• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராஜ ராஜ சோழனுக்கு ஆலோசனை சொன்ன கருவூர் சித்தர் - வணங்கினால் வளம் பெறலாம்

|
  தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு.. ஏராளமாக திரண்ட பக்தர்கள் - வீடியோ

  தஞ்சாவூர்: மாமன்னன் ராஜ ராஜ சோழனுக்கு ஆலோசனை கூறும் குருவாக இருந்துள்ளார் கருவூரார் என அழைக்கப்படும் கருவூர் சித்தர். இவர்‌ கரூர்‌ பசுபதீஸ்வரர்‌ ஆலயத்தில்‌ சமாதிபூண்டும்‌ தஞ்சைப்‌ பெருவுடையார் கோவில்‌ பிரகாரத்தில்‌ தனிக்கோவில்‌ கொண்டும்‌ அருளாட்சி செய்து வருகிறார்‌. இவரது அறிவுரைபடியே உலகம் போற்றும் இந்த கோவிலை கட்டியுள்ளார் ராஜ ராஜ சோழன். வியாழக்கிழமைகளில்‌ இவரை வழிபட்டு வருபவர்களுக்கு நினைத்தது நிறைவேறும் அனைத்து வளங்களும் கிடைக்கும்.

  தஞ்சை பெரியகோவிலுக்கு சீரோடும் சிறப்போடும் கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது. இந்த கோவில் கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிக பெரியதாகும். ஆறு அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும், 23 அரை அடிசுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனிதனித் கருங்களனால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தை சுற்றி வர இடமும் கருவறையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.

  நமது பார்வையில்தென்படுவது சிவலிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேக ஆராதனைகளுக்கு வசதியாகஇரு புறங்களிலும் படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தஞ்சை கோயிலின் சிவலிங்க வழிபாடு மகுடாகமஅடிப்படையில் செய்யப்படுகிறது. உச்சி காலம், சாயரட்சை, அர்த்த ஜாமம் என நான்கு கால பூஜைகள்நடைபெற்று வருகின்றன.

  ராஜ ராஜ சோழன்

  ராஜ ராஜ சோழன்

  தஞ்சை பெரியகோயில் கட்டுமானப் பணியின் போது கருவறையில் லிங்கப் பிரதிஷ்டை செய்யும் போது ஆவுடையாரில் லிங்கத்தை நிறுவி மருந்து சாத்தினர். மருந்து இளகியபடியே இருந்ததால் லிங்கம் இறுகவில்லை. ஆதீனங்களைஅழைத்து மருந்து சாத்தியும் கைகூடாமல் போனதால் ராஜராஜ சோழனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் வேதனைப்பட்டார். அப்போது சித்தர் கருவூரார் வந்தாலன்றி, மாமன்னர் வெற்றியடைய முடியாது என்று அசரீரி வாக்குகேட்டது.

  கருவூரார் சித்தர்

  கருவூரார் சித்தர்

  இதைக்கேட்ட மன்னர் மகிழ்ச்சியடைந்தார். கருவூரார் எங்குள்ளார்? அவரை எப்படி தேடிக் கண்டுப் பிடிப்பது எனக் கேட்டார். அப்போது போகர் சித்தர், கருவூராரை அழைத்து வருவதாக கூறினார். ஒரு காகத்தின் காலில், ஓலையைக் கட்டி பறக்கவிட்டார். சிறிது நேரத்தில் கருவூரார் தஞ்சை கோயிலுக்கு வந்து விட்டார். சித்தர்கள் காற்றின் மூலம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்தை அடைவார்கள் எனவேதான் நினைத்த நேரத்தில் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வார்கள்.

  கருவூரார் செய்த சிவலிங்க பிரதிஷ்டை

  கருவூரார் செய்த சிவலிங்க பிரதிஷ்டை

  கருவூரார் அங்கிருந்த போகரிடம், எல்லா வல்லமையும் பெற்ற தாங்களே இதைச் செய்திருக்கலாமே அடியேனை அழைத்தது எதற்காக?'' என்று கேட்டார். அதற்கு போகர், நீர் சிவயோகிகளின் தலைவர் என்பதை உலகுக்கு அறிவிக்கவே இவ்வாறு செய்தேன் என்று கூறினார் மாமன்னர் ராஜராஜன் போகரையும், கருவூராரையும் வணங்கி சிவலிங்கப்பிரதிஷ்டைக்கு உதவுமாறு வேண்டினார். கருவூராரும் சிவ சிந்தனையுடன் கைகளால் அழுத்திப் பிடிக்க மருந்து இறுகிப் பிடித்துக் கொண்டது. மன்னரும் கருவூராரின் செயலுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவருக்கு மூலஸ்தானத்திற்கு பின்புறம் ஒரு சன்னதியை ஏற்படுத்தினார்.

  ஜோதியாக கலந்த கருவூர் சித்தர்

  ஜோதியாக கலந்த கருவூர் சித்தர்

  கருவூரார்‌ ஐந்தாம்‌ நூற்றாண்டில்‌ தொடங்கி 12 ஆம்‌ நூற்றாண்டுவரை சுமார்‌ 700 ஆண்டுகள்‌ வாழ்ந்தவர்‌. ‌ கரூரில் உள்ள பசுபதீஸ்வரர்‌ திருக்கோவிலுள்‌ சென்று மூலவர்‌ லிங்கத்தை கட்டித்தழுவி ஜோதிமயமாக மாறி சிவலிங்கத்தோடு இரண்டறக் கலந்தார்‌. இந்த வரலாறு கொங்கு மண்டல சதகத்திலும்‌ கருவூரார் பலதிரட்டிலும்‌ இடம்‌ பெற்றுள்ளது.

  கருவூரார் வழிபாடு

  கருவூரார் வழிபாடு

  இவர்‌ கரூர்‌ பசுபதீஸ்வரர்‌ ஆலயத்தில்‌ சமாதிபூண்டும்‌ தஞ்சைப்‌ பெருவுடையார் கோவில்‌ பிரகாரத்தில்‌ தனிக்கோவில்‌ கொண்டும்‌ அருளாட்சி செய்து வருகிறார்‌. கரூர்‌ பசுபதீஸ்வரர்‌ திருக்கோவிலில்‌ தென்புறத்தில்‌ கருவூர்‌ சித்தர்‌ சமாதி உள்ளது. சமாதி மீது கருவூரார்‌ சிலை உள்ளது. இவருக்கு பெளர்ணமிகளில்‌ சிறப்பு பூஜைகள்‌ நடைபெற்று வருகின்றன. இந்தப்‌ பெளர்ணமி பூஜைகளில்‌ கலந்து கொள்பவர்களின்‌ நியாயமான வேண்டுதல்கள்‌ தவறாது நிறைவேறி வருகின்றன. வியாழக்கிழமைகளில்‌ இவரை மனதார நம்பிக்கையுடன் வழிபட்டால் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது உறுதி.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  According to popular belief, a Siddhar by name Karuvur Thevar to be the spiritual mentor and Guru of the king Rajaraja Chozha.Karuvoorar Siddhar was born in a place called Karuvoor of the then Chola Kingdom, Some consider that, he is also called as Karuvoor Devar.There are also popular accounts of Karuvoorar Siddhar’s significant contribution to the completion of the marvellous Brihadeeswarar Temple at Thanjavur, India.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X