For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீய சக்தியை விரட்டும் கால பைரவரின் தேவ கணங்கள் வெண் கடுகு - ஒற்றுமையை அதிகரிக்கும்

வெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது கடவுள் தன்மையைக் கொண்டது. அது தேவ கணம் ஆகும். வெண் கடுகை குறித்த ஒரு கதையைப் படியுங்கள்.

Google Oneindia Tamil News

மதுரை: தீய சக்திகளை அடியோடு விரட்டும் சக்தி வெண் கடுகுக்கு உண்டு. வெண் கடுகை வீட்டின் அனைத்து தூவி அடுத்து 24 மணி நேரம் வீட்டை பெருக்காமல் அப்படியே வைத்திருந்து, அதன் பின்பு வெண் கடுகை பெருக்கி எடுத்து, ஒரு துணியில் முடிந்துவைத்து, மூன்று வழிகள் கூடும் முச்சந்தியில் போட்டு விடலாம். பின்பு தண்ணீரில் விபூதியை கலந்து வீட்டின் அனைத்து இடங்களிலும் தெளித்து விடலாம். இதனால் நம்முடைய அனைத்து எதிரிகளும் காணாமல் போய்விடுவார்கள் என்பது உறுதி.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. அது வெண் கடுகு விஷயத்திற்கும் பொருந்தும். வெண் கடுகு சாமான்யமான பொருள் கிடையாது. அது தெய்வீக தன்மையை உடையதாகும். அதுமட்டுமல்ல, அது கால பைரவரின் தேவகணமாகவும் விளங்குகிறது. இதில் தான் பைரவர் குடிகொண்டுள்ளார்.

பொதுவாக வீடுகளில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அப்படி செய்தால் நமது வீட்டை துஷ்ட சக்திகள் அண்டாது என்பது ஐதீகம். அது போலவே சாம்பிராணியுடன் வெண் கடுகு சேர்த்து தூபம் போட்டு அந்த புகையை நம்முடைய வீட்டு பூஜையறை உள்ளிட்ட அனைத்து அறைகளிலும் பரவச் செய்தால் தீய சக்திகள் ஓடிவடும் என்பது உண்மை.

ஈசன் அவதாரம்

ஈசன் அவதாரம்

கலியுகத்துக்கு கால பைரவர் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. கால பைரவர் எம்பெருமான் ஈசனின் அவதாரமாகவே கருதி இந்துக்கள் வழிபட்டுவருகின்றனர். அனைத்து சிவாலயங்களிலும் பரிவார தெய்வங்களுக்கும் தனித்தனியாக சந்நிதிகள் இருப்பது போல், கால பைரவருக்கும் தனி சந்நிதி அமைந்துள்ளது.

காவல் தெய்வம் கால பைரவர்

காவல் தெய்வம் கால பைரவர்

கால பைரவர் சந்நிதி சிவாலயங்களில் வடகிழக்கு மூலையில் நவகிரக சந்நிதிக்கு அருகில் அமைந்திருக்கும் என்பது கோவிலுக்கு செல்லும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சிவன் கோவில்களில் இரவு பூஜை முடிந்த பின்பு அனைத்து சந்நிதிகளையும் பூட்டி சாவிகளை கால பைரவரின் காலடியில் வைத்து பூட்டி விடுவார்கள். மறுநாள் காலையில் மீண்டும் கோவிலை திறக்கும்போது காலபைரவரை பூஜித்து பின்பு சாவியை எடுத்து அனைத்து சந்நிதிகளையும் திறந்து பூஜையை ஆரம்பிப்பார்கள். கால பைரவருக்கு தினசரி பூஜை நடைபெற்றாலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினத்திலும், ராகு காலத்திலும் பூஜை செய்வது சிறப்பானது.

காக்கும் கடவுள்

காக்கும் கடவுள்

அதிலும் கால பைரவருக்கு மிகவும் உகந்த, அவருடைய ஜென்ம நட்சத்திர நாளான இன்று கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியன்று பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற கால பைரவரை வணங்குவதுண்டு. கால பைரவருக்கு பிடித்தமான செவ்வரளி மலர்களை சாற்றி பணிந்து வணங்கினால், விரைவில் கடன் பிரச்சனை தீரும். உடமைகள் களவு போகாது என்பது ஐதீகம்.

மிளகு சாதம்

மிளகு சாதம்

நவம்பர் 19ஆம் தேதியான இன்று கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை போன்றவற்றை பக்தர்கள் செய்து வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தவாரு பைரவருக்கு நைவேத்தியம் செய்து வழிபட்டு வருகின்றனர். பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் எதிரிகள் காணாமல் போய்விடுவார்கள்.

வெண்கடுகு தூபம்

வெண்கடுகு தூபம்

பைரவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பொருட்களைக் கொண்டு நைவேத்தியம் செய்து வழிபட்டால் ஒவ்வொரு விதமான பலன்கள் நமக்கு கிடைக்கும். அதே போல் நமது வீட்டில், பைரவருக்கு மிகவும் பிடித்தமான வெண் கடுகு போட்டு புகை பிடித்தால், வீட்டைச் சுற்றியுள்ள தீய சக்திகள் ஒட்டம் பிடிக்கும் என்பதோடு நம்மிடம் உள்ள தீய எண்ணங்களும் நம்மை விட்டு விலகும் என்பதும் ஐதீகம். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. அது வெண் கடுகு விஷயத்திற்கும் பொருந்தும். வெண் கடுகு சாமான்யமான பொருள் கிடையாது. அது தெய்வீக தன்மையை உடையதாகும். அதுமட்டுமல்ல, அது கால பைரவரின் தேவகணமாகவும் விளங்குகிறது. இதில் தான் பைரவர் குடிகொண்டுள்ளார்.

தீய சக்திகள் விலகும்

தீய சக்திகள் விலகும்

பொதுவாக வீடுகளில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அப்படி செய்தால் நமது வீட்டை துஷ்ட சக்திகள் அண்டாது என்பது ஐதீகம். அது போலவே சாம்பிராணியுடன் வெண் கடுகு சேர்த்து தூபம் போட்டு அந்த புகையை நம்முடைய வீட்டு பூஜையறை உள்ளிட்ட அனைத்து அறைகளிலும் பரவச் செய்தால் தீய சக்திகள் ஓடிவடும் என்பது உண்மை. பெரும்பாலான வீடுகளில் நடக்கும் பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பது வீட்டில் உள்ளவர்களிடம் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் தான். இவை தானாக உருவாவதில்லை. அவற்றை தூண்டிவிடுவதே நம்முடைய வீட்டை சுற்றியிருக்கும் தீயசக்திகள் தான். இவைகள் தான் நம்முடைய மனதில் தீய எண்ணங்களை தூண்டிவிட்டு பிரச்சனையை ஏற்படுத்துகின்றன.

எதிரிகள் தொல்லை நீங்கும்

எதிரிகள் தொல்லை நீங்கும்

தீய சக்திகளை அடியோடு விரட்டும் சக்தி வெண் கடுகுக்கு உண்டு. எனவே, தினந்தோறும் வெண் கடுகை வீட்டின் அனைத்து தூவி அடுத்து 24 மணி நேரம் வீட்டை பெருக்காமல் அப்படியே வைத்திருந்து, அதன் பின்பு வெண் கடுகை பெருக்கி எடுத்து, ஒரு துணியில் முடிந்துவைத்து, மூன்று வழிகள் கூடும் முச்சந்தியில் போட்டு விடலாம். பின்பு தண்ணீரில் விபூதியை கலந்து வீட்டின் அனைத்து இடங்களிலும் தெளித்து விடலாம். இதனால் நம்முடைய அனைத்து எதிரிகளும் காணாமல் போய்விடுவார்கள் என்பது உறுதி.

கணவன் மனைவி ஒற்றுமை

கணவன் மனைவி ஒற்றுமை

அதே போல் பிரிந்து சென்ற குடும்ப உறவுகள் மீண்டும் ஒன்று சேர்வதற்கும் வெண் கடுகு உதவுகிறது. வீட்டில் சாம்பிராணி போடும்போது, அதனோடு, சிறிதளவு குங்கிலியத்தையும், வெண் கடுகையும் சேர்த்து சாம்பிராணி தூபத்தை வீடு முழுவதும் பரவவிட்டு, பின்பு பூஜையறையில் வைத்து, அத்துடன் சிறிது ஏலக்காயை பொடி செய்து தூபத்தில் தூவி விட்டால், வீடு முழுவதும் வெண்கடுகின் மணம் சூழ்ந்து வீட்டில் அமைதி தவழ ஆரம்பிக்கும். இதை தினந்தோறும் வீட்டில் செய்து வந்தால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து வீட்டில் அமைதி நிலவுவதோடு, செல்வ வளமும் பெருகும்.எனவே, பைரவர் ஜெயந்தி தினமான இன்றைக்கு வீட்டில் வெண்கடுகு உபயோகித்து சாம்பிராணி தூபம் ஏற்றி வழிபட்டு தீய சக்திகளை விரட்டிடுவோம்.

English summary
White mustard has the power to ward off evil forces. After all, the spraying of the white mustard house remains intact for 24 hours, after which the white mustard can be amplified, wrapped in a cloth and placed in a three-way intersection. White mustard is an herb. As the covering on the gross body is removed upon casting off the evil-eye the body becomes light and numbness of the body too reduces.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X