For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை சித்திரைத் திருவிழா.. மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்.. கோலாகல தொடக்கம்

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்றாலும் சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்றது . அந்த வகையில் சிறப்பு பெற்ற சித்திரை திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது .

முன்னதாக கோயில் கம்பத்தடி மண்டபம் கொடி மரம் முன்பு அருள்மிகு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கி காலை 10 . 05 மணிக்கு மேல் 10 . 20 மணிக்குள் மிதுன லக்னத்தில் தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Madurai Chithirai Festival begins

மதுரையில் சித்திரை திருவிழா துவங்கியதையடுத்து தினமும் காலை , மாலை என இரு வேளையும் மீனாட்சி அம்மனும் , சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளையும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 15 - ம் தேதி இரவு 8 மணிக்கு அம்மன் சன்னதியில் ஆறுகால் மன்டபத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிவேகமும் ,

16 - ம் தேதி திக்விஜயபமும் நடைபெறும்.

Madurai Chithirai Festival begins

ஏப்ரல் 17-ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், வரும் 18ம் தேதியன்று காலை மாசி வீதிகளில் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது . இந்நிலையில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா தொடர் நிகழ்வாக மதுரை அழகர் மலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் 19- ம் தேதி காலை நடை பெறுகிறது.

ஸ்ரீ ராம நவமி 2019: கும்பகோணம் ராமசாமி கோவிலில் கொடியேற்றம் - ஏப்ரல் 14ல் தேரோட்டம் ஸ்ரீ ராம நவமி 2019: கும்பகோணம் ராமசாமி கோவிலில் கொடியேற்றம் - ஏப்ரல் 14ல் தேரோட்டம்

முன்னதாக. கள்ளழகருக்கு வரும் 18 மாலை மதுரை மூன்றுமாவடி, தல்லாகுளம் பகுதியில் எதிர் சேவை நடக்கிறது. மதுரையில் தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் கூடும் சித்திரை திருவிழாவும் துவங்கியுள்ளதையடுத்து மதுரை நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.

Madurai Chithirai Festival begins

வரும் 18- ம் தேதி காலை மீனாட்சி தேரோட்டம் மற்றும் மாலை கள்ளழகர் எதிர்சேவை நிகழ்வுகள் காரணமாக மதுரை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு 6 மணியில் இருந்து 8 மணிவரை கூடுதலாக 2 மணி நேரம் நீடிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடதக்கது.

English summary
Chithirai Festival has begun in Madurai with flag hoisting in Meenakshi Amman Temple this morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X