For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணர் பாதம் கோலம் போடுவது ஏன் தெரியுமா?

நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன், காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வோருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ண திருவடிக் கோலம் போடுகிறார்க

Google Oneindia Tamil News

சென்னை: கிருஷ்ணஜெயந்தியன்று குழந்தை பாத சுவட்டை மாக்கோலமாக வரைவது நாடெங்கும் எல்லா இடங்களிலும் மரபுவழி பழக்கமாக உள்ளது. எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன், காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வோருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ண திருவடிக் கோலம் போடுகிறார்கள்.

Krishna jayanthi 2018 - Story of lord krishna padam kolam

குழந்தை கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் கோலமாக வரைகிறோம் தெரியுமா? நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வோரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வோரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார்.

Krishna jayanthi 2018 - Story of lord krishna padam kolam

இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ணபரமாத்மா. நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன், காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வோருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ண திருவடிக் கோலம் போடுகிறார்கள்.

மதுரா நகரில் தேவகி-வாசுதேவருக்கு எட்டாவது மகனாக பிறந்தார் ஸ்ரீகிருஷ்ணர். கிருஷ்ணர் சிறைச்சாலையில் பிறந்தார். பின் வளர்ப்புத் தாய் யசோதையின் மூலம் கோகுலத்தில் வளர்க்கப்பட்டார். தனது தாய் மாமன் கம்சனைக் கொன்று துவாரகையில் அரசாட்சி செய்தார். பாரதப்போரில் பாண்டவருக்கு உறுதுணையாக இருந்தார்.

Krishna jayanthi 2018 - Story of lord krishna padam kolam

பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து, போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்தவரும் கண்ணன்தான். தேரோட்டியாக வந்த கண்ணன்தான் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார். தேரோட்டியாக வந்த கண்ணன், அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மக்களின் புனித நூலான பகவத் கீதையாக உள்ளது.

கிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது வெண்ணை திருடி தின்றார். அப்போது வெண்ணை சிதறி அவர் உடம்பு மற்றும் கால்களில் விழுந்தது. அதோடு கிருஷ்ணர் நடந்ததால் கிருஷ்ணர் கால் தடம் பதிந்தது. அதை நினைவுப்படுத்தும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று மாவால் கால் சுவடு பதிக்கப்படுகிறது.

Krishna jayanthi 2018 - Story of lord krishna padam kolam

குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு எட்டு போன்ற வடிவுடன் இருக்கும். அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும். அதாவது ஓம் நமோ நாராயணா என்ற எட்டு எழுத்து மந்திரமும் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரமும் ஒருங்கிணைந்து இருப்பதை திருப்பாதம் பிரதிபலிக்கிறது.

தன் கடைசிக் காலத்தில் வேடன் ஒருவன் எய்த அம்பு காலில் தைக்க பூலோகத்தில் கண்ணன் அவதாரத்தை முடித்து மீண்டும் வைகுண்டம் சென்றார் என்கிறது புராண கதை.

English summary
Krishna jayanthi 2018 - Story of lord krishna padam kolam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X