For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குரு பெயர்ச்சி 2019-20: குரு சண்டாள தோஷம் என்ன செய்யும் தெரியுமா?

ஜாதகத்தில் குருவும் ராகுவும் இணைந்திருப்பது குரு சண்டாள யோகம். இதனால் குருவின் வலிமை பாதிக்கப்படும், ராகு வலிமை அடையும். இந்த கிரகங்களின் கூட்டணியால் குரு திசை குரு புத்தியில் பாதிப்பு ஏற்படும். குருவ

Google Oneindia Tamil News

சென்னை: குருபகவான் நவகிரகங்களில் சுப கிரகம். செல்வம், செல்வாக்கு, கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் என மனிதர்களுக்குத் தேவையான அததனை நன்மைகளையும் செய்பவர். எனவேதான் குரு ஒருவரின் ஜாதகத்தில் வலிமையாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். குரு ஒருவரின் ராசி அல்லது லக்னத்தைப் பார்த்தால் அது வலிமையானதாக இருக்கும். குருபகவான் வலிமையானவராக இருந்தால் அது கோடீஸ்வர யோகத்தை தரும்.

குரு பகவான் ராகு உடன் சேரும் போது குரு சண்டாள யோகத்தை ஏற்படுத்துவார் இது சிலருக்கு சாதகத்தையும் சிலருக்கு பாதகத்தையும் தரும். குரு தோஷம் நீங்க பரிகாரம் செய்வதன் மூலம் பாதிப்புகள் குறையும்.

ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவிழந்து காணப்பட்டாலும், குரு மட்டும் வலுவிழக்கக் கூடாது. எந்த ஒரு யோக ஜாதகத்திலும் லக்னத்தையோ, ராசியையோ, குறைந்த பட்சம் லக்னாதிபதியையோ குரு பார்த்தே தீருவார். அல்லது வலுப்பெற்று இருப்பார். குரு வலிமை பெற்றிருந்தால், ஒரு மனிதனை மிகப் பெரிய கோடீசுவரனாக்குவார். ஒருவருடைய ஜாதகத்தில் இவர் நல்ல அமைப்பில் அமர்ந்து குருவின் தசையும் நடக்குமானால் அவர் அளவுக்கு அதிகமான பணத்தை சம்பாதிப்பார்.

குரு கேதுவுடன் இணையும்போது ஒருவரை நல்ல நிதிநிலை கொண்டவராக மாற்றுவார். இதனால் கேள யோகம் உருவாகும். கேதுவுடன் இணையும் குருநன்மை செய்வார். குருவிற்கு கேது பிடித்தவர். அடுத்த மாதத்தில் பெயர்சியடையும் குரு கேது சனியோடு தனுசு ராசியில் இணையப்போகிறார்.

பாம்பு கிரகங்களுடன் குரு இணையும் போது பலவித நன்மைகளையும். சில தீமைகளையும் தருவார்.

குருவினால் யோகங்கள்

குருவினால் யோகங்கள்

ஜோதிடத்தில் சுப கிரகங்களின் வரிசையில் குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், புதன் ஆகிய நான்கு கிரகங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.அவர்களில் நற்பலன்களைத் தருவதில் குரு முதன்மையானவர். தன காரகன், புத்திர காரகன் என்று அழைக்கப்படும் இவரே ஒரு மனிதன் சம்பாதிக்கும் பணத்துக்கும், அவனுடைய குழந்தைகளின் நலனுக்கும் காரணமான கிரகம். ஒரு மனிதன் பிறந்ததன் அடிப்படை நோக்கமான வம்ச விருத்திக்கு ஆதாரமான கிரகம். இப்படி பல நன்மைகளை தருவதால்தான் குரு சுப கிரகங்களின் வரிசையில் முதலில் வைக்கப்பட்டுள்ளார்.

குரு பாதிப்பு

குரு பாதிப்பு

குரு பகவான் ஜாதகத்தில் வலிமை இழந்து இருந்தாலோ ஜாதகத்தில், குரு நீசமாகவோ, பகை பெற்றோ இருந்தால், அத்தகைய ஜாதகர்கள் பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. காரணம் குரு பாதிக்கப்பட்டால் கல்வியில் பாதிப்பு ஏற்படும், திருமணம், குழந்தை பாக்கியத்தில் தடை ஏற்படும்.

குரு உடன் இணையும் சந்திரன்

குரு உடன் இணையும் சந்திரன்

குருவின் நட்பு கிரகங்களின் சந்திரன் முதன்மையானவர். சந்திரனும், குருவும் ஒருவருக்கொருவர் நேரெதிர் நிலைகளில் இருந்து சம சப்தமமாக பரிமாறிக் கொள்ளும்போது, இருவருமே வலிமையைப் பெறுவார்கள். சந்திரனுக்கு ஏழில் குரு இருப்பது இருவருக்கும் உன்னதமான நிலை. இதே போல ஒன்பது, ஐந்து ஆகிய இடங்களில் குரு வலிமையாக இருந்து ராசியில் இருக்கும் சந்திரனை பார்க்கும் போது அது யோகத்தைக் கொடுக்கும்.

செல்வ வளம் தரும் குரு

செல்வ வளம் தரும் குரு

குரு, தவம், ஞானம், மந்திர சித்தி, மகான்கள், நிதி, நீதி, மதம், சமய கோட்பாடுகள், தர்ம சிந்தனை, ஒழுக்கம் ஆகியவற்றிர்க்கு காரகர். கேது மந்திரம், ஞானம், மதம், குரு ஸ்தானம், வேதாந்த விஷயங்கள், துறவு, பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், அருள் வாக்கு, தர்ம ஸ்தாபனங்கள் உள்ளிட்ட பல உயர் நெறிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருப்பார்.

ராஜயோகம் தரும் கிரக கூட்டணி

ராஜயோகம் தரும் கிரக கூட்டணி

குரு-கேது ஒரே ராசியில் சேர்ந்து இருந்து அந்த குருவிற்கு ஒன்பதாவது ராசியில் புதன் அல்லது சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகர் பிறப்பிலேயே நல்ல ஐஸ்வர்ய அந்தஸ்துள்ள குடும்பத்தில் பிறப்பார் அல்லது குரு-கேது தசா காலங்களில் கோடீஸ்வர ராஜயோகத்தை அனுபவிப்பார். ஜோதிடம், சாஸ்திர ஆராய்ச்சி ஆகியவற்றில் சிறப்பு நிலை அடைவார். கதாகலாட்சேபம், சொற்பொழிவு ஆகியவற்றில் புகழ் அடையச் செய்வார்.

குரு ராகு கூட்டணி

குரு ராகு கூட்டணி

ராகுவுடன் சேரும் குரு இணையும் தூரத்தையும், ராசியையும் பொருத்து தன் வலிமையை ராகுவிடம் பறி கொடுப்பார் என்பதால் குருவிற்கு ராகு ஆகாதவர். ராகு உடன் கூட்டணி சேரு குரு ராகுவிற்கு வலிமை கொடுப்பதால் குரு சண்டாள யோகம் என்று சொல்லப் படுகிறது. இந்த கூட்டணி இருக்கும் இடத்தைப் பொருத்து அந்த பாவகம் பாதிக்கப்படும். இரண்டாம் வீட்டில் குரு ராகு கூட்டணி இருந்தால் நிதி நிலை பற்றாக்குறை ஏற்படும். நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் குரு ராகு கூட்டணி இருந்தால் அம்மாவின் உடல் நிலை பாதிக்கப்படும்.

வண்டி வாகன சேர்க்கை

வண்டி வாகன சேர்க்கை

ராகு இருக்கும் இடத்தைப் பொருத்து அவரது திசையில் நன்மை செய்வார். அதேபோல வலிமையான குரு நிறைய நல்லது செய்வார். தசாபுத்தியில் ராகு திசைக்கு அடுத்தது குரு திசை வருகிறது. ராகுவும் குருவும் இணைந்திருக்கும் போது சிலருக்கு வண்டி வாகன சேர்க்கையை அள்ளிக்கொடுப்பார். பொன் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.

பலன் தரும் பரிகாரங்கள்

பலன் தரும் பரிகாரங்கள்

ஜாதகத்தில் குருபகவான் வலிமை குன்றியிருந்தாலோ களத்திர ஸ்தானம், புத்திர ஸ்தானத்தில் பாம்பு கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலோ அது தடை தாமதம் எற்படும். தடைகள் விலக குரு பரிகார தலங்களுக்கு சென்று அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபடலாம். அதே போல ஆலங்குடி குருபகவான், திட்டை குருபகவான், பாடி திருவலிதாயம் குருபகவான், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்தி ஆகியோரை வணங்கலாம்.

குரு தோஷம் நீங்கும் யாகம்

குரு தோஷம் நீங்கும் யாகம்

குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் சாதகமற்ற வீட்டில் காணப்படுவது குரு தோஷத்துக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக ஏற்படும் எதிர்மறை விளைவுகள் ஏற்படும். குரு கிரக சாந்தி ஹோமம் செய்வதன் மூலம் தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளம் கிடைக்கும். தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் இந்த ஹோமத்தில் நெய், தேன், நவசமித்துக்கள், மஞ்சள் நிற வஸ்திரங்கள், மூக்கடலை, நவதானியங்கள், மஞ்சள் நிற புஷ்பங்கள், பழங்கள், விசேஷ நிவேதனங்கள், மூலிகைகள் சமர்பிக்கபட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்திக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி போன்ற பஞ்ச திரவிய

English summary
Guru or Jupiter is the most auspicious planets that rules wisdom, education, kids, knowledge, treasury and wealth.Hence, Guru must be powerful in the birth chart to have knowledge, education, kids and wealth. If the planet Guru conjoined with the malefic Rahu and Ketu, Guru Chandal Yoga happens.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X