For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடன் தொல்லை தீர்த்து கஷ்டக்களைப் போக்கும் காலபைரவர்- செவ்வாய்கிழமை தேய்பிறை அஷ்டமி விரதம்

தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். நாளைய தினம் காலபைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி வணங்க கடன் தொல்லைகளும் கஷ்டங்களும் நீங்கும்.

Google Oneindia Tamil News

சென்னை: தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். நாளைய தினம் தேய்பிறை அஷ்டமி வருவதால் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். கால பைரவரை சரணடைந்தார் கஷ்டங்கள் நீங்கி மனஅமைதி பெருகுவதோடு, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செல்வ வளம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் தடைகள் நீங்கி சிறப்பான முறையில் நடைபெறும்.

கலியுகத்துக்கு காலபைரவர் என்பது முதுமொழி. அஷ்டமி பைரவ மூர்த்திக்கான நன்னாள். அஷ்டமி நாளில் கலியுகத்தின் தெய்வமான பைரவரை வணங்கி வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும். சித்திரை மாதம் பரணி, ஐப்பசி மாத பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்தக் கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார்.

நன்மை தரும் அஷ்டமி வழிபாடு

நன்மை தரும் அஷ்டமி வழிபாடு

அஷ்டமியில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்பார்கள். ஆனால் நாளைய தினம் செவ்வாய்கிழமை தேய்பிறை அஷ்டமி நாளாகும். கால பைரவருக்கு சிவப்பு நிற ஆடை சாற்றி, செவ்வரளி மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்யங்கள் கூடிவரும்.

பில்லி சூனியம்

பில்லி சூனியம்

பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எவரொருவர் தேய்பிறை அஷ்டமி தோறும் பைரவ பகவானை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். பில்லி, சூனியம் அகலும். வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்.

எமபயம் அகலும்

எமபயம் அகலும்

சனி பகவானின் இன்னல்களில் இருந்து நாம் விடுபட வேண்டுமெனில், பைரவரை வணங்கி தப்பித்துக் கொள்ளலாம். பைரவரை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். எம பயம் அகலும். பைரவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

செவ்வரளி மாலை

செவ்வரளி மாலை

பைரவருக்கு வடைமாலை சார்த்தி வணங்குவார்கள் பக்தர்கள். மிளகு வடை நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். செந்நிற மலர்கள், அரளி மாலை கொண்டு பைரவருக்கு அணிவித்து பிரார்த்தனை செய்யுங்கள். வெண் பொங்கல் நைவேத்தியம் வழங்கி, பைரவ வழிபாடு செய்தால், கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்ப்புகள் அகலும். தீய சக்திகள் அண்டாது.

 கடன் தொல்லை நீங்கும்

கடன் தொல்லை நீங்கும்

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என கம்பர் ராமாயணத்தில் கடன் தொல்லையை உவமையாக சொல்லியிருக்கிறார். கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். நிம்மதியாக சென்றுகொண்டிருக்கும் வாழ்கையில் பணத்தேவையால் வரும் துன்பங்களில் கடன் தொல்லைதான் மிகபெரிய பிரச்சனையாக அமையக்கூடியது. ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாம் இடம் என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம். கடன், வியாதி, எதிர் ஸ்தானமாகும். இந்த ஆறாம் இடமும், ஆறாம் அதிபதியும், அவருடன் சேர்ந்த கிரகங்களும், பார்க்கும் கிரகங்களும், ஒருவருக்கு கடன் தொல்லைகளை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் செவ்வாய்கிழமை வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வணங்கி வழிபட கடன் பிரச்சினைகள் தீரும்.

வேலையில் முன்னேற்றம்

வேலையில் முன்னேற்றம்

தேய்பிறை அஷ்டமி நாளில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபடுவதால் நினைத்த காரியம் வெற்றி பெரும். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப்புஷ்பம் சாற்றி வணங்க நல்ல குழந்தைச் செல்வம் கிடைக்கும். பைரவரை வழிபட்டால் தொழிலில் லாபம், பதவி உயர்வு மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றமும் கிடைக்கும்.

செவ்வாய்கிழமை கடன் அடைக்கலாம்

செவ்வாய்கிழமை கடன் அடைக்கலாம்

ஒருவர் ஜாதகத்தில் குரு கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியில் அல்லது ஜாதக ஆறாம் பாவத்தில் கோச்சார ரீதியாக பயணம் செய்யும்போது கடன் வாங்க கூடாது. குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். எனவே ஆறாம் பாவத்தில் நிற்கும் போது கடனை வளர்த்திடுவார். குரு ஸர்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்க்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடன அடைக்கவோ முயற்சி செய்ய கூடாது. ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது. சந்திரபலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்க கூடாது. முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. மாற்றாக செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் கடன் அடைப்பது சிறந்ததாகும்.

வெற்றி கிடைக்கும்

வெற்றி கிடைக்கும்

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறும். ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தன செழிப்பை தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.

English summary
Bhairava is Lord Shiva in His Fiercest Manifestation. It may be worth mentioning that Shiva is different from Rudra, which is yet another manifestation of Shiva.One who worships Kala Bhairavar on Ashtami Thithi will be freed from all debts and loans.Tantric and anyone who seeking divine power to tackle problems that seems to have no solutions, surrender to Kala Bhairava. He can solve most of the problems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X