• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

மந்த புத்தியா நரம்பு தளர்ச்சியா? புதன்கிழமையில் தீபம் ஏற்றி புதன் பகவானை வணங்குங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: நவக்கிரகங்களில் நான்காவதாக இடம் பெற்றிருப்பவர் புதன். புதன் எனும் சொல் புத்தி என்பதில் இருந்து வந்ததாகச் சொல்வர். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அத்தனை பெருமை மிக்க புதன் கிழமைகளில் புதன் ஓரைகளில் வீட்டில் விளக்கேற்றி புதன் பகவானை மனதார வேண்டிக்கொள்ள மந்த புத்தி நீங்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் இவர், அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். இவரே நரம்பின் நாயகன், மந்த புத்தி உள்ளவர்கள், நரம்பு நோய் பிரச்சினை உள்ளவர்கள் புதன்பகவானை நினைத்து வணங்க தோஷங்கள் நீங்கும்.

Lord budha removes Dementia and nervous problem worship the Lord on Wednesday

புதன் தோஷத்தையும் கிரக தோஷம் அனைத்தையும் நிவர்த்தி செய்து அருளுவார். மந்தமான புத்தியில் இருந்து சுறுசுறுப்பாக்குவார். மனோதிடம் தருவார். மனக்கிலேசம் நீக்குவார். மனோபலம் தந்தருள்வார் புதன் பகவான்.புதன் நரம்பின் நாயகன். இவர் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். புதன் நீசமாகவும், 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை, கால் வலிப்பு, நரம்புத் தளர்ச்சி, முடக்குவாதம், பய உணர்வு, சஞ்சலம், சபல புத்தி, மனநலம் குன்றுதல், காக்கை வலிப்பு, அலித்தன்மை, மறதி, நடுக்கம் போன்ற உடல் உபாதைகள் உண்டாகும்.

Lord budha removes Dementia and nervous problem worship the Lord on Wednesday

புதன் கிரகம் மிதுனம் கன்னி இரு வீடுகளுக்கு சொந்தமாகும் கன்னியில் புதன் கிரகம் உச்ச பலம் பெறுகிறது மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சி பலம் பெறுகிறது. புதன் மீனத்தில் நீச்சமாகிறது. புதன் கிரகத்திற்கு நண்பா்கள் சூாியன் சுக்கிரன். புதன் கிரகத்திற்கு நன்மை தீமை கலந்து தரும் சம கிரகங்கள் சனி குரு செவ்வாய். புதன் கிரகத்திற்கு தீமை செய்யும் பகை கிரகம் சந்திரன்.

புதன் கிழமைகளில், புதன் ஓரைகளில், வீட்டில் விளக்கேற்றி, புதன் பகவானை மனதார வேண்டிக்கொண்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம். வியாபாரத்தில் இதுவரை இருந்த நஷ்ட நிலை மாறி, லாபம் பெருகும். திருமணத்தடைகள் நீங்கும். சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும்.

Lord budha removes Dementia and nervous problem worship the Lord on Wednesday

நோய் தீர்க்கும் திருத்தலம் என்று போற்றப்படுகிறது திருவெண்காடு. இந்தத் தலத்தின் இறைவன் ஸ்வேதாரண்யேஸ்வரர். சீர்காழிக்கு அருகில் உள்ளது இந்தத் தலம். இது, நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்று. புதன் பரிகாரக் கோயில் எனும் பெருமை மிக்க திருத்தலம் இது. சந்திரனின் மைந்தன் புதன். இருவரும் திருவெண்காடு தலத்தில் தவமிருந்து, சிவனாரின் அருளைப் பெற்று, தங்களின் பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொண்டதாக விவரிக்கிறது. இங்கே உள்ள அக்கினி தீர்த்தம் விசேஷம். சூரிய தீர்த்தமும் உள்ளது. அதேபோல் சந்திர பகவான் உண்டு பண்ணிய சந்திர தீர்த்தமும் பிரசித்தி பெற்றது. இந்தத் தீர்த்தங்கள் மட்டுமின்றி, தீர்த்தக்கிணறும் இங்கே அமைந்துள்ளது.

Lord budha removes Dementia and nervous problem worship the Lord on Wednesday

புதன் பரிகாரத் திருத்தலமான இங்கே புதன் பகவானுக்கு தனிச்சந்நிதி உண்டு. புதன் கிழமையில் இங்கு வந்து வணங்குவது சிறப்புக்கு உரியது. அல்லது நம்முடைய நட்சத்திரம் கொண்ட நாளிலோ நம் குழந்தையின் நட்சத்திரத்துக்கு உரிய நாளிலோ இங்கு வந்து வணங்கி வழிபடலாம். சிவனார் ஸ்வேதாரண்யேஸ்வரை வழிபட வேண்டும். அதையடுத்து அம்பாளை வணங்கவேண்டும். நாயன்மார்கள் அறுபத்துமூவர், புத்திரகாளி, மகாவிஷ்ணு, மகாலக்ஷ்மி, சரஸ்வதி முதலானோரை தரிசித்து, அகோரமூர்த்தியை வழிபடவேண்டும். பிறகு, புதன் பகவானின் தந்தையான சந்திர பகவானை வழிபடவேண்டும். அதையடுத்து புதன் பகவான் சந்நிதிக்குச் சென்று அவரை தரிசிக்கவேண்டும்.

புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது. புதன் பகவானின் வாகனம் குதிரை. பச்சைப்பயறு புதன் பகவானுக்கு விருப்பமான நைவேத்தியம். வெண்காந்தள் மலர் கொண்டு அர்ச்சிப்பது சிறப்பு. அவருக்கான ஆபரணம் மரகதம் என்றும் அவருக்கு பாசிப்பருப்புப்பொடி கலந்த அன்னத்தால் நைவேத்தியம் செய்யவேண்டும். புதன் பகவானுக்கான உலோகம் பித்தளை என்று ஸ்தல புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

புதன் பகவானுக்கு 17 தீபங்களை ஏற்றச் சொல்கிறது ஆகமம். மனதார புதன் பகவானை வேண்டிக்கொண்டு, 17 தீபங்களை ஏற்ற வேண்டும். பின்னர் 17 முறை அவரை வலம் வந்து நமஸ்கரிக்கவேண்டும். பொதுவாக 17 முறை வலம் வருவதும் 17 முறை தீபமேற்றுவதும் அரிதான ஒன்று. இது புதன் பகவானுக்கு மட்டுமே இந்த எண்ணிக்கையில் வலம் வரவேண்டும் என்றும் தீபமேற்ற வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே 17 தீபமேற்றி வழிபடுங்கள். 17 முறை வலம் வந்து உங்கள் கோரிக்கைகளை அவரிடம் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.

ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்

என்ற மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபட புதன் தோஷத்தையும் கிரக தோஷம் அனைத்தையும் நிவர்த்தி செய்து அருளுவார். மந்தமான புத்தியில் இருந்து சுறுசுறுப்பாக்குவார். மனோதிடம் தருவார். மனக்கிலேசம் நீக்குவார். மனோபலம் தந்தருள்வார் புதன் பகவான்.

English summary
Lord bhudhan is the fourth of the new planets. The word Mercury or Budha is said to have come from Buddhi. The lazy mind will be removed to light the house on Wednesdays and pray to Lord Budha heartily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X