காதலை தூண்டும் கிரகங்கள்... திருமண பொருத்தத்தில் எவை முக்கியம் - ஜோதிட சூட்சுமங்கள்
சென்னை: பத்து பொருத்தம் பார்த்து திருமணம் முடித்து வைத்தும் கணவன் மனைவிக்குள் ஒருவித அந்நியோன்னியம் எதுவும் இல்லாமல் சிலர் குடும்பம் நடத்துவார்கள். அதற்குக் காரணம் அவர்களுக்கு முக்கியமான பொருத்தங்கள் பொருந்தி வருகிறதா என்று பார்க்காமல் விட்டிருப்பார்கள். சுக்கிரன், செவ்வாய் ஜாதகத்தில் எந்த நிலையில் இருக்கிறது என்றும் பார்க்க வேண்டும்.
சூரியன், சந்திரன் பார்வைக்குரிய கிரகங்கள். ஆனால், காம உணர்வுகளைத் தூண்டக்கூடிய கிரகம் சுக்ரன்தான். இதுதான் பாலியல் இந்த உணர்வுகளுக்கெல்லாம் காரணகர்த்தா.
சென்னையில் ஓடஓட விரட்டி பைனான்சியர் கொலை.. பட்டப்பகலில் 6 பேர் வெறிச்செயல்.. பதறவைக்கும் சம்பவம்
அடுத்து, புணர்ச்சி, உணர்ச்சி, வேகம், செயல்பாடு இதற்கெல்லாம் உரிய கிரகம் செவ்வாய். எவ்வளவு நேரம், எப்படிப்பட்டது என்பதெல்லாம் நிர்ணயிப்பது செவ்வாய். இப்படி பல கிரகங்கள் அதில் அடங்கிக் கிடக்கிறது.

சுக்கிரன்
வாலிபத்தில் இருக்கும் காமம் கூட முறையாக செய்கிறது. ஆனால் வாலிபத்தை தாண்டி தனக்கு பிறந்த பெண்ணோ, பிள்ளையோ மணமுடிக்ககூடிய அளவிற்கு இருக்கும் போது பலருக்கு காம உணர்வு அதிகரிக்கும்.
சுக்கிரன்தான் காமத்திற்கு பிரதான கிரகம். அதனாலதான் சுக்கிரனில் இருந்து நீட்சமானாலோ, தவறான கிரகங்களில் சேர்ந்திருந்தாலோ முறையற்ற சேர்க்கைகள் ஏற்பட காரணமாகும்.

திருமண பந்தம்
காமத்தை முறையான சமூக அங்கீகாரத்துடன் திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற உயரிய கொள்கையோடு வெளிப்படுத்த சமூக அங்கீகாரம் கிடைக்கிறது. ஒரு சிலர் இந்த சமூக வரம்பை உடைத்தெறிய அவனது சாதகத்தில் உள்ள கிரக அமைப்பு ஒரு காரணமாகிறது. ஒருவரது காம வாழ்க்கையைப்பற்றி அறிய நமது சித்தர்களால் உருவாக்கபட்ட கட்டங்கள் முன்றாமிடம், நான்காமிடம், ஐந்தாமிடம், ஏழாமிடம் மற்றும் 12ஆம் இடம் போன்றவை ஆகும். இதேபோல காமநிலைகள் பற்றி அறிய கிரகங்களில் மங்களகாரகன் செவ்வாயும்,களஸ்திரகாரகன் சுக்கிரனும் ஆகும்.

நடத்தையை சொல்லும் கிரகங்கள்
ஒருவனது காம உறவின் வீரியத்தன்மையை அவனது மூன்றாம் வீட்டிலிருந்து அறியப்படுகிறது.சிலர் தனது இணையை திருப்தி படுத்த இயலாமைக்கு காரணம் அவனது மூன்றாமிடமும் அதன் அதிபதியும் பலவீனப்பட்டிருப்பது ஒரு காரணமாகிறது. சிலரது அந்தரங்க வாழ்வை பற்றி தெரிந்து கொள்ள நான்காமிடம் முக்கியமானதாகும்.ஒருவரது சாதகத்தில் நான்காமிடம் மற்றும் அதிபதிகளை ஆராய்சி செய்து பார்த்தாலே அவரது கற்புநிலை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை
நான்காமிடத்தில் சனி+செவ்வாய்,செவ்வாய்+சுக்கிரன் ,செவ்வாய்+ராகு ,சுக்கிரன்+ராகு இதுபோன்ற சேர்க்கைகள் ஆகாது எனினும் இதுபோன்று நான்காமிடத்தில் இணைந்துள்ளதை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரை தவறாக எடைபோடக்கூடாது.நான்காமாதிபதி சுபராக இருக்கும்பட்சத்திலோ அல்லது சுபர் பார்வை பெற்றால் பலன்கள் மாறுபடும். நான்காமிடத்தைக் கொண்டு காம சுகத்தை பெறக்கூடிய யோகத்தையும் மற்றும் அவனது அந்தரங்க வாழ்வினை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். ஒருவரது சிற்றின்பம்,காமம் மற்றும் காதல் போன்ற கற்பனை உணர்வை வளர்க்க கூடிய இடம் அவனது ஜாதக கட்டத்தில் ஐந்தாமிடமே ஆகும்.

மனைவி சொல்லோ மந்திரம்
ஒருவன் அழகுணர்ச்சியோடு காதல் கவிதைகள் ,கதைகள் மற்றும் பாடல்கள் இயற்றும் கவிஞராவதற்கும்,
காமம் ததும்பும் கதைகள்,கவிதைகள் மற்றும் பாடல்கள் எழுதும் கவிஞனாவதற்கும் , ஒரு சிலர் உடல் கவர்ச்சியால் காதலில் விழுவதற்கும், மனைவி சொல்லே மந்திரம் என பார்ப்பதற்கும் இந்த ஐந்தாமிட கிரகநிலைகளே காரணமாகும்.
ஒருவனது கணவன் மற்றும் மனைவிகளுக்கிடையே உள்ள தாம்பத்ய உறவுநிலையும்,தொடுவதால் உண்டாகும் ஸ்பரிச நிலையும்,ஒரு பெண்ணோ அல்லது ஆணோ தனக்கு இணையானவர்களை உறவாக்கி கொள்ளும் நிலையும் அவரது சாதககட்டத்தில் ஏழாமிடத்தை கொண்டு அறியலாம். ஒருவருக்கு படுக்கை சுகத்தை பற்றி அறிந்து கொள்ள 12ஆம் இடத்தைக் கொண்டும் அறியலாம்.

குருவின் பார்வை
ஒருவனது அலித்தன்மையைப்பற்றி அறிய புதன் பகவான் முக்கியம் ஆகும். புதனும்,சனியும் சமசப்தமாக பார்த்துக்கொண்டால் சாதகருக்கு அலிதன்மை உண்டு என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஆனால் இதில் விதிவிலக்கு உண்டு . பலருடைய ஜாதகங்களில் சனியும்,புதனும் சமசப்தாமாக பார்த்துக்கொண்டுள்ள பலருக்கு குழந்தை பாக்கியம் இருப்பதை பார்த்திருக்கிறேன். அது குருவின் பார்வையால் கிடைத்திருக்கும்.

இத்தனை பொருத்தமும் அவசியம்
எனவே பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும் பெற்றோர்கள் இதுபோன்ற நிலைகளை நல்ல ஜோதிட ஞானம் நிறைந்த ஜோதிடர்களை கொண்டு விவாக பொருத்தம் பார்க்கும்போது அறிந்துகொண்டு தம்பதிகளை இணைக்கவேண்டும். இந்த காம உறவு நிலைகளை பற்றி அறிய விவாக தசவதப்பொருத்தத்தில் யோனிப்பொருத்தம்,வசியப்பொருத்தம் மற்றும் பால்பொருத்தம் என மூன்று வித பொருத்த நிலைகள் உள்ளன. எனவே திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது இந்த பொருத்தங்களை எல்லாம் பார்த்து முடிவு செய்வது நல்லது.