For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகா சிவராத்திரி 2021 எப்போது? ஐந்து வித சிவராத்திரிகள் என்னென்ன ? - விரத முறைகளும் பலன்களும்

மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவுதான் மகாசிவராத்திரி ஆகும். மாதம் தோறும் வரும் சிவராத்திரியை மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. சிவராத்திரிகள் ஐந்து விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன;

Google Oneindia Tamil News

மதுரை: மகாசிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை மகாசிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சித்தர்கள். இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 11ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்த ரகசியம் ஆகும்.

பல சதுர்யுகங்கள் முடிந்து, பல கல்பங்கள் முடிந்து, இதில் வரும் இரவுகள் அனைத்திலும் அன்னை பராசக்தி ஈசனை பூஜை செய்திருக்கிறாள். தொடர்ந்து 12 சிவராத்திரி இரவுகளில் அண்ணாமலை கிரிவலம் சென்றால், நமது கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும் என்று சிவனடியார்கள் கூறியுள்ளனர்.

ஈசனின் ஐந்து முகத்தை நினைவூட்டும் விதமாகவும், பஞ்ச பூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் ஐந்துவித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயில் கருவறைக்குள் சிறப்பு பூஜை.. தடுத்து நிறுத்தப்பட்டார் ஸ்ரீவிஜயேந்திரர்ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயில் கருவறைக்குள் சிறப்பு பூஜை.. தடுத்து நிறுத்தப்பட்டார் ஸ்ரீவிஜயேந்திரர்

மாத சிவராத்திரி

மாத சிவராத்திரி

மாதம் தோறும் வரும் சிவராத்திரி மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள்! ஒரு மாதத்திற்கு இரண்டு சிவராத்திரிகள்! ஆக ஆண்டிற்கு 24 சிவராத்திரிகள்! அவை வளர்பிறை சதுர்த்தசி,தேய்பிறை சதுர்த்தசி ஆகும் இது நித்திய சிவராத்திரி ஆகும். தை மாதத்தில் வரும் தேய்பிறை சிவராத்திரியே பட்ச சிவராத்திரி ஆகும்.

யோகியாக மாற்றும் சிவராத்திரி

யோகியாக மாற்றும் சிவராத்திரி

திங்கட்கிழமையன்று சதுர்த்தசி திதி பகலும், இரவும் 60 நாழிகைகள் சேர்ந்து வந்தால், அது யோக சிவராத்திரி ஆகும். இந்த சிவராத்திரியை இவ் வருடம் வருகிறது. அதாவது,யோகியர் மறந்திடாத சிவராத்திரி ஆகும். அனைவரையும் யோகிகளாக மாற்ற கூடிய சிவராத்திரி.

மாசி மகா சிவராத்திரி

மாசி மகா சிவராத்திரி

மாசிமாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவுதான் மகாசிவராத்திரி ஆகும். இவைகளில் ஏதாவது ஒரே ஒரு சிவராத்திரி விரதம் இருந்தாலே போதும் மனிதப் பிறவி எடுத்தமைக்கான பலனை அடைந்துவிடமுடியும் என்கிறார் அகத்தியர்.

மகா சிவராத்திரி விரத பலன்கள்

மகா சிவராத்திரி விரத பலன்கள்

மகா சிவராத்திரி பூஜையால் பெண்களுக்கு இழைத்த துரோகம், பெண்களுக்கு செய்த சாபம், பெண்களுக்கு இழைத்த கொடுமைகள் நீங்கும். அதே போல, ஒரு பெண் தனது கணவனுக்கு துரோகம் செய்திருந்தால், தவறை உணர்ந்து திருந்தி, இந்த சிவராத்திரி பூஜையைச் செய்தால்கணவனுக்கு செய்த துரோகம் மறைந்துவிடும் என சிவ மஹா புராணம் கூறுகிறது.

கோடி புண்ணியம் உண்டாகும்

கோடி புண்ணியம் உண்டாகும்

மகா சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என சிவ புராணம் கூறுகிறது. உரைக்கிறது. சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால் நோய்கள் அனைத்தும் விலகும். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் கோடிப் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், ருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னதானம் செய்யலாம்.

English summary
Maha Shivaratri is a night that is accompanied by many Kalpakodi nights. The Siddhas say that the Maha Shivaratri Puja alone gives the benefit of the puja performed on many nights. This year Maha Shivaratri is observed on March 11.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X