For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இசை மூலம் நோய்களை குணப்படுத்தி சுகமளிக்கும் சுக்கிரன்

நோயாளிகளின் நோயை குணப்படுத்தி் சுகமளிப்பவர் சுக்கிரன். இருட்டிற்கு வெளிச்சமளிப்பவர் சுக்கிரன். மனவருத்தில் இருப்பவருக்கு மகிழ்ச்சியை தருபவர் சுக்கிரன்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

-௮ஸ்ட்ரோ சுந்தரராஜன்

📞9498098786

சென்னை: துயரத்தில் இருப்பவரை இசையின் மூலமும் குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள். மனதிற்கு சுகமளிக்கும் இசைக்கும் சுக்கிரன்தான் காரகனாம்.

மார்கழி மாதம் பிறந்து 22 நாட்கள் ஆகிவிட்டது. இப்போதெல்லாம் மக்கள் சமீப காலங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளை மறக்க தொடங்கிவிட்டது தெரிகின்றது.

Lord Shukrans musical treatment

ஜோதிடத்தில் குணப்படுத்துதல் ( ஹீலிங்) என்ற வார்த்தையின் அதிபதி சுக்கிரன் தான். நாம் படும் பிரச்சனை அனைத்திலிருந்தும் விடுதலை தருபவர் சுக்கிரன் தானாம். கருவரை முதல் கல்லரை வரை நமக்கு பணம் தேவைபடுகிறது. பணப்புழக்கத்தை தரும் கிரகம் சுக்கிரன் என்பது நமக்கல்லாம் தெரியும்தானே! எந்தொரு பிரச்சனையின் தீர்வை உற்று நோக்கினாலும் அதில் சுக்கிரனின் பங்கு இருப்பது புரியும்.

நோயாளிகளின் நோயை குணப்படுத்தி் சுகமளிப்பவர் சுக்கிரன். இருட்டிற்கு வெளிச்சமளிப்பவர் சுக்கிரன். மனவருத்தில் இருப்பவருக்கு மகிழ்ச்சியை தருபவர் சுக்கிரன். சுகத்தினை தரும் பெண்களும் சுக்கிரன். படுக்கையும் சுக்கிரன்.

ரோமானியர்களும்கூட வீனஸ் தேவதையை (அதாங்க நம்ம ஊர் சுக்கிரன்) குணமளிக்கும் கடவுளாக போற்றுகின்றனர். அவர்களும் வீனஸ் தேவதையை தாய் மற்றும் திருமணத்திற்க்கான பெண்தெய்வமாக போற்றி வணங்குகின்றனர்.

வீனஸ் தேவதை கடல் நுரையில் தோன்றியதாக கூறுகின்றனர். நமது சுக்கிரனின் அதிதேவதையான ஸ்ரீ மகாலகக்ஷமி தாயார் பார்கடலில் உதித்ததும் பொருத்தமே அல்லவா?

துயரத்தில் இருப்பவரை இசையின் மூலமும் குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள். மனதிற்கு சுகமளிக்கும் இசைக்கும் சுக்கிரன்தான் காரகனாம்.

Lord Shukrans musical treatment

தற்போது சங்கீத சபாகளில் கூட்டம் நிரம்பி வழிவதை பார்க்கும்போது பணதட்டுபாடு, அரசியல் பிரச்சனைகள் சமீபத்திய வர்தா புயலின் தாக்கம் ஆகிய அனைத்தையும் மறந்து சிறிது சிறிதாக இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருப்பது தெரிகிறது.

இசைக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு

ஜோதிடத்திற்க்கும் இசைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என கூறுகிறார்கள். கர்நாடக சஙகீதத்தில் 12 ஸ்வரங்களை 12 ராசிகளோடு இனைத்து பார்க்கின்றனர். நவகிரகங்களில் சூரியனும் சந்திரனும் ஒரே சீரான வேகத்தில் செல்லும் கிரகங்களாகும் அதேபோல சங்கீதத்தில் ஸட்ஜா மற்றும் பஞ்சம ஸ்வரங்கள் ஒரே சீரான தாளகதியை கொண்ட ஸ்வரங்கள் என்று கூறுவதோடு அதை கடக சிம்ம ராசிகளோடு இணைக்கின்றனர்.

மீதியுள்ள பத்து ஸ்வரங்களை இரண்டிரண்டாக பிரித்து ஐந்து குழுக்களாக சவ்விய அபசவ்விய முறையில் தொகுத்து ஐந்து கிரகங்களோடு பின்வருமாரு ஒப்பிடுகின்றனர்

கன்னி ராசி - சுத்த ரிஷபம்

துலா ராசி - சதுஸ்ருதி ரிஷபம்

விருச்சிக ராசி - சாதாரண காந்தாரம்

தனுசு ராசி - அந்தர காந்தாரம்

மிதுன ராசி - காகளி நிஷாதம்

ரிஷபராசி - கைசிக நிஷாதம்

மேஷ ராசி - சதுஸ்ருதி தேவதம்

மீன ராசி - சுத்த தேவதம்

மகர ராசி - சுத்த மத்யமம்

கும்ப ராசி - ப்ரதி மத்யமம்

ஒருவர் இசையில் சிறந்து விளங்க சுக்கிரனின் பலம் ஜாதகத்தில் மிக அவசியமாகும். ஜாதகத்தில் இசையில் சிறந்துவிளங்க இரண்டாம் வீடு மூன்றாம் வீடு, ஏழாம் வீடு,சுக்கிரன் புதன் பலம் பெற்று இருக்க வேண்டும். சாதாரன பேச்சிற்க்கு வாக்கு ஸ்தான பலமும் புதபலமும் போதும். ஆனால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் இசையில் சிறந்து விளங்க லக்கினம் சுக்கிரனின் வீடாக அமைவது அல்லது வாக்கு ஸ்தானம் சுக்கிரனின் வீடுகளாக அமைவது முக்கியம்.

Lord Shukrans musical treatment

அனைவரையும் தனது இசையால் கட்டிபோடும் மறைந்த எம்.எஸ் சுப்புலட்சுமி அம்மையாரின் ஜாதகத்தில் துலா லக்னமாக அமைந்து புதன் கன்னியில் அட்சி பெற்று லக்னாதிபதி சுக்கிரன் பத்தாமிடத்தில் நின்று இருப்பதிலிருந்து சுக்கிரனின் முக்கியத்துவத்தை உணரமுடியும்.

மழைக்கும் காரண கிரகம் சுக்கிரனை. அம்ருத வர்ஷினி ராகத்தை இசைத்து மழையை கூட வரவைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.

ராகங்களின் பயன்கள்:

அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் - பூபாளம்

அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் - மலையமாருதம், சக்கரவாகம்

சிறுநீரகப் பிரச்சனை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி

கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய - அரிகாம் போதி

மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட - ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா, நீலாம்பரி

மனம் சார்ந்த பிரச்சனை தீர - அம்சத்வனி, பீம்பிளாஸ்

இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் - சந்திரக கூன்ஸ்

நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் - பகாடி,ஜகன் மோகினி

பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம்-அடான

மனதை வசீகரிக்க, மயக்க - ஆனந்த பைரவி , உசேனி, கரகரப்பிரியா

சோகத்தை சுகமாக்க - முகாரி , நாதநாமக்கிரியா

பாம்புகளை அடக்குவதற்கு - அசாவேரி ராகம்

வாயுத்தொல்லை தீர - ஜெயஜெயந்தி ராகம்

வயிற்றுவலி தீர - நாஜீவதாரா

எந்தகோவிலுக்கு செல்வது

சங்கீதத்தில் சிறந்துவிளங்க விரும்புபவர்கள் வணங்க வேண்டிய திருத்தலம் திருமரைக்காடு எனப்படும் வேதாரன்யம் ஆகும் இங்குள்ள அம்பாளின் திருநாமம் வீணா வாதவிதூஷனி எனும் வேதநாயகியாகும். இந்த அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணைநாதத்தை தோற்கடிக்குபடி இனிமையாக இருந்ததால் இந்த பெயர் ஏற்பட்டது. மேலும் சுக்கிர ஸ்தலங்களையும், ஸ்ரீ மகாலக்ஷமி வழிபாடும்,சப்த கன்னியரில் இந்திரானி வழிபாடும் இசையில் சிறந்த தேர்ச்சியும் புகழும் அடைய செய்யும்.

English summary
Lord Shukran treats the patients with music and music heals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X