For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நன்மை தீமை நடப்பது அவரவர் கருமவினையே- ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லும் உண்மை

ஒரு நல்ல காரியத்திற்கு நாள் மட்டும் பார்த்தால் போதாது நல்ல யோகம் வந்து விட்டதா எனவும் பார்க்கவேண்டும் என்பதை பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர் உத்தவர்.

இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. அவர் கேட்ட கேள்விகளுக்கு பல பதில்களை சொல்லியுள்ளார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். அவை அனைத்தும் இன்றைக்கு முகநூலில் வைரலாகி வருகின்றன. கண்ணன் கடவுள் அவதாரம்தான். கடவுள் அருகிலேயே இருந்தும் பாண்டவர்கள் ஏன் கஷ்டப்பட்டனர் என்ற கேள்வி பலருக்கும் எழுந்ததுண்டு. அதே போலத்தான் உத்தவருக்கும் தோன்றியது.

அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நல்லது நடக்க நல்ல நாள் மட்டும் போதாது அதற்கேற்ப யோகமும் வேண்டும் என்று சொல்லியுள்ளார். அதே போல தான் கடவுளாகவே இருந்தாலும் வெறும் சாட்சி மட்டும்தான் தன்னை அழைப்பவர்களுக்கு மட்டுமே ஓடேடி சென்று உதவுவேன் என்றும் கூறியுள்ளார்.

துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்,சிறு வயது முதலே கண்ணனின்செயல்களைக்கவனித்து வந்த உத்தவருக்கு, பாண்டவர் பட்ட கஷ்டங்கள் எதனால் ஏற்பட்டது என்று தெரிந்து கொள்ள விரும்பினார். அதையே கேட்டார். பகவானே, நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில்,எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன் நிறைவேற்றுவாயா?"என்றார் உத்தவர். உதட்டோரத்தில் சிறு புன்னகையுடன் கேள் சொல்கிறேன் என்றார் பகவான்.


ராஜசுய யாகம்

ராஜசுய யாகம்

பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தருமர், தான் ஒரு சக்கரவர்த்தியாக வேண்டும் என்பதற்காக ராஜசுய யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.

யாகத்துக்கு உண்டான திரவியங்களை மற்ற அரசர்கள் தர வேண்டும். அத்துடன் தருமருக்கு அடிமை எனும் வகையில் சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தருமருடன் போர் புரிய வேண்டும். தோற்றால், தோற்றவன் தருமருக்கு அடிமை. எனவே அவனது திரவியங்கள் தருமரை சேரும். வென்றால் வென்றவன் சுதந்திரமாக தருமருக்கு நட்பு அரசனாக இருக்கலாம். அவன் தருமருக்கு திரவியங்களை தர வேண்டியதில்லை. அந்த வகையில் தருமருக்கு ஏகப்பட்ட திரவியங்கள் சேர்ந்து விட்டன.

சக்கரவர்த்தி ஆகாத தர்மன்

சக்கரவர்த்தி ஆகாத தர்மன்

தனது தம்பியும் ஜோதிடக்கலை வல்லுனருமாகிய சகாதேவரை அழைத்து யாகத்துக்கான நல்ல நாள் குறிக்க சொன்னார். நல்ல நாளும் குறிக்கப்பட்டது. யாகத்துக்கு தலைமை தாங்க ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் வந்தார். யாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தர்மர் சக்கரவர்த்தி ஆகவில்லை அதற்கு மாறாக காடுகளில்தான் அலைந்தார். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து உத்தவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.

தர்மர் செய்த பாவம்

தர்மர் செய்த பாவம்

ஐயனே, உலகத்தில் மிகச்சிறந்த ஜோதிடக்கலை வல்லுனராகிய சகாதேவர், நாள் குறித்தாரே! அந்த நாள் குறையுடையதா? சகாதேவர் ஜோதிடக்கலைக்கு துரோகம் செய்துவிட்டாரா? நீங்கள் தலைமை தாங்கினீரே! அவர்களுக்கு நீங்கள் அருள் புரியாமல் விட்டு விட்டீர்களா? எதனால் இப்படி நடந்தது? என்று கேட்டார் உத்தவர். அதற்கு பதில் சொன்ன கிருஷ்ணர், ராஜசுய யாகத்திற்கு தருமர் திரட்டிய பொருட்கள் பாவப்பட்ட வழியில் வந்தது அவை பலன் தரவில்லை. 14 ஆண்டுகள் வனவாசம் சென்று வந்த பின்னர் தாமதமாக கிடைத்தது என்றார்.

தருமருக்கு யோகம் இல்லையே

தருமருக்கு யோகம் இல்லையே

மிகச்சிறந்த ஜோதிடரான சகாதேவருக்கு, தருமர் காடு போவார் என்று முன்னமே தெரியாதா? என்று கேட்டார் உத்தவர். அதற்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, இது சகாதேவன் செய்த தவறு. அண்ணன் நாள் பார்க்க சொன்னான். யாகத்துக்குண்டான ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த சகாதேவன், எப்படியும் யாகம் நடக்கப்போகிறது என்ற எண்ணத்தில், நாள் குறித்தான். அவன் , அண்ணனுக்கு தம்பியாக இருந்து நாள் குறித்தானே தவிர, ஜாதகருக்கு ஒரு ஜோதிடராக இருந்து செயல்படவில்லை. செயல்பட்டிருந்தால், தருமனுக்கு தற்போது சக்ரவர்த்தி ஆகும் யோகம் உள்ளதா? என ஆராய்ந்திருப்பான். ஒரு நல்ல காரியத்திற்கு நாள் பார்க்கும் போது, நல்ல யோகம் வந்து விட்டதா? என பார்க்கவேண்டிய அவசியமாகிறது. இந்த பொறுப்பு, ஜாதகருக்கும், ஜோதிடருக்கும் உண்டு.

 தருமனை தடுக்காதது ஏன்

தருமனை தடுக்காதது ஏன்

அடுத்ததாக உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ, 'உற்ற நண்பன் யார்' என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின் படி, முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்' என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன்

அப்படிச் செய்யவில்லை? என்று கேட்டார்.

பகவான் காப்பாற்றலையே

பகவான் காப்பாற்றலையே

விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.

அனைத்தையும் இழந்து கடைசியில் பாஞ்சாலியை வைத்து சூதாடும் போதாவது தடுத்திருக்கலாம். பகடைக்காய்களை தருமனுக்கு சாதகமாக விழும்படி செய்திருக்கலாம் அதையும் செய்யவில்லை. அப்புறம் எப்படி திரௌபதியின் மானம் காத்தேன் என்று பெருமைப்படலாம் என்று கேட்டார் உத்தவர்.

ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?' என்று கேட்டார் உத்தவர்.

தருமன் தோல்வி ஏன்

தருமன் தோல்வி ஏன்

இதைக் கேட்ட பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த

விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான் என்றான் கண்ணன். துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது.ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும்,ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்' என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,' நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்' என்று சொல்லியிருக்கலாமே? என்று கேட்டார்.

தருமனின் வேண்டுதல்

தருமனின் வேண்டுதல்

தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். நான் சூதாடும் விஷயம் ஸ்ரீகிருஷ்னுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன்மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்' என்று வேண்டிக் கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு அவனே கட்டிப் போட்டுவிட்டான்.

கூப்பிட்ட குரலுக்கு வந்தேன்

கூப்பிட்ட குரலுக்கு வந்தேன்

நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று

மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு நின்றேன். திரௌபதி மட்டும் நல்லவேளை துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், கிருஷ்ணா! அபயம் எனக் குரல் கொடுத்தாள். அவளது மானம் காக்க எனக்கு அப்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்தது உதவி செய்தேன் என்றார் கிருஷ்ணர்.

கர்மவினை

கர்மவினை

அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ வரமாட்டாயா? என்று கேட்டார் உத்தவர். உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் சாட்சிதான் நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்" என்றார் கிருஷ்ணர்.

சாட்சியாக நிற்கும் கண்ணன்

சாட்சியாக நிற்கும் கண்ணன்

அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். உதவ மாட்டாயா? தீமைகளை தடுக்க மாட்டாயா என்று கேட்டார் உத்தவர். அதற்கு கண்ணன், நான் சாட்சியாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து விடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்து விடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான்.

தேரோட்டிய கண்ணன்

தேரோட்டிய கண்ணன்

எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால் தருமன் தவறு செய்திருக்க மாட்டான் அல்லவா என்று கேட்டார் பகவான். பகவானை மறக்கும் நேரத்தில்தான் தவறு நிகழ்கிறது. இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான். குருஷேத்திர போர்க்களத்தில் அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழி நடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை.

English summary
Why did Krishna not save the Pandavas when they played dice with Duryadhana and Shakuni? Wonderful explanation by Krishna himself.Uddhava, in this life everyone’s life proceeds based on their own karma. I don’t run it; I don’t interfere in it. I am only a ‘witness’. I stand close to you and keep observing whatever is happening. This is God’s Dharma’.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X