For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குட்டிக்கண்ணன் வீட்டுக்கு வரணுமா? கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுங்கள்

கிருஷ்ண ஜெயந்தி ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் அழைக்கிறோம்.

Google Oneindia Tamil News

சென்னை: இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வீடுகளில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டு அவல், பொரி, முருக்கு, சீடை, அதிரசம் ஆகிய தின்பண்டங்களை படையலிட்டு கிருஷ்ணனை வீடுகளுக்கு அழைக்கின்றனர்.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இந்தியா முழுவதும் அனைத்து கிருஷ்ணர் கோவில்களிலும் சிறப்பு ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெறுகின்றன.

கோகுலாஷ்டமி கொண்டாடுவதால் திருமணத் தடை அகலும், அகந்தை அகலும். சகல செல்வ பாக்கியங்களும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி தினத்தில், புத்திர யோகம் இல்லாதவர்கள், ஸ்ரீ மத் பகவத் கீதையில் உள்ள "தசம ஸ்காந்தம்" படித்தால், ஆண் குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கிருஷ்ணஜெயந்தி

கிருஷ்ணஜெயந்தி

இன்று கோகுலாஷ்டமி என்பதால் வீடுகளை சுத்தம் செய்து மாக்கோலம் இட்டு, மாவிலை தோரணம் கட்டி, கிருஷ்ணருக்கு பிடித்தமான தயிர், வெண்ணெய், அவல், சீடை,முறுக்கு, லட்டு ஆகிய பதார்த்தங்களை படைத்து கொண்டாடி வருகின்றனர். கண்ணன் பிறந்தது இரவில் என்பதால் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வணங்குவது சிறப்பானது.

கிருஷ்ணர் வேடம்

கிருஷ்ணர் வேடம்

கோகுலாஷ்டமி அன்று கிருஷ்ணருக்கு சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்டால், கிருஷ்ணர் நம் வீட்டிற்குள் வருவார் என்பது ஐதீகம். எனவேதான் ஏராளமானோர் இன்று வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் போல் வேடமிட்டு காலை மாவில் வைத்து அவர்களது பாதச்சுவடுகளை வீட்டிற்கு வாசலில் இருந்து பூஜையறை வரை வரைந்தனர். இதனால் பகவான் கிருஷ்ணரே நம்வீட்டிற்கு வருகிறார் என்பது ஐதீகம்.

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி

ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டும், பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமிட்டும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி தினத்தில், புத்திர யோகம் இல்லாதவர்கள், ஸ்ரீ மத் பகவத் கீதையில் உள்ள "தசம ஸ்காந்தம்" படித்தால், ஆண் குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

குட்டிக்கண்ணன் வீட்டுக்கு வருவான்

குட்டிக்கண்ணன் வீட்டுக்கு வருவான்

குழந்தை பாக்கியம்பெற விரும்புபவர்கள் கோகுலாஷ்டமியன்று கோபூஜை செய்து ஸ்ரீ சந்தான கோபாலனை மனதில் நிறுத்தி வணங்கலாம். சுக்கிர தோஷம் மற்றும் புத்திர தோஷம் நீங்கி விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என பாரம்பரிந ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. உண்மையான பக்தியுடன் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளில் சந்தான கோபால க்ருஷ்ணனை பூஜித்து வழிபட்டால் குழந்தையாகவே கிருஷ்ணர் நம் வீட்டுக்கு வந்து கஷ்டத்தை போக்குவார்.

English summary
Lord Krishna was born in an era of chaos, when evil was everywhere. There was also threat to his life by his uncle King Kansa. After Krishna's birth in Mathura, his father Vasudeva took him across Yamuna to Nanda and Yashoda - his foster parents in Gokul. This legend is remembered and also enacted through stage plays on Janmashtami.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X