For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி - திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

நவகிரக பரிகார தலங்களில் புகழ்பெற்ற ராகு பரிகார தலமான திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில் கும்பகோணத்தில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை மாதம் நடைபெறும் கடைஞாயிறு தீர்த்தவாரி விழா புகழ்பெற்றதாகும்.

Google Oneindia Tamil News

கும்பகோணம்: கார்த்திகை மாதம் முடிவடைவதை ஒட்டி, கடைசி ஞாயிற்றுக் கிழமையான நேற்று புகழ்பெற்ற ராகு பரிகார தலமான திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
நவகிரக பரிகார தலங்களில் புகழ்பெற்ற ராகு பரிகார தலமான திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில் கும்பகோணத்தில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை மாதம் நடைபெறும் கடைஞாயிறு தீர்த்தவாரி விழா புகழ்பெற்றதாகும்.

கோயில் நகரம் என்று புகழப்படும் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புரங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட சிவ வைணவ கோவில்கள் நிறைந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான கோவில்கள் சுமார் 1500 முதல் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை ஆகும். அதிலும் அக்கோவில்கள் நாயன்மார்களாலும், பன்னிரு ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற கோவில்களாகும்.

Kumbakonam Temple karthigai Kadai Gnayiru festival held on Sunday

அதோடு, நவகிரக பரிகார தலங்களும் கும்பகோணத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் தான் அமைந்துள்ளன. இதன் காரணமாக பரிகார பூஜை செய்வதற்கும், நவக்கிரக கோவில்களை சுற்றிப்பார்க்கவும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் வந்து செல்வதுண்டு.

நவகிரக பரிகார தலங்களில் புகழ்பெற்ற ராகு பரிகார தலமான திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில் கும்பகோணத்தில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை மாதம் நடைபெறும் கடைஞாயிறு தீர்த்தவாரி விழா புகழ்பெற்றதாகும்.

அதே போல் இந்த ஆண்டும் கார்த்திகை கடை ஞாயிறு விழா கடந்த டிசம்பர் 6ஆம் தேதியன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் நாள்தோறும் பஞ்சமூர்த்திகளும் சிறப்பு அலங்காரத்தில் காலை மற்றும் மாலை வேளையில் திருவீதி உலா வந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 9ஆம் நாள் நிகழ்ச்சியாக கடந்த 14ஆம் தேதியன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

10ஆம் நாளான நேற்று விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, கார்த்திகை கடை ஞாயிறான நேற்று முற்பகல் 11 மணிக்கு பஞ்சமூர்த்திகளும் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. பின்னர் பிற்பகல் 2 மணியளவில், நாகநாத கோவிலில் உள்ள சூர்ய புஷ்கரணி முன்பு பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளினர். அதைத் தொடர்ந்து அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்பு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடியதோடு, சுவாமி தரிசனம் செய்தனர்.

English summary
Theerthavari event was held at the famous temple of Tirunageswaram Naganathar Temple, the famous Rahu-Kethu shrine, last Sunday. A large number of devotees participated in this event and performed the sacred waters and Swami darshan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X