For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சந்திர கிரகணம்: தானம் செய்தால் தோஷமில்லை

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்தி பரிகாரம் செய்ய வேண்டும்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ?- வீடியோ

    -ஜோதிடர் ஸ்ரீரங்கம் ரமேஷ் குரு

    சென்னை: சந்திர கிரகண நாளில் ஏழை ஒருவருக்கு பச்சை அரிசி 2 கிலோ, வெள்ளை துண்டு தானம் செய்யவும். பசு மாட்டிற்கு வெல்லம் கலந்த பச்சை அரிசி மற்றும் பழங்கள் அளித்தால் தோஷங்கள் நீங்கும்.

    சந்திர கிரகணம் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி இன்று மாலை 6.18 மணிக்கு ஆயில்யம் நட்சத்திரத்தில் துவங்குகிறது. கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், மகம். இந்த 5 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி பரிகாரம் செய்ய வேண்டும். ஆயில்யம் நட்சத்திரத்தில் நிகழும் கிரகணம் மாலை 8.41 மணிக்கு முடிவடைகிறது.

    Lunar eclipse 2018: Chandra grahanam remedies

    கிரகணம் முடிந்தபின் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவில்கள் திறந்து இருந்தால் பின்வரும் சாந்தி பரிகாரங்களை முன்னால் சொல்லப்பட்ட 5 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செய்யலாம். அல்லது அடுத்த நாள்(வியாழன்) அன்று செய்யலாம்.

    கிரகணம் முடிந்தபின் குளித்துவிட்டு வீட்டில் பூஜை செய்தபின், அருகில் உள்ள கோவிலில் உள்ள நவகிரக சன்னதியில் சந்திர பகவானுக்கு அர்ச்சனை செய்யவும். பின்னர் கோவில் அர்ச்சகருக்கு பச்சை அரிசி 2 கிலோ, வெள்ளை துண்டு தானம் அளிக்கவும்.

    ஏழை அல்லது குறைந்த வருமானம் உள்ள ஒருவருக்கு பச்சை அரிசி 2 கிலோ, வெள்ளை துண்டு தானம் செய்யவும். பசு மாட்டிற்கு வெல்லம் கலந்த பச்சை அரிசி மற்றும் பழங்கள் அளிக்கவும்.

    உங்கள் ஊரில் உள்ள புராதனமான பெருமாள் (மகாவிஷ்ணு) கோவிலுக்கு சென்று பெருமாளுக்கு அர்ச்சனை செய்யவும். சிவன் கோவில் சென்று ஸ்ரீ சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யவும்.

    சாந்தி பரிகாரங்களைச் செய்தால் கிரகண தோஷம் பாதிக்காது. நல்லது நடக்கும். புனர்பூசம், அனுஷம், உத்திரட்டாதி உட்பட மற்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கிரகண தோஷம் கிடையாது.

    அனைத்து ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரகண நேரத்தில் பின்வருவனற்றை செய்வது நல்லது. அதிகமான சுப பலன்கள் கிடைக்கும். கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்கவும்.

    வீட்டில் கிரகண காலத்தில் செய்யப்படும் தெய்வ வழிபாடு அதிக சக்தி உள்ளது. வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்யவும்.

    ஆன்மிக புத்தகங்கள் மற்றும் மந்திரங்கள் படிக்கவும். தேவாரம், திருவாசகம், கந்த ஷஷ்டி கவசம், விஷ்ணு புராணம், சிவ புராணம், விநாயகர் அகவல், விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கலாம்.

    கிரகண காலத்தில் பின்வரும் ஸ்ரீ ராம நாமம், சிவ நாமம் மற்றும் பெருமாள் நாமங்களைச் சொல்வது சிறப்பான பலன்களை அளிக்கும். உங்கள் வாழ்கை மற்றும் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

    English summary
    The Rahu/Ketu engulfs the Moon on an Lunar Eclipse or Chandra Grahan. chandra grahanam remedies part as per traditional astrology system.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X