிரன் மாத இறுதியில் லாப ஸ்தானமான கடகத்திற்கு வருகிறார். வெளிநாடு செல்லும் யோகம் வரும். முதல் திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது திருமணம் கூடி வரும் யோகம் வருகிறது. கடகத்தில் மாத இறுதியில் சுக்கிரன் செவ்வாய் இணைவின் போது பயணங்களில் கவனம் தேவை. வாகனங்களை கவனமாக இயக்கவும். சனி மீது சூரியன் படும் நாட்களில் உங்களை நீங்களே பத்திரமா பாத்துக்கங்கள். உடல் நலத்தில் கவனிக்காவிட்டால் நரம்பு பிரச்சினை வரும். உங்க அலுவலகத்தில் வேலை பெண்களுக்கு முன்னேற்றம் வரும் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும் நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதம். மாதம் முழுவதும் பெருமாளை துளசி மாலை சாற்றி வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

    துலாம்

    துலாம்

    சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே. இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சனி மூன்றாம் வீட்டில் இரண்டாம் வீட்டில் குரு சஞ்சரிக்கிறார். ஒன்பதில் ராகு சூரியன் சுக்கிரன் பத்தில் செவ்வாய் புதன் இருப்பதால் நன்மைகள் நடைபெறும். சந்திரன் புதன் செவ்வாய் உடன் இணையும் காலத்தில் நன்மைகள் நடைபெறும். இந்த மாதம் யோகம் நிறைந்த மாதம் இந்த மாதத்தில் சுக்கிரன் பாக்கியத்தில் இருக்கிறார். சூரியன் சுக்கிரன் ராகு உடன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அதிக நன்மைகள் நடைபெறும். உங்க ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் 17ஆம் தேதி சூரியன், 24ஆம் தேதி சுக்கிரன் இணைகிறார். திருமண முயற்சி சுப செய்திகளைக் கொண்டு வரும். இந்த மாதம் நன்மை தரும் மாதம் ஐடி துறையில் இருப்பவர்கள் பிரகாசிப்பீர்கள். பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். இரண்டாம் வீட்டில் குரு இருப்பதால் படிப்பில் மிக நன்றாக கவனம் செலுத்துங்கள். இது ஒரு யோகமான நேரம். சனி பகவான் யோகாதிபதி மேன்மைகள் ஏற்படும் கால கட்டம் இதுவாகும். மருத்துவம் தொடர்பான உயர்கல்வி படிப்பவர்களுக்கு கிரகச் சூழ்நிலை சாதகமாக உள்ளது. வெளிநாடு சென்று படிக்க யோகம் கூடி வருகிறது. பணப்பிரச்சினைகள் தீரும். குழந்தைகள் குடும்பத்தில் ஒத்துழைப்பு தருவார்கள். உடன் பணிபுரிபவர்களிடம் ஜாக்கிரதையாக பேசுங்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் தேடி வரும். சிலருக்கு தோல் நோய்கள் வரும் அலர்ஜிகள் எட்டிப்பார்க்கும். பெண்களுக்கு மிகச்சிறந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த மாதம் நீங்கள் வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட நன்மைகள் நடைபெறும்.

    விருச்சிகம்

    விருச்சிகம்

    செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிகராசி நேயர்களே.. இந்த மாதம் உங்களுக்கு அற்புதமான மாதமாக அமைந்துள்ளது.

    உங்கள் ராசி நாதன் செவ்வாய் பகவான் பாக்ய ஸ்தானத்தில் இருக்கிறார். மாத பிற்பகுதியில் சூரியபகவானும் உங்க பாக்கிய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் நீசமாக இருப்பதால் உங்களுக்கு தடைகளாக இருந்தாலும் நன்மையாகவே முடியும். உடல் நலப்பிரச்சினைகள் சரியாகத் தொடங்கும். உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள் சரியாகும். வியாபார ரீதியாக இருந்த தடைகள் நீங்கும். இரண்டாம் வீட்டில் சனி கேது இருப்பதால் குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். சின்ன பிரச்சினைகள் கூட அப்புறம் பூதாகரமாக மாறி விடும். பெண்களைப் பொறுத்தவரை உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். நிறைய பணம் கிடைக்கும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். விசா தொடர்பான பிரச்சினைகள் தீரப்போகிறது. குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்துங்கள். ஜென்மகுரு தனிமையில் போராளியாய் குணத்தை கொடுக்கும். உங்கள் ராசி நாதன் மீது குரு பார்வை இருப்பதால் பிரச்சினைகள் சுமூகமாக முடியும். எட்டாம் இடத்தில் சூரியன், சுக்கிரன் ராகு சேர்க்கை சின்னச் சின்ன மன உளைச்சளை தருவார். 17ஆம் தேதி சூரியன் நகர்ந்து 9ஆம் வீட்டிற்கு நகர்வதால் பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும். மாத இறுதியில் சுக்கிரனும் உங்கள் பாக்ய ஸ்தானத்திற்கு நகர்வதால் கஷ்டங்கள் விடுபடக்கூடிய காலம் வந்து விட்டது. பிரச்சினைகளில் இருந்து முடிவு கிடைக்கும். உங்களுக்கு வரும் சோதனைகளை சந்திக்கும் பலம் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் குரு ராகவேந்திரரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

    தனுசு

    தனுசு

    குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசி நேயர்களே. இந்த மாதம் சுபமான மாதம். மகிழ்ச்சியான தருணங்கள் அதிகம் நடைபெறும் காரணம் கிரகங்களின் சஞ்சாரம் அப்படி இருக்கிறது. ஏழாவது வீட்டில் மூன்று கிரகங்கள் இருப்பதால் ஆதாயம் எதுவுமில்லை. நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை ஊட்டக்கூடியவராக குரு இருப்பார். எட்டாவது வீட்டில் இருக்கும் கிரகங்களின் மீது உங்கள் ராசிநாதன் பார்வை விழுவது சிறப்பம்சம். தனுசு அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்த உங்களுக்கு இனி நல்லது நடப்பதற்கான சூழ்நிலைகள் வரத் தொடங்கியிருக்கும். உங்கள் ராசியில சனி கேது சஞ்சரிக்கின்றனர். உங்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம். சனிபகவான் மூலம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். கிரகங்களின் சஞ்சாரத்தினால் பிரச்சினைகள் முடிவுக்கு வரக்கூடிய காலம் வந்து விட்டது. பிரச்சினைகள் முடிவுக்கு வரக்கூடிய நேரம் நெருங்கி விட்டது. சனிபகவான் மூன்றாம் பார்வையாக தைரிய ஸ்தானத்தை பார்க்கிறார். ஏழாம் வீட்டில் சுக்கிரன் இருக்கிறார். அந்த சுக்கிரனை சனி பார்வையிடுவதால் மனைவி மேலே அக்கறை தேவை. ராசியில் உள்ள சனி கேது சஞ்சாரம் வம்பு வழக்குகளை கொண்டு வரலாம். பிரிந்த உறவுகள் மீண்டும் இணையக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். நெருக்கடிகள் முடியக்கூடிய மாதமாக இந்த மாத அமையும். உங்கள் கணவர்,மனைவியின் உடல் நலத்தில் அக்கறை தேவை. நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் சிலர் உங்களை ஏமாற்றி விடுவார்கள். உங்கள் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள் என்பதால் நட்பு விசயத்திலும் எச்சரிக்கை தேவை. ஆஞ்சனேயரை வழிபட்டால் பிரம்மாண்ட வளர்ச்சி கிடைக்கும்.

     மகரம்

    மகரம்

    சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே. இந்த மாதத்தில் உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். நல்ல செய்தி எதிர்பார்த்த தகவல் வந்து சேரப்போகிறது. உங்கள் உடல் நலம் சார்ந்த விசயங்களில் கவனம் தேவை. ராசி அதிபதி சனி 12ஆம் வீட்டில் இருக்கிறார்கள். ஆறாம் வீட்டில் கிரகங்கள் சஞ்சரிப்பதால் பற்றாக்குறை இருந்துக்கொண்டே இருக்கும். சனி கேது 12ஆம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் செலவுகள் வரும். அதற்காக கடன் வாங்க வேண்டாம் திருப்பி கட்ட முடியாது. காரணம் ஆறாம் வீட்டில் கிரகங்கள் சஞ்சாரம் கூட்டணி அப்படி இருக்கிறது. செவ்வாய் ஏழாம் வீட்டில் புதன் உடன் இருக்கிறார். இதயநோய், வயிறு நோய் வாய்வு கோளாறினால் பிரச்சினைகள் ஏற்படும். ஏழரை சனி தொடங்கியுள்ளதால் கவனம் தேவை. கணவன் மனைவி உறவில் மூன்றாம் நபர்களுக்கு இடம் தரவேண்டாம். கோபப்பட வேண்டாம். ராமயாணத்தில் சுந்தரகாண்டம் படிக்கவும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். 11ஆம் இடத்தில் குரு இருப்பதால் குழந்தைகள் படிப்பு, வேலை நன்றாக இருக்கும். தொழில் நன்றாக இருக்கும். அவசரப்பட்டு கடன் வாங்க வேண்டாம். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் ரீதியான படிப்பு மாணவர்களுக்கு அமையும். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிருங்கள். மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டில் செவ்வாய் புதன் உடன் சூரியன் இணைவதால் நன்மைதான். 24ஆம் தேதிக்கு மேல் நன்மைகள் அதிகம் நடைபெறும் காலம் காரணம் சுக்கிரன் இடம்பெயர்ச்சி அடைகிறது. மாணவர்கள் பள்ளி கல்விக்காக வெளிநாடு செல்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். பணவருமானம் அதிகம் கிடைக்கும்.

    கும்பம்

    கும்பம்

    சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே. ராசி நாதன் சனி வக்ரமடைந்து கேது உடன் இணைந்திருக்கிறார். ஆறில் செவ்வாய் இருப்பதால் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். சிறு தூர பயணங்களால் சிறு காயங்கள் வரும் கவனம் தேவை. நெருங்கிய நண்பர் ஒருவர் பகையாக மாறலாம். உங்களிடம் வேலை செய்யும் வேலைக்காரர் உங்களுக்கு எதிராக மாறலாம். புதிதாக எந்த கடனும் வாங்க வேண்டாம். கடனை மைத்ர முகூர்த்த நேரத்தில் அடைக்கப் பாருங்கள். சூரியன் மிதுனத்தில் ராகு சுக்கிரன் உடன் இணைந்திருப்பதால் சிறு தடங்கல்கள் அதிகம் ஏற்படும். ஐந்தாம் வீட்டில் மூன்று கிரகங்களின் கூட்டணியால் ஒருவித மன உளைச்சல், பயம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதே நேரத்தில் வருமானமும் முன்னேற்றமும் அதிகரிக்கும். கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் 11ஆம் வீட்டில் சனி கேது இருக்கின்றனர். குரு 10ஆம் வீட்டில் இருப்பதால் வேலையில் சில பிரச்சினைகள் ஏற்படும். புதிய வேலைகள் தேட முயற்சி செய்வீர்கள். ஆறாவது வீட்டில் புதன் செவ்வாய் இருப்பதால் அந்த இடத்தில் ஏதோ பிரச்சினை ஏற்படும் என்றாலும் பத்தாவது வீட்டில் இருந்த குரு ஆறாம் வீட்டை பார்ப்பதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். உங்க பாக்யாதிபதி சுக்கிரன் ஆறாம் வீட்டில் அமரப்போகிறார். அவர் 17ஆம் தேதி ஆறாம் வீட்டில் அமரப்போவது சாதகம். கும்ப ராசிக்காரர்களுக்கு யோகமான கால கட்டம். பிசினஸ்ல இருந்த தடைகள் விலகும். நல்ல காலம் பொறந்துருச்சி என்று பாடுவீர்கள். அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்யுங்கள். பழனி, குன்றக்குடி, திருச்செந்தூர் முருகனை நீங்கள் வழிபட ஆபத்துக்கள் நீங்கும். செவ்வாய்கிழமை துவரம்பருப்பு தானம் செய்யுங்கள். நிர்வாகத்தின் கீழ் பணியாற்றுபவர்களால் தொந்தரவுகள் வரலாம். எதிரிகளால் தொந்தரவு வரும். குரு பார்வை நான்காம் வீட்டில் இருப்பதால் உயர்கல்வி யோகம் தேடி வரும். இந்த மாதம் எது நடந்தாலும் நன்மையில்தான் முடியும்.

    மீனம்

    மீனம்

    குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே. ஐந்தாம் வீட்டில் செவ்வாய் நீசமடைந்து புதனோடு இணைகிறார். 9ஆம் இடத்தில் குரு செவ்வாய் புதனை பார்வையிடுகிறார். சுக்கிரன் 4ஆம் வீட்டில் இருப்பதால் வசதிகள் அதிகரிக்கும். பாக்ய ஸ்தானத்தில் குரு இருந்தாலும் பத்தில் சனி கேது சேர்ந்திருப்பதால் சில குடைச்சல்களை உடன் வேலை செய்பவர்கள் கொடுப்பார்கள். குரு நல்ல இடத்தில் இருப்பதால் எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் அதை சமாளிக்கும் தைரியத்தை கொடுப்பார். சுப செய்திகள் தேடி வரும். சிற்பிகள், கோவில் திருப்பணிகள் தேடி வரும். படிக்கும் மாணவர்களுக்கு கல்வியில் தடைகள் இருக்கும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த அளவு மதிப்பெண் வரலையே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருப்பீர்கள். படிப்பில் கவனம் தேவை ஆறாம் இடத்து சூரியன் நான்காம் வீட்டில் இருப்பதால் குல தெய்வ வழிபாடு செய்யுங்கள். மிக மிக அவசியம். பழனி முருகனை வழிபடுங்கள் வெற்றிகளை உருவாக்கித்தரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த வேலை வாய்ப்பு கிடைக்கும். அம்மன் வழிபாடு அவசியம் தேவை. பிரச்சினைகள் தீர்ந்து நன்மைகள் நடைபெறும் சுப காரியங்கள் நிறைய நடைபெறும். சுப பயணங்கள் செய்யலாம். மொத்தத்தில் மீன ராசிக்காரர்களுக்கு மன மகிழ்ச்சியை தரக்கூடிய மாதம் ஜூலை மாதம்.

    English summary
    July 2019 monthly horoscope love, career, health and money! Find out the full predictions from Mesham to Meenam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X