For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிருஷ்ணன் வசீகரமானவன் - ராதைக்காக மயிலிறகை தலையில் சூடிய மன்னன்

கிருஷ்ண ஜெயந்தி இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. கிருஷ்ணனை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் கண்ணனுக்கு மிகவும் பிடித்த பெண் ராதை. அந்த ராதையை கொண்டாடும் விதமாகவே மயிலிறகை தலையில் சூடிக்கொண்டி

Google Oneindia Tamil News

சென்னை: பகவான் கண்ணனின் அவதாரமே அதர்மத்தையும் அழிக்கவும் அரக்கர்களை வதம் செய்வதற்காகவே நிகழ்ந்தது. ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் அஷ்டமி திதியில் அவதரித்தவர் பகவான் கிருஷ்ணன். கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது பகவான் கிருஷ்ணரின் 5246வது பிறந்தநாள் என்று புராணங்கள் கூறுகின்றன.

கருவில் இருக்கும் போதே பல சோதனைகளை சந்தித்தவன் கிருஷ்ணன். கிருஷ்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை. அவனது குறும்புத்தனம் பலரையும் கவரும். கிருஷ்ணன் என்றாலே வசீகரமானவன் பக்தர்களை வசீகரிப்பவன். தலையில் மயிலிறகை சூடி நிற்பவன் கிருஷ்ணன்.

Krishna means all attractive

கண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா. ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர். ராதையை மனதில் சுமக்கும் கண்ணன், அவளை தலையில் வைத்து கொண்டாடும் விதமாகவே மயிலிறகை தலையில் சூடியுள்ளார் என்று பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரே கூறியுள்ளார்.

கிருஷ்ணனின் பட்டத்து ராணி ருக்மணி. சத்யபாமா, ஜாம்பவதி காளிந்தி, மிராவிந்தா, சத்டயா, பத்ரா என ஆறு பேர் இருந்தாலும் ருக்மணியும் பாமாவும் மட்டும்தான் பலரால் அறியப்பட்டவர்.

குழந்தை வரம் தரும் பலராம ஜெயந்தி - கண்ணனின் அண்ணன் அவதாரம் நிகழ்ந்த கதை குழந்தை வரம் தரும் பலராம ஜெயந்தி - கண்ணனின் அண்ணன் அவதாரம் நிகழ்ந்த கதை

என்னதான் பாமா ருக்மணி கிருஷ்ணரின் பட்டத்து ராணிகளாக இருந்தாலும் கிருஷ்ணரின் மனம் கவர்ந்த ராதைதான் கண்ணனின் அருகில் இருக்கிறார். ராதா கிருஷ்ணன்தான் பலராலும் வணங்கப்படுகின்றனர். எனவேதான் சக்தியின் அம்சமான ராதைக்கு மதிப்பு தரும் வகையில் மயிலிறகை தலை மேல் வைத்து கொண்டாடுகிறாராம் பகவான் கண்ணன்.

Krishna means all attractive

கிருஷ்ணரின் பட்டத்து ராணிகள் 8 பேரும் எட்டு பகுதிகளைக் கொண்ட ப்ரக்கிருதியை குறிக்கின்றனர். பஞ்சபூதங்களும், எட்டு திக்குகளும் கண்ணனில் அடக்கம். அது தவிர கிருஷ்ணன் நரகாசூரனை கொன்று 16 ஆயிரம் இளவரசிகளை மீட்டு அவர்களை திருமணம் செய்து கொண்டார் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 16 ஆயிரம் இளவரசிகளும் நம் உடலில் உள்ள நாடி நரம்புகளை குறிக்குமாம்.

கிருஷ்ண ஜெயந்தி பூஜை மற்றும் வழிபாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும். அப்போது கண்ணனின் லீலைகளை கதைகளாக சொல்ல வேண்டும். இதன்மூலம் மாணவ மாணவிகளுக்கு கல்வி அறிவும் புத்திசாலித்தனமும் கூடும்.

English summary
The meaning of the name Krishna The name Krishna means all-attractive. God attracts everyone that is the definition of God. Ashtami Rohini is also known as Sri Jayanthi and Gokulashtami.5246th Birth Anniversary of Lord Krishna
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X