For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாசக யோகம் போக்கும் கபாலீஸ்வரர் பிக்ஷாடனர் தரிசனம்

மயிலாப்பூர் பங்குனி பெருவிழாவில் இன்று கபாலீஸ்வரர் பிக்ஷாடனார் கோலத்தில் காட்சியளித்தார். இதை தரிசனம் செய்வது பல நன்மைகளை தரும்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: ஒருவரின் ஜாதகத்தில் யாசக யோகம் இருந்தால் அவர் பிச்சை எடுத்து தான் சாப்பிடுவார்கள்.6, 8 ,12,இல் லக்னாதிபதி இருந்தால் நாடு முழுவதும் திரித்து பிச்சை எடுத்து சாப்பிடுவார்கள். சிவபெருமானே யாசகம் எடுத்து சாப்பிட்டார் என்பதை உணர்த்தவே பிக்ஷாடனால் கோலத்தில் இறைவன் காட்சியளிக்கிறார்.

ஜோதிடத்தில் சூரியனையும் சந்திரனையும் ராஜ கிரகங்கள் என சிறப்பித்து போற்றப்படுகிறது. மேலும் சூரியனை ஆதம காரகன் மற்றும் பித்ரு காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். சந்திரனை மனோ காரகன் என்றும் மாத்ரு காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

சூரியனும் சந்திரனும் ஒரு ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால்தான் அனைத்து நல்ல பலன்களும் ஜாதகர் அனுபவிக்க முடியும்

Kapaleeswarar Pichadanar Dharisanam

சந்திரன் முக்கியத்துவம்

ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன். சந்திரனை "சந்திரமா மனஸோ ஜாத:" வேதம் போற்றுகிறது. இவரே உடலுக்கு காரகன். அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும் தேய்ந்தும் நமக்கு காட்சி கொடுப்பவர் 'சர்வம் சந்திர கலாபிதம்' என்று சந்திரனை ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

ராசி, நட்சத்திரம்

லக்னத்துக்கு அடுத்தபடியாக முக்கியம் வாய்ந்தது ராசி. ஜோதிடம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எடுத்தவுடன் கேட்கும் கேள்வி 'நீங்கள் என்ன நட்சத்திரம், என்ன ராசி?' என்பது. எந்த நட்சத்திர தினத்தன்று நாம் பிறந்தோமோ, அது நமது ஜென்ம நட்சத்திரம். அந்த நட்சத்திரத்துக்கான ராசி ஜென்மராசி அல்லது ஜனன ராசி. இந்த ராசியின் அடிப்படையிலேயே யோகங்கள் உண்டாகின்றன.

Kapaleeswarar Pichadanar Dharisanam

சூரியன், சந்திரன்

அதுபோல குருபலம், ஏழரை சனி, அஷ்டம சனி கண்டசனி ஆகிய கோசார பலன்கள் சந்திரனை பிரதானமாக வைத்து நடக்கின்றன. எல்லா திதிகளிலும் சந்திர, சூரியன் ஆளுமை இருக்கும் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும் காலம் அமாவாசை. சூரியனுக்கு 7ம் இடத்தில் சந்திரன் இருக்கும்போது பவுர்ணமி.

யோகங்கள்

அமாவாசை யோகம், பவுர்ணமி யோகம், கஜகேசரி யோகம், சகடை யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம், சந்திராதி யோகம் என்று பலவகையான யோகங்களை தருபவர் சந்திரன். நமது ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் நல்ல யோக பலன்கள் உண்டாகும். சந்திரன் மாதுர்காரகன், அதாவது, தாயின் பலம், நிலைமை குறித்து அறிய முடியும். சந்திரன் மனோகாரகனும்கூட, அதாவது மனதை ஆள்பவன்.

Kapaleeswarar Pichadanar Dharisanam

குரு சந்திர யோகம்:

சந்திரனால் ஏற்படும் சுப யோகங்களில் முக்கியமானது குரு சந்திர யோகமாகும் சந்திரனுடன் குரு சேர்ந்திருப்பது, குரு சந்திர யோகம் ஆகும். பொன், நவரத்தினங்கள் போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஆன்மிகத்தில் புகழுடன் திகழ்வர். இவரைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களுக்கு உதவிகரமாகவே இருப்பர். இவர்களுக்குப் பெரும்பாலும் ஆண் குழந்தைகளே பிறக்கும். கோயில் கட்டுதல், பொதுநலப் பணிகள் போன்றவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடுவர்.

யாசக யோகம்:

சந்திரன் குரு மற்றும் சனியுடன் அசுப சேர்க்கை பெற்று ஏற்படும் யோகம் யாசக யோகம் எனம்படும். லக்னத்தில் சந்திரன் நின்று சனி கேந்திரத்தில் இருக்க,குரு 12 இல் இருக்க யாசக யோகம் உண்டாகும். இந்த அமைப்பு உடையவர்கள் பிச்சை எடுத்து தான் சாப்பிடுவார்கள். 6, 8 ,12,இல் லக்னாதிபதி இருந்தால் நாடு முழுவதும் திரித்து பிச்சை எடுத்து சாப்பிடுவார்கள்.

Kapaleeswarar Pichadanar Dharisanam

துறவு வாழ்க்கை

யாசக யோகம் என்பது துறவு வாழ்கை வாழ்பவர்களுக்கு மிக உன்னத யோகமாகும். ஆதி சங்கரர் உலக நன்மைக்காக பிச்சை எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இல்லற வாசிகளுக்கு இந்த யோகம் சிறப்பல்ல. யாரும் விரும்ப மாட்டார்கள்.

குரு உபதேசம்

இன்றைய கோசாரத்தில் குரு வீட்டில் புதன் சாரம் பெற்று நிற்கும் சூரியனும் புதன் வீட்டில் சுய சாரத்தில் குருவுடன் இணைந்து நின்று பௌர்ணமி யோகத்தோடு குரு சந்திர யோகமும் பெற்ற சந்திர பலம் பெற்ற நாளில் பல நற்காரியங்கள் மற்றும் குருவிடம் உபதேசம் பெறுவது சிறந்ததாகும்.

கபாலீஸ்வரர் தரிசனம்

மேலும் உலக நன்மைக்காகவும் தாருகா வன முனிவர்களின் கர்வத்தை அடக்கவும் குபேரனுக்கே செல்வமளிக்கும் சிவ பெருமான் பிச்சாடனர் எனும் கோலம் கொண்டது குறிப்பிடத்தக்கது. அத்தகைய சிறப்பு வாய்ந்த பிச்சாடன கோலத்தில் இன்று இரவு காட்சி தர இருக்கும் கபாலீஸ்வரரை தரிசித்தால் சந்திரனால் ஏற்படும் அசுப யோகங்களும் தாரித்ரியமும் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்.

English summary
As Lord Shiva came here in the form of beggar, the god here is also called as Pichadanar.Yasaga yoga in Hindu astrology are the peculiar planetary situations or combinations seen in certain horoscopes that indicate Sanyasa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X