For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில் வருஷாபிஷேக விழா

பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் தமிழர்தெருவில் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் 13-வது ஆண்டு வருஷாபிஷேகவிழா நடைபெற்றது.

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் தமிழர்தெருவில் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் 13-வது ஆண்டு வருஷாபிஷேகவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

அன்று காலை 8 மணிக்கு பரமபுருஷ ஆர ஆதணை, 9 மணிக்கு சுதர்சன ஜெபம் மற்றும் ஹோமம், 108 கலச பூஜை, தாராஹோமம் நடைபெற்றன. மதியம் 12 மணிக்கு விமானம் மற்றும் மூலவருக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Keelapavur Venugopala Swamy Temple Temple festival

மாலை 6.30 மணிக்கு சகஸ்கரநாம அர்ச்சணை, இரவு 7.30 மணிக்கு அலங்கரி க்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதிஉலாவும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ரவி பட்டாச்சாரியார் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். காலை முதல் மாலை வரை நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Keelapavur Venugopala Swamy Temple Temple festival

ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி விழாக்கள் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

English summary
Hundreds of Devotees witness Varusabishegam in Keelapavor
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X