For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார்த்திகை தீப விரதம்: பனையோலைக் கொழுக்கட்டை, பொரி உருண்டை வைத்து வழிபடுங்க

கார்த்திகை தீபம் நாளில் வெல்லத்தில் செய்த உணவுப் பொருள் முக்கியமாக செய்யப்படுகிறது. பொரி உருண்டை போல, பனை ஓலை கொழுக்கட்டை, கடலை உருண்டை, வேர்க்கடலை உருண்டை, அப்பம், பாயசம், வடை செய்து படையலிட்டு சாப்ப

Google Oneindia Tamil News

சென்னை: கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி நாளில் வருகின்ற திருக்கார்த்திகை தீப திருநாள் மற்ற கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. பண்டைய காலம் தொட்டே திருக்கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். இந்த நாள் சிவனுக்கு மட்டுமல்ல முருகனுக்கும் உகந்த நாளாகும்.

கார்த்திகையன்று தீபம் ஏற்றுவது, சொக்கப்பனை எரிப்பது எப்படிச் சிறப்பானதோ அதேபோன்று பனையோலைக் கொழுக்கட்டை, பொரி உருண்டை பிரசாதமும் சிறப்பானது. அதிலும் தென் தமிழகத்தில் பனையோலைக் கொழுக்கட்டை மிகவும் பிரசித்தி பெற்றது. பச்சரிசி மாவு, பாசிப்பயறு, வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, இந்தக் கலவையைப் பனையோலையில் பொதிந்து வைத்து அவித்துச் செய்யப்படும் கொழுக்கட்டைதான் பனை ஓலைக் கொழுக்கட்டை. வெப்பத்தில், பச்சைப் பனை ஓலையின் சாறு கொழுக்கட்டையில் இறங்கி அதன் சுவை கூடியிருக்கும். இந்தக் கொழுக்கட்டையின் சுவைக்கு ஈடு, இணை எதுவுமில்லை

Karthigai Deepam Recipes amd Karthigai prasadam

கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி நாளில் வருகின்ற திருக்கார்த்திகை தீப திருநாள் மற்ற கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. பண்டைய காலம் தொட்டே திருக்கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.

Karthigai Deepam Recipes amd Karthigai prasadam

கார்த்திகை விரதமிருக்க விரும்புபவர்கள் திருக்கார்த்திகையன்று தொடங்கி, அடுத்த திருக்கார்த்திகை வரை அனுஷ்டித்தால் முருகன் அருளால் அனைத்து நலமும் பெறலாம். திருக்கார்த்திகையன்று காலையில் குளித்து சலவை செய்த ஆடைகளை அணிந்து கொண்டு குலதெய்வத்தை மனதில் நினைத்து பூஜை செய்ய வேண்டும். சிவனுக்கும், முருகனுக்கும் உரிய பாடல்களைப் பாட வேண்டும். சிவனின் ஐந்தெழுத்து மந்திரங்களையும், முருகப்பெருமானின் மந்திரங்களையும் உச்சரிக்க வேண்டும்.

Karthigai Deepam Recipes amd Karthigai prasadam

மாலை ஆறு மணிக்கு விளக்கேற்ற வேண்டும். ஆறு விளக்குகலுக்கு குறையக்கூடாது. விநாயகர், முருகன், சிவன் படங்களை வைத்து பழம், வெற்றிலை பாக்கு, பொரி, பொரி வெல்லம் சேர்த்த உருண்டை, பனை ஓலை பிடி கொழுக்கட்ட ஆகியவற்றை நைவேத்யம் செய்ய வேண்டும். தீபாராதனை காட்டி பிரசாதம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.

English summary
Karthigai Deepam Festival of Lights celebration in Tamil Nadu. Sweet recipe prepared using Tender Palm leaves,Jack fruit leaves and Pori urundai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X