For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவண்ணாமலை - கிரிவலம் வரும் போது எத்தனை கோவில்களை தரிசிக்கலாம் தெரியுமா?

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா களைகட்டியுள்ளது. அண்ணாமலையாரை தரிசிப்பது மட்டுமல்லாது கிரிவலம் வரும் பக்தர்கள் தரிசிக்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன.

Google Oneindia Tamil News

Recommended Video

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா தொடங்கியது-வீடியோ

    திருவண்ணாமலை: மலையே சிவனாக காட்சி தரும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். கிரிவலம் வரும் போது தரிசிக்க வேண்டிய கோவில்கள் உள்ளன.

    கிரிவலம் வருவதற்கு ஒரு முறை உள்ளது. அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு நின்று தரிசனம் செய்து விட்டு கிரிவலம் வந்து மீண்டும் ராஜ கோபுரத்தில் முடிக்க வேண்டும்.

    Karthigai deepam girivalam in Tiruvannamalai

    அண்ணாமலையாரே ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார். கார்த்திகை மாதம் தீபம் திருவிழா முடிந்து கிரிவலம் வருவார். அதே போல தை மாதம் 2ஆம் நாள் கிரிவலம் வருவார்.

    கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களையும், ஆசிரமங்களையும், கோவில்களையும் தரிசனம் செய்ய வேண்டும்.

    இந்திர நந்தீஸ்வரர் அஷ்ட நந்தியில் தொடங்க வேண்டும். இந்திர லிங்கம், கற்பக விநாயகர், காமாட்சி அம்மன் கோவில், பாணிபத்திரர் கோவில், அக்னிதீர்த்த குளம், அக்னி லிங்கம், சேஷாத்திரி ஆசிரமம், காளியம்மன் கோவில், தட்சிணாமூர்த்தி கோவில், ரமணா ஆசிரமம், யோகி ராம் சூரத்குமார் ஆசிரமம், ஆறுமுகப் பெருமாள் கோவில், சிங்க தீர்த்தம், எமலிங்கம், எமநந்தீஸ்வரர், துர்வாச கோவில், துர்வாச நந்தி, சோனாநந்தி, சோனா தீர்த்தம், ஜோதி விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில், ஈஸ்வர தொண்டு செய் நந்தி, திருதி லிங்கம்.

    அருட்பெருஞ்சோதி கோவில், திருத்தேர் அண்ணாமலை, வீர ஆஞ்சநேயர் கோவில், ராகவேந்திரர் கோவில், கண்ணப்பனார் கோவில், பழனி ஆண்டவர் கோவில், சூரிய லிங்கம், வருணலிங்கம், காசிநந்தீஸ்வரர், ஆதி அருணாசலம் அபிதகுஜாம்பாள் கோவில்,குழமணி விநாயகர், மாரியம்மன் கோவில், வாயுலிங்கம், அதிகார நந்தி, குபேரலிங்கம், இடுக்கி வழி பிள்ளையார் கோவில், பஞ்சமுக தரிசனம், சீனிவாச பெருமாள் கோவில், ஈசான்ய லிங்கம்.

    ஸ்ரீபச்சையம்மன் கோவில், வடசுப்ரமணியர் கோவில், ஸ்ரீதுர்க்கையம்மன் கோவில், கட்க தீர்த்தம், துர்கா நந்தி, பெரிய ஆஞ்சநேயர் கோவில், பழகொன்று கோவில், அருணை நாயகி கோவில், பூத நாராயண கோவில், வீரபத்திரர் கோவில், இரட்டை பிள்ளையார் கோவில் என 54 கோவில்களை கிரிவலப்பாதையில் தரிசனம் செய்யலாம்.

    English summary
    Girivalam is performed by shiva devotees from all over the world. There is this particular hill in Tiruvannamalai and 54 temples surround it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X