For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சகல செல்வமும் கிடைக்கணுமா விளக்கெண்ணெய் தீபம் ஏற்றுங்க

தீபத்திருவிழா தமிழகம் முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்பெல்லாம் ஐந்து நாட்கள் கொண்டாடி வந்த நிலையில் இப்போது மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடுகின்றனர். பரணி தொடங்கி தி

Google Oneindia Tamil News

சென்னை: தினந்தோரும் அதிகாலையிலும் அந்தி மாலை நேரத்திலும் வீடுகளில் விளக்கேற்றி வழிபட்டால் மனதிற்கு நிம்மதியும் ஆனந்தமும் கிடைக்கும். மன அழுத்தம் நீங்கும். கஷ்டங்களும் கவலைகளும் தீரும். கார்த்திகை மாதத்தில் தினந்தோறும் விளக்கேற்றினால் தெய்வ அருள் கிடைக்கும். கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை கொண்டாடப்படுகிறது. இந்த தீபத்திருவிழா திருவண்ணாமலையில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். நாளை தீப திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

திருக்கார்த்திகை திருவிழா முன்பு ஐந்து நாட்கள் கொண்டாடப்பட்டது. முதல்நாள் பரணி தீபம் ஏற்றுவார்கள். பரணி காளிக்கு உரிய நாளாகும். ஆதிநாளில் காளிதேவியை வழிபடும் நோக்கத்தில் பரணி தீபத்தைக் கொண்டாடினார்கள். அண்ணாமலையார் தீபம் கார்த்திகை மாதக் கிருத்திகை நட்சத்திரத்தில், மலையின் உச்சியில் விளக்கேற்றுவதுடன் இல்லங்கள்தோறும் ஏராளமான விளக்குகளை ஏற்றுகின்றனர். இது, சிவபெருமானைக் குறித்துக் கொண்டாடும் விழாவாகும். இதை அண்ணாமலையார் தீபம் என்று அழைக்கின்றனர்.

விஷ்ணு தீபம் 3வது நாள் ரோகிணி நட்சத்திரத்தில் வைணவர்கள் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதை விஷ்ணு தீபம் என அழைப்பர். இது, விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. நாட்டுக் கார்த்திகை இது நான்காவது நாள் மிருகசீரிட நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது நாட்டுக் கார்த்திகையாகும். பெண்ணையும் மருமகனையும் வீட்டுக்கு அழைத்து வந்து சிறப்புகள் செய்து விருந்து வைப்பர். இந்நாளில் குலதெய்வங்கள் வீட்டுக்கு வந்து அருள்புரிவதாக நம்பிக்கை. தோட்டக் கார்த்திகை ஐந்தாம் நாள் திருவாதிரை தினத்தில் அனுஷ்டிக்கப்படுவது, தோட்டக் கார்த்திகையாகும். வயல்கள், தோட்டங்கள், கிணற்றடிகளில் தீபங்களை ஏற்றி வழிபடுகின்றனர். இது கிராமங்களில் உள்ள பலவகை தெய்வங்களுக்கான வழிபாடாகும்.

செல்வம் கிடைக்கும்

செல்வம் கிடைக்கும்

விளக்கேற்றும் போது நெய்தீபம் ஏற்றினால் ஞானம் ஏற்படும். நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் எம பயம் அணுகாது. இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் அதிகமாகும். விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால் சகல செல்வமும் கிடைக்கும்

குடும்ப ஒற்றுமை

குடும்ப ஒற்றுமை

நமது வீட்டு பூஜை அறையில் ஒரு முக தீபம் ஏற்றினால் மத்திம பலன் தரும், இரண்டு முக தீபம் ஏற்றினால் குடும்பம் ஒற்றுமை தரும், மூன்று முக தீபம் ஏற்றினால் புத்திர சுகம் தரும். நான்கு முக தீபம் ஏற்றினால் பசு, பூமி, சுகம் தரும். ஐந்து முக தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

தோஷம் நீங்கும்

தோஷம் நீங்கும்


கிழக்கு நோக்கி தீபமேற்றினால் துன்பங்கள் நீங்கி பீடை விலகும். மேற்கு நோக்கி தீபமேற்றினால் கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்.
வடக்கு நோக்கி தீபமேற்றினால் திருமணத்தடை, சுபகாரியத்தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.தெற்கு நோக்கி தீபமேற்றக் கூடாது பாவம், அபசகுனம், அதே நேரம் யம தீபம் தெற்கு நோக்கி ஏற்றலாம். எமனுக்குப் பிரீதி செய்யலாம்.

மனக்கவலை நீங்கும்

மனக்கவலை நீங்கும்

நாம் தீபம் ஏற்றும் விளக்குகளை செவ்வாய், வெள்ளி, புதன்கிழமைகளில் துலக்க கூடாது. அதே நேரம் ஞாயிறு கிழமை விளக்கு துலக்கினால்
கண் சம்பந்தமான நோய் தீரும். திங்கள் கிழமை விளக்கு துலக்கினால் அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும். வியாழன் கிழமை விளக்கு துலக்கினால் குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும். சனிக்கிழமை விளக்கு துலக்கினால் வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்.

English summary
Deities and their favorite Oil deepam for Karthigai Deepam special.Cow's Ghee for Shree Mahalakshmi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X