For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பைவர ஜென்மாஷ்டமி - காலபைரவாஷ்டமி நாளில் 64 சிவ அவதாரங்களை அறிந்து கொள்வோம்

பைரவர் எட்டு வகை பணிகளை எண் திசைகளிலும் ஏற்கும்போது அவர் அஷ்ட பைரவர்களாகத் தோற்றம் தருகின்றனர் எனவும், அவரே அறுபத்து நான்கு காலங்களிலும் அறுபத்து நான்கு பணிகளை ஏற்றுச் செயல்படும்போது அறுபத்து நான்கு வ

Google Oneindia Tamil News

சென்னை: காலபைரவர், சிவபெருமானின் ருத்திர ரூபம் . முதலில் தோன்றிய பைரவர் சொர்ண பைரவரே ஆவார். ஒரு வடிவம் பின்பு 8 பைரவர்களாக மாறியது. பின்னர் 8 பைரவ வடிவங்கள் ஒவ்வொன்றும் 8 வடிவங்களாக மாறி 64 பைரவர்களாக வெளிப்பட்டனர். பைரவர் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர்.

பைரவர் நவகிரகங்களில் சனியின் குருவாகக் கருதப்படுபவர். எனவேதான் பைரவரை வழிபடுவதன் மூலம் சனியின் சங்கட பார்வையால் ஏற்படும் கெடுபலன்களை நற்பலன்களாக மாற்றிவிட முடியும். பைரவரின் தலையில் மேஷ ராசியும், வாய் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுன ராசியும், மார்பில் கடக ராசியும், வயிற்றில் சிம்மம் ராசியும், இடையில் கன்னி ராசியும், புட்டத்தில் துலாம் ராசியும், பிறப்பு உறுப்பில் விருச்சிக ராசியும், தொடையில் தனுசு ராசியும், முழங்கால்களில் மகர ராசியும், காலில் கீழ்பகுதி கும்ப ராசியும், காலின் அடியில் மீன ராசியும் அமைந்துள்ளன.

kalabhairavashtami 2019 64 Bhaivar Names and importance

நாளைய தினம் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி காலபைரவாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. பைரவர் அவதாரதினமாக கொண்டாடப்படும் இந்த நாளில் பல கோவில்களில் சிறப்பு யாகங்கள், பூஜைகள் செய்யப்பட உள்ளன. செங்கல்பட்டை அடுத்த திருவடிச்சூலம் சாலை, ஈச்சங்கரணை ஸ்ரீ பைரவா் நகரில் உள்ள ஸ்ரீ மஹா பைரவா் கோயிலில் வரும் செவ்வாய்க்கிழமை பைரவா் ஜெயந்தியையொட்டி ஜென்மாஷ்டமி பெருவிழா நடைபெறுகிறது. ஸ்ரீ லட்சுமியந்திர பீடம், அன்னவாகனம், காளை வாகனம், கண் திறப்பு மற்றும் ஸ்ரீ மஹா செல்வகணபதி கலசாபிஷேக திருவிழாவும் நடைபெறுகிறது.

kalabhairavashtami 2019 64 Bhaivar Names and importance

நாளைய தினம் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6.30க்கு மஹா அபிஷேகம், மஹாதீபாராதனை, உற்சவ மூா்த்தி பைரவருக்கு அபிஷேகம் தீபாராதனை, மதியம் அன்னதானம், மாலை 3.30க்கு பைரவா் ஹோமம், 4.30க்கு அஷ்டமியின் சிறப்பு பூஜைகளுடன் அபிஷேகம், 5.30க்கு சோடசோபாசார விளக்கு மஹா தீபாராதனையும், 6 மணிக்குமேல் பைரவா் மூா்த்தி அலங்காரத்துடன் மாடவீதி உலா நடைபெறுகிறது.

kalabhairavashtami 2019 64 Bhaivar Names and importance

பைரவ ஜெயந்தி நாளில் 64 பைரவர்களின் பெயர்களை காணலாம். காலபைரவர், சிவபெருமானின் ருத்திர ரூபம் . முதலில் தோன்றிய பைரவர் சொர்ண பைரவரே ஆவார். ஒரு வடிவம் பின்பு 8 பைரவர்களாக மாறியது. பின்னர் 8 பைரவ வடிவங்கள் ஒவ்வொன்றும் 8 வடிவங்களாக மாறி 64 பைரவர்களாக வெளிப்பட்டனர். கங்கைக் கரையில் 64 கட்டங்களில் 64 பைரவர்கள் உள்ளனர்.

1.நீலகண்ட பைரவர்
2.விசாலாட்சி பைரவர்
3.மார்த்தாண்ட பைரவர்
4.முண்டனப் பிரபு பைரவர்
5.ஸ்வஸ்சந்த பைரவர்
6.அதிசந்துஷ்ட பைரவர்
7.கேர பைரவர்
8.சம்ஹார பைரவர்
9.விஸ்வரூப பைரவர்
10.நானாரூப பைரவர்
11.பரம பைரவர்
12.தண்டகர்ண பைரவர்
13.ஸ்தாபாத்ர பைரவர்
14.சீரீட பைரவர்
15.உன்மத்த பைரவர்
16.மேகநாத பைரவர்
17.மனோவேக பைரவர்
18.சேத்ர பாலக பைரவர்
19.விருபாச பைரவர்
20.கராள பைரவர்
21.நிர்பய பைரவர்
22.ஆகர்ஷ்ண பைரவர்
23.ப்ரேசத பைரவர்
24.லோகபால பைரவர்
25.கதாதர பைரவர்
26.வஞ்ரஹஸ்த பைரவர்
27.மகாகால பைரவர்
28.பிரகண்ட பைரவர்
29.ப்ரளய பைரவர்
30.அந்தக பைரவர்
31.பூமிகர்ப்ப பைரவர்
32.பீஷ்ண பைரவர்
33.சம்கார பைரவர்
34.குலபால பைரவர்
35.ருண்டமாலா பைரவர்
36.ரத்தாங்க பைரவர்
37.பிங்களேஷ்ண பைரவர்
38.அப்ரரூப பைரவர்
39.தாரபாலன பைரவர்
40.ப்ரஜா பாலன பைரவர்
41.குல பைரவர்
42.மந்திர நாயக பைரவர்
43.ருத்ர பைரவர்
44.பிதாமக பைரவர்
45.விஷ்ணு பைரவர்
46.வடுகநாத பைரவர்
47.கபால பைரவர்
48.பூதவேதாள பைரவர்
49.த்ரிநேத்ர பைரவர்
50.திரிபுராந்தக பைரவர்
51.வரத பைரவர்
52.பர்வத வாகனே பைரவர்
53.சசிவாகன பைரவர்
54.கபால பூஷண பைரவர்
55.சர்வவெத பைரவர்
56.ஈசான பைரவர்
57.சர்வபூத பைரவர்
58.சர்வபூத பைரவர்
59.கோரநாத பைரவர்
60.பயங்க பைரவர்
61.புத்திமுக்தி பயப்த பைரவர்
62.காலாக்னி பைரவர்
63.மகாரௌத்ர பைரவர்
64.தட்சணா பிஸ்தித பைரவர்

கால பைரவர்க்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு. ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. தேய்பிறை அஷ்டமி விரதம் தொடங்குபவர்கள். மார்கழி மாதத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். மார்கழி தேய்பிறை அஷ்டமி- சங்கராஷ்டமி, தை தேய்பிறை அஷ்டமி- தேவ தேவாஷ்டமி, மாசி தேய்பிறை அஷ்டமி- மகேஸ்வராஷ்டமி, பங்குனி தேய்பிறை அஷ்டமி- திரியம்பகாஷ்டமி, சித்திரை தேய்பிறை அஷ்டமி- ஸ்நாதனாஷ்டமி, வைகாசி தேய்பிறை அஷ்டமி- சதாசிவாஷ்டமி, ஆனி தேய்பிறை அஷ்டமி- பகவதாஷ்டமி, ஆடி தேய்பிறை அஷ்டமி- நீலகண்டாஷ்டமி, ஆவணி தேய்பிறை அஷ்டமி- ஸ்தானுஷ்டமி,புரட்டாசி தேய்பிறை அஷ்டமி- ஜம்புகாஷ்டமி, ஐப்பசி தேய்பிறை அஷ்டமி- ஈசானசிவாஷ்டமி, கார்த்திகை தேய்பிறை அஷ்டமி- ருத்ராஷ்டமி. பல்வேறு சிறப்பு வாய்ந்த தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவரை மட்டுமல்ல தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.

English summary
Kalabhairav Jayanti observes on Tuesday, 19 November.Kala Bhairava is one of the vehement Manifestations of Lord Shiva. Kalashtami is an important day for Lord Shiva followers. On this day devotees get up before sunrise and take an early bath.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X