For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்றினால் மகாலட்சுமியின் அருளோடு செல்வம் பெருகும்

லட்சுமி தேவியே தீப ஜோதியாக விளங்குபவள். வீடுகளை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொண்டு மாலை நேரத்தில் தீபம் ஏற்றி வணங்கினால் அந்த வீட்டில் லட்சுமி விஜயம் செய்வாள். கார்த்திகை மாதம் பிறந்து விட்டது.

Google Oneindia Tamil News

சென்னை: வீடு என்பது தெய்வ அம்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும். வீட்டினை சுத்தமாக வைத்திருந்தது விளக்கேற்றி வழிபட்டால் நம் வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும். தினமும் வீட்டில் விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. தீப திருநாளில் மட்டுமல்ல தினசரியும் அகல் விளக்கேற்றி வழிபடலாம் செல்வ வளம் பெருகும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றார்.

தீபத்தில் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி தேவி உள்ளனர் எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம். அந்த சமயத்தில் பெண்கள் கூந்தலை விரித்தபடி நிற்பது நல்லதல்ல. எனவே விளக்கு வைப்பதற்கு முன்பாக மாலை 5.30 மணிக்குள் பெண்கள் தலைவாரி, தங்களை அழகு செய்து கொண்டு விளக்கேற்ற தொடங்க வேண்டும்.

திருக்கார்த்திகை தினத்தன்று, அகல் விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது. கார்த்திகை மாதத்தில் தீபத்திருநாளில் மட்டுமல்ல தினந்தோறும் மாலை நேரத்தில் அகல் விளக்கில் தீபம் ஏற்றலாம்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்

கஷ்டங்கள் நீக்கும் தீபம்

கஷ்டங்கள் நீக்கும் தீபம்

தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும்.

மகாலட்சுமியின் அருள்

மகாலட்சுமியின் அருள்

தினம் தினம் மாலை வேளையில் வீடுகளில் விளக்கேற்றி இறைவனை வழிபடலாம். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. பிரதோஷ நேரத்தில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. அதோடு வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.

தீபம் ஏற்றுவதால் நன்மை

தீபம் ஏற்றுவதால் நன்மை

கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு நாம் செய்யும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக வீட்டின் வெளியிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

திருமகள் அருள் தரும் தீபம்

திருமகள் அருள் தரும் தீபம்

வெள்ளி விளக்கு ஏற்ற திருமகள் அருள் கிடைக்கும். பஞ்ச லோக விளக்கு ஏற்ற தேவதை வசியம் உண்டாகும். வெண்கல விளக்கு ஏற்ற ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கு ஏற்ற சனி கிரக தோஷம் விலகும். தீபம் ஏற்றுவதற்கு வெள்ளி, பித்தளை என எத்தனையோ விளக்குகள் இருந்தாலும் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கு ஏற்றினால் பீடை விலகும். தீபம் ஏற்றிய பின்னர் ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.

16 தீபங்களின் தரிசனம்

16 தீபங்களின் தரிசனம்

தீபங்களில் 16 வகையான தீபங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. தீபம், மகா தீபம், கணு தீபம், வியான் தீபம், மேரு தீபம், மயூர தீபம், சிம்ம தீபம், ஐந்தட்டு தீபம், துவஜ தீபம், புருஷா மிருக தீபம், நட்சத்திர தீபம், அலங்கார தீபம், ஓல தீபம், கமடதி தீபம், நாக தீபம், விருட்சப தீபம் என பதினாறு வகையான தீபங்கள் உண்டு. ஒவ்வொரு தீபத்தை ஏற்றி இறைவனுக்குக் காட்டும்போது, அதற்குரிய தேவர்கள் சூட்சுமமாகத் தோன்றி இறைவனை வழிபடுகின்றனர். திருக்கோயில்களில் நடைபெறும் இந்த தீப உபசாரத்தைத் தரிசித்தால் 16 பேறுகள் கிடைக்கும் அந்த தேவர்களின் அருளும் கிடைக்கும்.

ஆரோக்கியம் தரும் எண்ணெய்

ஆரோக்கியம் தரும் எண்ணெய்

நெய் தீபம் ஏற்றினால் செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும். நல்லெண்ணெய் தீபம் ஆரோக்கியம் அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றினால் வசீகரம் கூடும். இலுப்பை எண்ணெய்யில் தீபம் ஏற்ற சகல காரிய வெற்றி கிடைக்கும். விளக்கெண்ணெயில் தீபம் ஏற்ற புகழ் தரும்.
கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே அதிகரிக்கும். விளக்கு ஏற்றிய பின்பு அது தானாக அணையக்கூடாது. கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது அரிசியால் குளிர்விக்க வேண்டும்.

English summary
Lets see the rules and specific oils for lighting a lamp as told in Agama Shastras.The epics indicate that by lighting oil lamps all over the house during the entire period of Karthigai month after taking an early bath and worshipping Lords Siva Vishnu, unbound happiness will prevail. It is a tradition to light oil lamps in all places
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X