For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விளம்பி ஆண்டின் மிக நீண்ட முழு சந்திரகிரகணம் - எந்த நட்சத்திரக்காரர்களுக்கு பரிகாரம்

விளம்பி ஆண்டு ஆடி மாதம் 11ஆம் தேதி ஜூலை 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்தியாவின் மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழ உள்ளது. பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

Google Oneindia Tamil News

சென்னை: ஆடி மாதம் 11ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை உத்திராடம், திருவோணம் நட்சத்திரங்களில் நிகழும் கேது கிரஹஸ்த முழு சந்திர கிரஹணம் இந்தியாவில் நன்றாக தெரியும்.

சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப்பாதையில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது படுகிறது. இதனால் முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதியன்று முழு சந்திர கிரகண நிகழ்வு ஏற்பட்டது. இந்தாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட இந்த சந்திர கிரகணத்தை இந்தியா, ஐரோப்பிய நாடுகள், ஹவாய், கனடா ஆகிய நாடுகளை சேர்ந்த மக்கள் கண்டு ரசித்தனர்.

இந்த சந்திர கிரகணகத்தின்போது சூப்பர் மூன், புளூ மூன் ஆகிய நிகழ்வுகள் ஏற்பட்டன. சந்திரன் வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் பிரகாசமாக தெரிவதே சூப்பர் மூன் எனப்படும்.

மிக நீண்ட சந்திர கிரகணம்

மிக நீண்ட சந்திர கிரகணம்

இந்தாண்டின் தொடக்கத்தில் முழு சந்திர கிரகணம் தெரிந்த நிலையில், வருகிற ஜூலை 27 மற்றும் 28-ம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சந்திர கிரகணம் தோன்றவுள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் இதுவாகும். கடந்த முறையை விட பெரிய அளவிலான இந்த சந்திர கிரகணம், 1 மணி 43 நிமிடங்கள் காட்சியளிக்கும் என தகவல் வெளியாகி உள்ளன.

சிவப்பு நிலா

சிவப்பு நிலா


ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றவுள்ள இந்த சந்திர கிரகணம் ஜூலை 27ஆம் தேதியன்று சூரிய அஸ்தமன நேரத்துக்கும் நள்ளிரவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் சந்திர கிரகணம் தெரிய வாய்ப்பு உள்ளது.

 எப்போ தொடங்கி எப்போ முடியும்

எப்போ தொடங்கி எப்போ முடியும்


27-07-2018 இரவு 11.53 க்கு கிரஹணம் ஆரம்பம். நள்ளிரவு 12.59க்கு முழு கிரஹண ஆரம்பம். முழு கிரஹண மத்தி ஜூலை 28ஆம் தேதி நள்ளிரவு 1.51வரை நீடிக்கிறது. நள்ளிரவு 2.43க்கு முழு கிரகணம் முடிவடைகிறது. இது மிக நீண்ட முழு சந்திர கிரகணமாகும்.

இந்தியாவில் தெரியும்

இந்தியாவில் தெரியும்

ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா கண்டங்களிலும் நியூசிலாந்திலும் தெளிவாக தெரியும். வட அமெரிக்கா, ஆர்டிக்-பசிபிக் பகுதிகளில் இந்த சந்திரகிரகணம் தெரியாது. ஆசியா, ஆஸ்திரேலியாவில் காலை நேரத்திலும், ஐரோப்பா, ஆப்ரிக்காவில் மாலை நேரத்திலும் இந்த சந்திர கிரகணம் தெரியும்.

எந்த நட்சத்திரக்காரர்களுக்கு பரிகாரம்

எந்த நட்சத்திரக்காரர்களுக்கு பரிகாரம்

ஆடி 11ஆம் தேதியன்று சந்திர கிரஹணம் ஏற்பட உள்ளதால் பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், கிருத்திகை, ரோகிணி, உத்திரம், ஹஸ்தம், நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். கிரகணம் முடிந்த பின்னர் குளித்து கோவிலுக்கு சென்று விட்டு வந்து சாப்பிடலாம்.


English summary
The July 2018 lunar eclipse is a rare central lunar eclipses, where part of the Moon passes through the center of the Earth’s shadow. It is also the longest total lunar eclipse this century, lasting 1 hour and 23 minutes. This powerful total lunar eclipse is also called a blood moon because of the reddish color caused by light being refracted by Earth’s atmosphere.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X