For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா 48 நாட்கள் கோலாகலம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மாசி மண்டல திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 48 நாட்கள் நடைபெறும் இந்த மாசி மண்டல விழாவில், அறுவடை காலம் முடிந்த பின்னர், மாசி மாதத்தில் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களை

Google Oneindia Tamil News

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் மாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வருடம் முழுவதும் திருவிழா நடைபெறுகிறது. சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. தை பூசத்தை முன்னிட்டு மாரியம்மன் தெப்பத்திருவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து மீனாட்சியம்மன் கோயிலில் மாசி மக கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்த திருவிழா 48 நாட்கள், அதாவது ஒரு மண்டலம் நடைபெறும். தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வலம் வருவார்கள்.

சுவாமி சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். காலை மற்றும் மாலை நேரங்களில் சித்திரை வீதிகளில் அம்மன், சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடையுடன் வலம் வருகின்றனர்.
அடுத்த 10 நாட்கள் பஞ்சமூர்த்திகள் சித்திரை வீதியில் உலா வருகின்றனர். அடுத்த 9 நாட்கள் மௌன உற்சவ உலா. 3 நாட்கள் சந்திரசேகரர் , 3 நாட்கள் சுவாமி உலா, 3 நாட்கள் சண்டிகேஸ்வரர் உலா நடைபெறுகிறது.

Maasi Festival 2020 begins with Flag hoisting today

கணக்கு வாசித்தல்

மார்ச் 18ஆம் தேதி பிரதான கொடியிறக்கி கணக்கு வாசித்தல் நடைபெற்று உற்சவம் நிறைவடையும். மார்ச் 18ஆம் தேதி கணக்கு வாசித்தல் உள்ளதால் கோயில் சார்பாகவும், உபயமாகவும், மீனாட்சி அம்மனுக்கு உபய தங்கரதம் உலா மற்றும் உபய திருக்கல்யாணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் பதிவு செய்து நடத்திட இயலாது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maasi Festival 2020 begins with Flag hoisting today

மூங்கிலனை காமாட்சி அம்மன்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள தலமாகும். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இங்குள்ள காமாட்சி அம்மனை குலதெய்வமாக வழிபடுவது வழக்கம். அதே போல் மூடப்பட்ட கதவுகளுக்கே இந்தக் கோயிலில் பூஜைகள் நடைபெற்று வருவது இன்னொரு சிறப்பாகும். மிகவும் சிறப்பு வாய்ந்த பழமையான இத்திருக்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் மாசி மகா சிவராத்திரி திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
இதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா வரும் 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Maasi Festival 2020 begins with Flag hoisting today
English summary
Maasi Festival 2020 begins with Flag hoisting today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X