For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திர கிரகணம்: ரத்த நிலாவை ஜூலை 27ல் வானத்தில் வேடிக்கை பார்க்கப் போவது யார் ?

ஜூலை 27 ஆம் தேதியன்று இரவு வானத்தில் நிகழ உள்ள சந்திர கிரகணத்தை பார்க்கப் போகும் அதிர்ஷ்டசாலிகள் யார் யார் என்று பார்க்கலாம்.

Google Oneindia Tamil News

டெல்லி: வானத்தில் நிகழ உள்ள அதிசய நிகழ்வான முழு சந்திர கிரகணத்தை ஜூலை 27ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, சவுதி அரேபியாவில் தெளிவாக பார்க்கலாம் எனவும், எகிப்து நாட்டின் கெய்ரோ, கிரீஸ், ஜிம்பாப்வே நாடுகளில் தெளிவாக காண முடியும் என்று வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று வானத்தில் வேடிக்கை நிகழ உள்ளது. ரத்த சிவப்பு நிலவாக முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இம்முறை சந்திரன், பூமி மற்றும் சூரியன் எல்லாம் ஒரே கோட்டில் சந்திக்கவிருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் சந்திரன் சரியான நேர்கோட்டில் வராததால் முழுமையான சந்திர கிரகணம் நிகழாது. ஆனால் இந்த முறை சந்திர கிரகணமானது முழுமையான நேர் கோட்டில் நிகழ உள்ளது.

இம்முறை மழைக்காலம் என்பதால், சந்திர கிரகணத்தை பார்க்கும் போது, மேகங்கள் இடையூராக இருக்கலாம். மேலும் நம்மால் சந்திரனில் இருந்து பார்க்க முடிந்தால் பூமி சூரியனை மறைப்பதை பார்க்க முடியும் என்கிறார் டெல்லி விண்வெளி ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த அஜய் தால்வர்.

முழு சந்திர கிரகணம்

முழு சந்திர கிரகணம்

கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதியன்று முழு சந்திர கிரகண நிகழ்வு ஏற்பட்டது. இந்தாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட இந்த சந்திர கிரகணத்தை இந்தியா, ஐரோப்பிய நாடுகள், ஹவாய், கனடா ஆகிய நாடுகளை சேர்ந்த மக்கள் கண்டு ரசித்தனர்.

ரத்த சிவப்பு நிலா

ரத்த சிவப்பு நிலா

ஜூலை 27 மற்றும் 28ம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் இதுவாகும். கடந்த முறையை விட பெரிய அளவிலான இந்த சந்திர கிரகணம், 1 மணி 43 நிமிடங்கள் காட்சியளிக்கும் என தகவல் வெளியாகிஉள்ளன.

டெல்லியில் ரசிக்கலாம்

டெல்லியில் ரசிக்கலாம்

ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றவுள்ள இந்த சந்திர கிரகணம் வடக்கு ஆப்ரிக்காவின் கெய்ரோவில் இரவு 9.30 மணிக்கு தெரியும். மாஸ்கோவில் 10.30 மணிக்கும் டெல்லியில் இரவு 10.44 மணிக்கும் கிரகணம் தெரியத் தொடங்கும் என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சந்திர கிரகணம் தெரியும் நாடுகள்

சந்திர கிரகணம் தெரியும் நாடுகள்

இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, மத்திய ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் முழு சந்திர கிரகணத்தை தெளிவாக பார்க்க முடியும். ஜூலை 27 ஆம் தேதி சூரிய அஸ்தமனம் ஆன பின்னர், தென் அமெரிக்காவில் சில நாடுகளில் லேசாக கிரகணம் தென்படும்.

பார்த்து ரசிக்கலாம்

பார்த்து ரசிக்கலாம்

நியூசிலாந்தில் 28ஆம் தேதி சூரிய உதயத்திற்கு முன்னதாக சந்திர கிரகணம் தென்படும். ஈரான், சூடான், மடகாஸ்கர், ஈராக், துருக்கியின் சில பகுதிகளிலும் கசகஸ்தான், உக்ரெய்ன் நாடுகளிலும் கிரகணத்தை பார்க்க முடியும்.

நள்ளிரவில் ரத்த நிலா

நள்ளிரவில் ரத்த நிலா

இந்தியாவில் இரவு 10.44 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கினாலும் நள்ளிரவு 1 மணிக்குதான் முழு சந்திர கிரகணம் தென்படும். ரத்தச் சிவப்பாக வானத்தில் காட்சியளிக்கும் நிலவை நாடு முழுவதும் ரசிக்க தயாராகுங்கள் மக்களே.

English summary
The total eclipse will begin everywhere approximately at the same time, but the time of its visibility will vary widely depending on its timeline, from 9.30 pm in Cairo (North Africa) and 10.30 pm in Moscow (Eastern Europe) to 10.44 pm in Delhi (South Asia).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X