For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீர ஆஞ்சநேயர் தெரியும்.. அதென்ன விசா ஆஞ்சநேயர்.. திருமழிசை போய் பாருங்க.. டிச 23 முதல் லட்சார்ச்சனை

Google Oneindia Tamil News

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை ஸ்ரீ வீற்றிருந்த பெருமாள் கோயிலில் டிசம்பர் 23 முதல் லட்சார்ச்சனை திருவிழா நடைபெறவுள்ளது.

திருமழிசை ஸ்ரீ வீற்றிருந்த பெருமாள் கோயிலில் ஸ்ரீ விநய ஆஞ்சநேய ஸ்வாமி சன்னதி அமைந்துள்ளது. வடக்கு நோக்கி அமைந்து இருப்பதால் இந்த ஸ்ரீ விநய ஆஞ்சநேயர் மிகவும் சக்திவாய்ந்தவராக அறியப்படுகிறார்.

 Latcharchanai is going to perform for Vinaya Anjaneyar in Thirumazhisai

பக்தர்களின் குறையைத் தீர்த்து வைப்பதால் டாக்டர்களின் டாக்டர் என்றும் அழைக்கப்படுகிறார். சமீபகாலமாக வெளிநாடு செல்லும் பக்தர்களின் குறையைத் தீர்ப்பதால் விசா ஆஞ்சநேயர் என்றும் புகழ்பெற்றுள்ளார்.

வடக்கு முக ஆஞ்சநேயரை தரிசிப்பதே பெரும்பேறு என்பதால் இவர் சென்னையில் விசேஷம். இந்நிலையில் டிசம்பர் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை விநய ஆஞ்சநேய ஸ்வாமிக்கு லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது.

 Latcharchanai is going to perform for Vinaya Anjaneyar in Thirumazhisai

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வீற்றிருந்த பெருமாள் நித்திய திருவாராதன கைகங்கர்ய கமிட்டி செய்து வருகிறது. கூடுதல் விவரங்களுக்கு 7871938201 9884274327 என்ற தொலைபேசி எண்களை பக்தர்கள் தொடர்பு கொள்ளலாம்.

 Latcharchanai is going to perform for Vinaya Anjaneyar in Thirumazhisai

ஆஞ்சநேய பக்தர்கள் இவரது அருளைப் பெற்று உய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார் என ஸ்ரீ வீற்றிருந்த பெருமாள் நித்திய திருவாராதன கைகங்கர்ய கமிட்டி தெரிவித்துள்ளது.

English summary
Lakhs of arachanai to be performed for Sri Vinaya Anjaneyar in Thirumazhi Sri Veetriruntha perumal temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X