For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையும் காதல் ஹார்மோன்கள் செய்யும் வித்தையும்

காதலுக்கும் ஹார்மோன்களுக்கும் எந்த அளவிற்கு தொடர்பு இருக்கிறதோ அதே போல ஒருவர் காதல் வயப்படுவதற்கும் நவகிரகங்களின் சஞ்சாரத்திற்கும் தொடர்பு இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை என்று பாடுவார்கள் காதல் வயப்பட்டவர்கள். காதலில் மோக நிலையில் ஆரம்பித்து பித்து நிலை வரை சென்று மீண்டவர்கள் இருக்கிறார்கள். காதலில் விழுந்து திருமணம் வரை சென்றவர்களும் இருக்கிறார்கள். காதல் ஹார்மோன்கள் ஒருவருக்குள் சுரக்கும் போது மனதிற்கு பிடித்த நபரை பார்த்த உடன் ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. இந்த காதல் ஹார்மோன் சுரக்கவும், காதலில் விழவும் காதல் கிரகங்களின் சேர்க்கையும் பார்வையும்தான் காரணமாக இருக்கின்றன.

காதல் என்ற மூன்றெழுத்தை எல்லோருமே டச் செய்திருப்பார்கள். ஏதாவது ஒரு கட்டத்தில் காதலை கடந்து வந்திருப்பார்கள். இந்த காதல் செய்யும் மாயங்களுக்குக் காரணம் பால் உணர்வுகளை தூண்டும் டெஸ்டோஸ்டிரோன்,ஈஸ்ட்டோஜென் ஹார்மோன்கள்தான். ஆண் பெண் ஆகிய இருவரின் பாலியல் உணர்வுகளிலும் பெரும் பங்கு வகிக்கிறது இந்த ஹார்மோன்.

கண்களால் கண்டு ஒருவரை ஒருவர் பார்த்து பேசி ஒருவித ஈர்ப்பு ஏற்பட்ட பின்னர் காதல் கனவுகளில் மூழ்கியிருப்பார்கள். இந்த கால கட்டத்தில்தான் டோனோமைன்கள் எனப்படும் நரம்புகளில் செய்திகளை கடத்தும் ஹார்மோன்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது.

செரடோனின் ஹார்மோன் செய்யும் மாயம் - மனச்சோர்வை தடுத்து மகிழ்ச்சியை அதிகரிக்கும் செரடோனின் ஹார்மோன் செய்யும் மாயம் - மனச்சோர்வை தடுத்து மகிழ்ச்சியை அதிகரிக்கும்

காதல் பயம்

காதல் பயம்

காதலிக்க ஆரம்பித்து விட்டாலே ஒருவித படபடப்பு பற்றிக்கொள்ளும். இதய துடிப்பு அதிகமாகும், வியர்வை ஊற்றெடுக்கும். காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் அந்நியர்களுக்கு தெரிந்து விடுமோ என்ற பயத்தை கொடுக்கும் இதற்குக் காரணம் அட்ரினலின் என்ற ரசாயனம்தான்.

காதல் ஹார்மோன்

காதல் ஹார்மோன்

காதலிப்பவர்களுக்கு நம் ஹீரோ செரோட்டானின் ஹார்மோன் வேலை தொடங்குகிறது. இது சுரக்கும் போது மகிழ்ச்சி அதிகரிக்கும் காதலை திகட்ட திகட்ட அனுபவிக்க வைத்து ஒருவித பித்து நிலைக்கு கொண்டு செல்வார்கள். ரிஷபம் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கும் ரிஷபம், துலாம் ராசியில் சுக்கிரன் சுகமாக ஆட்சி பெற்றிருப்பவர்களுக்கும் இந்த செரட்டோனின் சுரப்பு அதிகமாக இருக்கும். உருகி உருகி காதலிப்பார்கள்.

காதல் பிணைப்பு

காதல் பிணைப்பு

ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரப்பு தம்பதியர் இடையே உச்சக்கட்ட காதலில் சுரக்கிறது. காதலர்கள், தம்பதியர்களிடையே பிணைப்பை அதிகரிக்கிறது. இதன் மூலம் தம்பதியருக்கு இடையேயான பிணைப்பு ஆழமாகிறது. இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோன் ஹைபோதாலமஸ் என்ற சுரப்பி மூலம் சுரக்கிறது. பெண்களுக்கு பிரசவகாலத்தில் உற்பத்தியாகும் இந்த ஹார்மோன்தான் தாய்பால் சுரக்க காரணமாகிறது. தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒருவித பற்று பந்தம், பிணைப்பு ஏற்பட காரணமாவதும் இந்த ஹார்மோன்தான்.

சுக்கிரன் சந்திரன் கூட்டணி

சுக்கிரன் சந்திரன் கூட்டணி

சரி ஜோதிடப்படி நவகிரகங்கள் இந்த ஹார்மோன்களை எப்படி கட்டுப்படுத்துகின்றன என்று பார்ப்போம். இதில் செரடோனின் ஹார்மோனை கட்டுப்படுத்துவது காதல் நாயகன் சுக்கிரன் என்றால் ஆக்ஸிடோசின் ஹார்மோனை கட்டுப்படுத்துவது மனோகாரகன் சந்திரன். காரணம் ஆக்ஸிடோசின் தாய் பாசத்தை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோன். மன ரீதியாக காதலர்களிடையே ஒருவித பிணைப்பை ஏற்படுத்தும் ஹார்மோன்.

காதல் கிரகங்கள்

காதல் கிரகங்கள்

ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை காதல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்யும். செவ்வாய் போர் கிரகம். துணிச்சலை தூண்டுபவர். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் வலிமையாக இருந்தால் எப்பாடு பட்டாவது காதலில் வெற்றி பெறுவார். ஜாதகத்தில் இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சூரியன் இருந்தால் அட்ரீனலின் சுரப்பு அதிகமாகும் தொட்டதெற்கெல்லாம் கோபம் வரும். காதலிக்கும் போது காதலை விட அதிக சண்டைதான் போடுவார்கள். இதனால் மன அழுத்தம்தான் அதிகமாகும்.

சிரிக்க சிரிக்க பேசுங்க

சிரிக்க சிரிக்க பேசுங்க

காதலிக்கும் போது ஸ்வீட் நத்திங்ஸ் எனப்படும் பேச்சுக்கள் தேவை. அதுதான் என்டோர்பின் எனப்படும் ஹார்மோனை சுரக்கச் செய்யும். காதலிக்கும் போது கட்டளை இடுவதை கனிவாக பேசினால் காதல் இனிக்கும். சிரிக்க சிரிக்க பேசுங்கள். காதலி அல்லது காதலனை சிரிக்க வையுங்கள். மன அழுத்தத்தை குறைக்கச் செய்யும் என்டோர்பின் சுரப்பு அதிகரிக்கும். செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை ஜாதகத்தில் சரியான இடத்தில் இருந்தாலும் காதல் இனிக்கும்.

English summary
The neurotransmitter serotonin is an off switch for stressors that affect our social behaviour. Higher serotonin levels are also associated with an increase in oxytocin, the so-called love hormone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X