• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"அந்த" விசயத்தில நீங்க கில்லியா இல்லையா.. சுக்கிரன் சுகமாக இருந்தால்.. எல்லாம் சூப்பரா இருக்கும்!

|

சென்னை: தாம்பத்யத்தில் கணவன் மனைவியிடமும், மனைவி கணவரிடமும் தொற்றுப் போகத் தயாராக இருந்தால் அந்த குடும்பம் ஜெயிக்கும் என்று ஆன்மீக பெரியோர்கள் கூறுவார்கள். கணவன் மனைவி உறவு என்பது உன்னதமானதாக இருக்க வேண்டும். நட்பாக தொடங்கி காதலாக முடியவேண்டும். அதை விடுத்து சண்டை சச்சரவாக இருந்தால் அந்த வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் இருக்கவே இருக்காது. ஒருவரின் ஜாதகத்தில் களத்திரகாரகன் சுக்கிரன் நல்ல இடத்தில் வலுவாக இருந்தாலே அவர் அந்த விசயத்தில் கில்லியாக இருப்பார்களாம். அதோ போல ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் தோஷமான ஜாதகத்தினை சேர்க்க வேண்டும் என்று சொல்கின்றனர்.

இன்றைக்கு பெரும்பாலான தம்பதியர் விவாகரத்து கேட்டு நீதிமன்ற படி ஏறுவதற்குக் காரணம் தாம்பத்ய உறவு பிரச்சினைதான். தம்பதியருக்குள் சரியான புரிதல் இன்மையால் உலக அளவில் 4 சதவிகித தம்பதியினர் தாம்பத்ய உறவு இல்லாமல் காலத்தை கழிப்பதாக சொல்கிறது ஓரு ஆய்வு.
மனைவிக்கு கணவரின் மீது ஈர்ப்பு இல்லை என்றும் தாம்பத்தியத்தில் தன்னை திருப்திபடுத்துவது இல்லை என்று பகிரங்கமாக குற்றச்சாட்டை கூறி பிரிந்து விடுகின்றனர்.

சுக்கிரன் கெடும்போது அவரது முக்கிய செயல்பாடான தாம்பத்திய குறைபாடுகள் இருக்கும். ஒரு கணவன், ஒரு மனைவி என்ற நிலையை நீச சுக்கிரன் கண்டிப்பாக தடுப்பார். நீச சுக்கிரனோடு தொடர்பு கொண்ட கிரகங்களின் தசா, புக்தி நடக்கும் போது வயதிற்கு ஏற்ற வகையில் ஆணிற்கோ, பெண்ணிற்கோ தேடுதல்கள் இருக்கும். இவர்கள் தடம் புரளுவார்கள். இதுபோன்ற அமைப்பில் அவர்களுக்கு சுக்கிரன் தரும் காமத்தின் பேரில்தான் கண் இருக்குமே தவிர சுற்றுப்புறம், சமூகம் அவர்கள் கண்ணுக்கு படாது. எனவேதான் நீச சுக்கிர தசா,புக்தி அமைப்புகள் அல்லது சுக்கிரனோடு சம்பந்தப்பட்ட தசா, புக்திகள் வரும்போது ஒருவர் நிலைதடுமாறி, அவமானத்திற்கு உள்ளாகிறார்.

சனி பெயர்ச்சி 2020: சொர்ண சனீஸ்வரருக்கு யாகம் - பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள்சனி பெயர்ச்சி 2020: சொர்ண சனீஸ்வரருக்கு யாகம் - பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள்

காதல் கிரகம் சுக்கிரன்

காதல் கிரகம் சுக்கிரன்

சுக்கிரன் காதல் கிரகமாகவும், கவர்ச்சி மற்றும் பெண்ணின் மீது ஒரு ஆணுக்கு உண்டாகும் மோகத்தை குறிக்கும் கிரகமாகும். சுக்கிரன் ஒருவர் ஜாதகத்தில் 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் மலட்டு தன்மையை உண்டாக்கிவிடும். உயிரணுவை குறிக்கும் குருவும் லக்கினத்திற்கு 4,8,12ம் பாவங்களை எந்த நிலையிலும் தொடர்பு கொள்ளவே கூடாது. இது ஜாதகருக்கு கடுமையான புத்திர தோஷத்தை கொடுத்துவிடும். நரம்பிற்கு காரகனான புதனும் ஒருவரின் ஜாதகத்தில் வலிமையாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு விடும் அப்புறம் எப்படி நீடித்த இன்பம் கிடைக்கும்.

சுகத்தை கொடுக்கும் சுக்கிரன்

சுகத்தை கொடுக்கும் சுக்கிரன்

ஜாதகத்தில் வலுப்பெற்ற சுக்கிரன் சொகுசு வாழ்க்கைக்கு காரணமானவராக இருப்பார். பணத்தைக் கொடுப்பது குரு என்றாலும் அதைச் செலவு செய்ய வைப்பது சுக்கிரன். சுக்கிரன் வலுவோடு இருப்பவர்கள் நல்ல செல்வந்தராகவும், செலவாளிகளாகவும் இருப்பார்கள், சுக்கிரன் வலுவாக இருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு அழகான அனைத்தும் கிடைக்கும். அவர் நீசமாக இருக்கும் பட்சத்தில் இதற்கு எதிர்மறையான பலன்கள் நடக்கும்.

சுக்கிரன் கிரக சேர்க்கை

சுக்கிரன் கிரக சேர்க்கை

காம சுகத்தின் சூத்திரதாரி சுக்கிரன் என்றால் மிகையாகாது. தாம்பத்தியம் என்ற அளவில் சுக்கிரனே முதன்மைப்படுத்தப்படுவார். அவர் யாருடன் சேருகிறார். சுக்கிரனை யார் பார்க்கிறார் என்பதை பொருத்தும் தாம்பத்ய உறவில் சந்தோஷமோ, சோகமோ ஏற்படும். லக்னம், ராசி, மூன்றாமிடமாகிய போகஸ்தானம், ஏழாமிடமாகிய களத்திரஸ்தானம், பன்னிரெண்டாம் இடமாகிய அயனசயன ஸ்தானம் ஆகிய ஒன்றில் சுக்கிரன் இருந்து பாவிகளாகிய சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுடன் இணைவதோ அல்லது பார்வை பெறுவதோ ஒருவரின் காம உணர்வை அதிகமாக்கி விடும்.

சந்தோஷம் தரும் சுக்கிரன்

சந்தோஷம் தரும் சுக்கிரன்

ஒரு ஆண் ஜாதகத்தில் சிற்றின்ப சுகத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய சுக்கிரன் பலம் இழந்து லக்கினத்திற்கு பாதகமான 4,8,12 தொடர்பு பெற்றிருந்தால் அவரால் காம சுகத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது கம்பீரமாக தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது. மருத்துவ ஆலோசனையும் சரியான பரிகாரமும் செய்தால் மட்டுமே தாம்பத்ய உறவில் சிறக்க முடியும். இவரது மனைவி இதை உணர்ந்து ஏற்றுக்கொண்டால் ஜாதகரின் இல்லறம் சிறக்கும்.

கட்டில் சுகம் எப்படி

கட்டில் சுகம் எப்படி

ஜாதகரை சிற்றின்பத்தில் சிறக்க வைக்கும் ஐந்தாம் பாவமும், எதிர் பாலினரை வசீகரமாக ஈர்க்கும் 7ம் பாவமும் எந்த வகையிலும் லக்கினத்திற்கும், தன் பாவத்திற்கும் 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது. 11ம் பாவம் ஜாதகருக்கு முழு திருப்தியின் அளவீட்டை குறிக்கும். 12ம் பாவம் நித்திரை, மெத்தை, உறக்கம் மற்றும் கட்டில் சுகம் என்னும் யோகங்களை அனுபவிக்கும் இடம். இந்த இரண்டு பாவங்களுமே கெட்டுப்போகக்கூடாது.

கணவன் மனைவி சந்தோஷம்

கணவன் மனைவி சந்தோஷம்

காமத்தின் கதாநாயகன் சுக்கிரனின் ஜலத்தை வார்த்தைகளால் வார்த்தெடுக்க முடியாது. பலமான சுக்கிரனை ஜாதகத்தில் பெற்றவர்களின் வாழ்க்கை ஆடம்பரமாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும், ஒட்டு மொத்த இன்பத்தையும் வட்டியும் முதலுமாக பெற்றவர்கலாக இருப்பார்கள். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனும் மனைவியிடம் அதிக அன்பும் பாசமும் கொண்டிருப்பார்கள். எண்ணிய காரியங்களை எண்ணியபடியே முடிப்பதில் வல்லவர்கள். மக்கள் நலப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் ஈடுபடுவார்கள். வீடு, நிலங்கள், மாடு கன்றுகள், செல்வம், செல்வாக்கு அனைத்தும் பெற்றிருப்பார்கள்.

சுக்கிரன் செவ்வாய் கூட்டணி

சுக்கிரன் செவ்வாய் கூட்டணி

ஒருவருக்கு சுக்கிரதிசை நடக்கும் போது காம உணர்ச்சி அதிகமா இருக்கும். சுக்கிரன்தான் காமத்திற்கு பிரதான கிரகம். ரத்தகாரகன் செவ்வாய் ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தால் அந்த தசாபுத்தி காலத்தில் தடுமாற்றம் ஏற்படும். செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடலாம். கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். சுக்கிரனுடன் சந்திரன் கூட்டணி அமையப் பெற்ற ஜாதகர்கள் பெண்களிடம் பேசுவதற்கு கூச்சப்படுவார்களாம். சூரியன் சுக்கிரன் சேர்க்கை அவ்வளவாக நல்லதில்லை. இந்த கூட்டணி உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வழிபடலாம். சுக்கிரன் கேது சேர்க்கை பெற்றவர்கள் ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். விநாயகப் பெருமானை வழிபடலாம்.

ரத்த காரகன் செவ்வாய்

ரத்த காரகன் செவ்வாய்

காமத்தில் அதிக ஈடுபாடு என்பதும் காம உணர்ச்சியே அறவே இல்லாமல் இருப்பதும் அவரவர் ஜாதகத்தை பொறுத்து அமையும். சுக்கிரன் எப்படி காமத்திற்கு அதிபதியோ அதே போல செவ்வாய் என்பது வீரியத்திற்குரிய கிரகம். வீராவேசமாகப் பேசுவதிலிருந்து, விந்தணுக்களுடைய வீரியத்திலிருந்து, ஆண் குறி எழுச்சியிலிருந்து அனைத்தையும் நிர்ணயிக்கக்கூடியது செவ்வாய்தான். இயல்பு நிலை, இயக்க நிலை என்று அனைத்தையும் நிர்ணயிக்கக்கூடியது செவ்வாய். ஆண், பெண் இருபாலருக்கும் செவ்வாயினுடைய அமைப்பு நன்றாக இருக்க வேண்டும். செவ்வாய் நீச்சமாகி சுபக் கிரக பார்வை இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு காமத்தில் ஈடுபாடு இருக்காது.

தோஷத்திற்கு தோஷம் சேர்க்கை

தோஷத்திற்கு தோஷம் சேர்க்கை

செவ்வாய் தோஷம் என்றால் அது கொஞ்சம் அதிகப்படியானது என்று அர்த்தம். இதை நாம் ஒரு குறைபாடு என்று சொல்லக்கூடாது. செவ்வாய் சரியான நிலையில் இருந்துவிட்டால் பிரச்சனையில்லை. வக்ரமடைந்தாலோ அல்லது 7, 8 ஆகிய இடங்களில் இருந்தாலோ அதனுடைய சக்தி அதிகரிக்கிறது. எனவேதான் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்துடன் செவ்வாய் தோஷம் உள்ளவர்களை சேர்க்க வேண்டும் என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர். அப்பொழுதுதான் இருவருக்குமே தாம்பத்ய உறவில் சுகமும் திருப்தியும் கிடைக்கும்.

ரகசியமானது காதல்

ரகசியமானது காதல்

ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் ஒருவர்க்கொருவரை புரிந்து கொண்டு, அன்பு நேசித்து ஒருவருள் ஒருவராய் இணையும் போது அந்த மகிழ்ச்சி அலாதியானது. தாம்பத்தியம் என்கிற உடல் ரீதியான சந்தோஷம் மட்டுமல்ல. ஒருவரை ஒருவர் திருப்திப்படுத்துவதே முக்கியம். தனது மனநிறைவைவிட தன் துணையின் ஆனந்தமும், திருப்தியுமே அவசியமானது. இந்த ரகசியத்தை அனைவரும் உணர்ந்துவிட்டால் அந்த வீட்டில் ஆனந்தம் விளையாடும் என்பது நிச்சயம்.

English summary
Lord Shukra is the goddess of love, reveals much about the way we approach relationships, romance, and love. Venus is the significator of sex and physical pleasure .This is a planet of comfort, luxury, and materialism.Rahu aspects conjunct Venus in a horoscope increases the sexual hunger of the native many folds . The native becomes sexually obsessed and he tries to fulfill his desire by any hook or crook.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X