For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா களைகட்டியது - சூரசம்ஹாரம் காண குவிந்த பக்தர்கள்

நவராத்திரி பண்டிகையின் முக்கிய விழாக்களான சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை தமிழகம் முழுவதும் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அம்பு போடும் விழாவாகவும், அசுரன் அழிக்கப்பட்ட தினமாகவும் விஜய

Google Oneindia Tamil News

Recommended Video

    குலசை முத்தாரம்மன் கோவில் தசரா கொண்டாட்டம்.. இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம்..வீடியோ

    மதுரை: குலசேகரப்பட்டினம் தசரா விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிசாசூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்களும், வேடமணிந்த பக்தர்களும் குலசேகரப்பட்டிணத்தில் குவிந்துள்ளனர். தசரா பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தென் மாநிலங்களில் மைசூருக்கு அடுத்தபடியாக மிகவும் பிரசித்தி பெற்றது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தரசா திருவிழா. இக்கோவிலில் அன்னை முத்தாரம்மன், சுவாமி ஞானமூர்த்தீசுவரர் சமேதராய் அம்மையும், அப்பனும் சேர்ந்து வீற்றிருப்பது தனிச் சிறப்பாகும்.

    இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 29ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியதும், பக்தர்கள் காப்புகட்டி விரதத்தை ஆரம்பித்தனர். பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து பணம் வசூல் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவிலின் அருகில் தசரா பிறை அமைத்து, அதில் பக்தர்கள் தங்கியிருந்து அம்மனை வழிபட்டனர்.

    Kulasai Mutharamman dasara Lakhs devotees Soorasamharam

    இத்திருவிழாவில் பக்தர்கள் நேர்த்தி கடனாக கடவுள்களின் வேடமணிந்து ஆடிப்பாடி, காணிக்கை வசூல் செய்து கோவிலில் செலுத்துவது தனி சிறப்பாகும். மீனாட்சி, சரஸ்வதி, கிருஷ்ணர், பீஷ்மர் உள்ளிட்ட கடவுளரின் வேடமணிந்து வந்தனர். காளி வேடத்துடன் அருள் வந்து ஆக்ரோசமாக ஆடினர்.

    தமிழகம் மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை புரிந்து குலசேகரன்பட்டிணம் தசரா விழாவைக்காண வருகின்றனர்.
    தசரா விழாவின் சிகர நாளான இன்று இரவு வரை, காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள், பின்னர் அதை கோவிலில் செலுத்துவர். நோய்கள் குணமாகவும், நினைத்த காரியம் கை கூடவும் இதுபோன்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும் களம் அமைத்து நடனக் கலைஞர்கள் சினிமா பாடல்களுக்கு ஆடிப்பாடி குலசேகரன்பட்டிணம் வருவோரை உற்சாகப்படுத்தினர்.

    Kulasai Mutharamman dasara Lakhs devotees Soorasamharam

    வெற்றி தரும் விஜயதசமி திருநாள் - எந்த ராசிக்காரர்கள் என்ன தொழில் செய்யலாம்வெற்றி தரும் விஜயதசமி திருநாள் - எந்த ராசிக்காரர்கள் என்ன தொழில் செய்யலாம்

    விஜயதசமி நாளான இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிசாசூரசம்ஹாரம் நடைபெறுகிறது இதனையொட்டி அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அக்னிசட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    Kulasai Mutharamman dasara Lakhs devotees Soorasamharam

    சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அம்மன் இன்று இரவு 12 மணி அளவில் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருள்கிறார். அப்போது காளி வேடம் அணிந்த திரளான பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்து கடற்கரையில் குவிகின்றனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். ஆணவத்துடன் பல்வேறு உருவங்களில் போர் புரிய வந்த மகிஷாசூரனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்த அழிப்பார். அப்போது பக்தர்கள் ஜெய்காளி ஓம் காளி என முழக்கமிடுவார்கள்.

    Kulasai Mutharamman dasara Lakhs devotees Soorasamharam

    சூரசம்ஹாரம் முடிந்து கடற்கரை மேடையில் எழுந்தருளும் அம்மனுக்கு சாந்தி செய்வதற்காக சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலை சென்றடைவார். இதை பார்த்து விட்டு கடவுள் வேடமணிந்த பக்தர்கள், கடலில் புனித நீராடி காப்பு கயிறுகளை கழற்றி விட்டு விரதத்தை முடிக்கின்றனர்.

    English summary
    Dasara festival celebrated with religious fervour and gaiety at Kulasekarapattinam. Today midnight Soorasamharam, which symbolises victory of good over evil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X