For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்த்திகை : திருமலையில் வனபோஜனம் - தங்க யானை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி -

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு திருமலையில் வனபோஜன உற்சவம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஏழுமலையான் கோயிலிலிருந்து உற்சவமூா்த்திகள் பாபவிநாசம் செல்லும் வழியில் உள்ள பாா்வேட்டு மண்டபத்துக்

Google Oneindia Tamil News

திருப்பதி: தினந்தோறும் வீட்டில் சமைத்து வீட்டிற்குள் சாப்பிடுகிறோம். ஒரு மாற்றத்திற்கு இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதிக்கு சமைத்து எடுத்துப்போய் சாப்பிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா? அற்புதமான சுக அனுபவமாக இருக்கும். அந்த உணவே தேவாமிர்தமாக இருக்கும். வனத்தில் உண்ணும் அற்புத அனுபவத்தை தருகிறது. இந்த அனுபவத்தை பக்தர்களும் உணர வேண்டும் என்பதற்காகவே வன போஜன உற்சவத்தை செய்து வருகிறது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

கோடை காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கி உள்ளதால், நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகம் இருக்கும். அப்போது மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் அங்கு சென்று உணவு உண்டு உல்லாசமாகப் பொழுதை கழிப்பர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வன போஜனம் நடத்தப்படுகிறது.

Karthigai Vanabhojanam organised in Tirumala

கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஏழுமலையான் கோயிலிலிருந்து உற்சவமூா்த்திகள் பாபவிநாசம் செல்லும் வழியில் உள்ள பாா்வேட்டு மண்டபத்துக்கு எழுந்தருளினா். மலையப்ப சுவாமி யானை வாகனத்திலும், நாச்சியாா்கள் மூடு பல்லக்கிலும் மங்கல வாத்தியங்கள் முழங்க கொண்டு செல்லப்பட்டனா்.

அங்குள்ள மண்டபத்தில் அவா்களுக்கு அா்ச்சகா்கள் பால், தயிா், தேன், மஞ்சள், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தினா். பின்னா், அவா்களுக்கு அலங்காரம் செய்தும், மலா் மாலைகள் அணிவித்தும் தூப, தீப ஆராதனை நடத்தி நைவேத்தியங்களை சமா்ப்பித்தனா்.

Karthigai Vanabhojanam organised in Tirumala

வனபோஜனத்தில் பங்கேற்க வந்த பக்தா்களுக்கு தேவஸ்தானம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னா், மாலை மீண்டும் உற்சவமூா்த்திகள் கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டனா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

காா்த்திகை மாதம் மழை பெய்து நீா்நிலைகள் நிறைந்திருக்கும், எனவே உற்றாா்களுடன் அங்கு சென்று நீராடி, உண்டு மகிழ்ந்து வருவதை காா்த்திகை வனபோஜனமாக தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இடையில் சில ஆண்டுகாலம் நிறுத்தப்பட்டிருந்த இந்த வன போஜனம் மீண்டும் 2010ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது.

English summary
TTD organised Kartika Vana Bhojanam in a grand manner at the Parveta mandapam in Tirumala on Sunday. Earlier lord Malayappaswamy and his consorts were taken on Gaja Vahanam from Srivari temple to Parveta mandapam where Snapana Thirumanjanam was performed to the deities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X