For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? செய்ய வேண்டியவையும்.. செய்ய கூடாததும்..

மகா சிவராத்திரி விரத முறை: மகா சிவராத்திரி நாளன்று, நாம் எப்படி விரதம் இருந்து பூஜை செய்து வழிபட வேண்டும், அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? செய்ய கூடாத முக்கிய விஷயங்கள்..

Google Oneindia Tamil News

மதுரை: மகா சிவராத்திரி நாளன்று, ஒரு பக்கம் கோவிலுக்குள்ளே சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே, மறுபக்கம் கோவிலுக்கு வெளியேயும், கோவிலின் மண்டபத்திற்குள்ளும், அன்னதானப் பிரியர்கள் பக்தர்களுக்கு அன்னதானத்தை பிரசாதமாக கொடுத்துக்கொண்டிருப்பார்கள். இவர்கள் இப்படி அன்னதானம் கொடுப்பதால், நாள் முழுக்க விரதமிருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் சிவராத்திரி விரதத்தின் நோக்கமே கெட்டுவிடும் என்பதை முதலில் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

உண்மையில் சிவராத்திரி விரதம், நமக்கு முக்கியமான இரண்டு விஷயங்களை எடுத்துக் கூறுகின்றன. நம்முடைய அன்றாட தேவையாக நினைப்பது உணவு மற்றும் தூக்கம் என இரண்டையும் தான். இவை இரண்டுக்காகவும் தான், அல்லும் பகலும் உழைத்து சம்பாதிக்கிறோம். ஆனால், அந்த சிவராத்திரி தினத்தில் மட்டுமாவது, உணவு, தூக்கம் இரண்டையும் மறந்து, எம்பெருமான் இறையனாருக்காக நாள் முழுக்க கண்விழித்து விரதம் இருப்பது தான் இந்த நாளின் உண்மையான நோக்கமாகும்.

மகா சிவராத்திரி விரதம் தொடங்கிய நாள் முதல் காலையிலிருந்து இரவு முழுவதும் கண்விழித்திருந்து சிவபெருமானை நினைத்து, அவரின் திருநாமங்களையும், அவரது பஞ்சாட்ஷர மந்திரங்களையும் உச்சரித்துக்கொண்டும், அருகிலுள்ள சிவாலயத்திற்கு சென்று, அங்கு நான்கு ஜாம பூஜைகளிலும் கலந்து கொண்டு, சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை கண்குளிர தரிசித்து வணங்க வேண்டும்.

சிவராத்திரி விரதம்

சிவராத்திரி விரதம்

மகா சிவாராத்திரிக்கு மறுநாள் அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்து முடித்து, கோவிலில் சிவபெருமானுக்கு நடைபெறும் தீபாராதனையை கண்டு தரிசித்து முடித்து, அதன் பிறகே விரதத்தை முடிக்க வேண்டும். அப்போது தான் சிவராத்திரி விரதம் இருப்பதன் முழு பலனும் நமக்கு கிடைக்கும். இதைத்தான் நம்முடைய முன்னோர்களும் செய்து வந்தனர்.

பக்தர்களுக்கு அன்னதானம்

பக்தர்களுக்கு அன்னதானம்

சிவராத்திரி நாளன்று அனைத்து சிவன் கோவில்களிலும், அன்னதானம் கொடுக்கிறேன் பேர்வழி என்று அநேகம் பேர், கேசரி, சாம்பார் சாதம், காய்கறி சாதம், தயிர் சாதம் என வரிசை கட்டி நின்று கொடை வள்ளலாக மாறி வாரி வழங்கி வருகின்றனர். அன்னதானம் தான் இருப்பதிலேயே மிக உயரிய தானம் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதை எதற்கு எப்போது கொடுப்பது என்ற ஒரு நியதி உண்டு. அப்படி செய்தால் தான், அன்னதானம் கொடுப்பவருக்கும், அதைப் பெறுபவருக்கும் உரிய பலனைக் கொடுக்கும்.

சிவராத்திரி விரதம்

சிவராத்திரி விரதம்

உண்மையில் சிவராத்திரி விரதம், நமக்கு முக்கியமான இரண்டு விஷயங்களை எடுத்துக் கூறுகின்றன. நம்முடைய அன்றாட தேவையாக நினைப்பது உணவு மற்றும் தூக்கம் என இரண்டையும் தான். இவை இரண்டுக்காகவும் தான், அல்லும் பகலும் உழைத்து சம்பாதிக்கிறோம். ஆனால், அந்த சிவராத்திரி தினத்தில் மட்டுமாவது, உணவு, தூக்கம் இரண்டையும் மறந்து, எம்பெருமான் இறையனாருக்காக நாள் முழுக்க கண்விழித்து விரதம் இருப்பது தான் இந்த நாளின் உண்மையான நோக்கமாகும்.

உணவும் உறக்கமும்

உணவும் உறக்கமும்

நம்முடைய ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவது உணவும் உறக்கமும் தான். இந்த இரண்டையும் கட்டுப்படுத்தினாலே, ஐம்புலன்களும் தானாகவே கட்டுக்குள் வந்துவிடும். அப்படி கட்டுப்படும் போது, நம் மனதிற்குள் இறையுணர்வு தானாகவே வந்துவிடும். அப்போது நாம் நினைத்த காரியம் இனிதே நிறைவேறும். இதைத் தான் சிவராத்திரி விரதம் நமக்கு எடுத்துரைக்கின்றது.

விரத நோக்கம்

விரத நோக்கம்

ஒரு பக்கம் கோவிலுக்குள்ளே சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே, மறுபக்கம் கோவிலுக்கு வெளியேயும், கோவிலின் மண்டபத்திற்குள்ளும், அன்னதானப் பிரியர்கள் பக்தர்களுக்கு அன்னதானத்தை பிரசாதமாக கொடுத்துக்கொண்டிருப்பார்கள். இவர்கள் இப்படி அன்னதானம் கொடுப்பதால், நாள் முழுக்க விரதமிருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் சிவராத்திரி விரதத்தின் நோக்கமே கெட்டுவிடும் என்பதை முதலில் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

விரதம் இருந்த அன்னை

விரதம் இருந்த அன்னை

நம்மைப் படைத்த பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்களும் முனிவர்களும், அட அன்னை பராசக்தியே உண்ணாமல் சிவராத்திரி விரதமிருந்து இறைவனை வழிபடும்போது, நாம் ஒரு நாள் உணவை தியாகம் செய்வதால் ஒன்றும் கெட்டுவிடாது. அதோடு, சிவபெருமான் சதாசர்வ காலமும் தியான நிலையிலேயே அமர்ந்திருப்பவர். ஆரவாரத்தை அறவே வெறுப்பவர். அவருக்கு பிடித்தது ஏகாந்தமான அமைதி தான்.

மகாசிவராத்திரியில் என்ன செய்யலாம்

மகாசிவராத்திரியில் என்ன செய்யலாம்

அதனால் தான் கோவிலுக்குள் நுழைந்து இறைவனை தரிசிக்க செல்லும்போது, அமைதியாக வந்து தரிசித்து அமைதியாக வெளியேற வேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். எனவே, இனியாவது சிவராத்திரி தினத்தில் அன்னதானம் கொடுப்பதை தவிர்த்து விரதமிருப்பவர்களுக்கு உதவ வேண்டியது அனைவரின் கடமையாகும்.

English summary
On the day of Sivratri, when the anointed to Lord Siva within one side of the temple, on the other side, outside the temple, and inside the temple hall, the devotees will be offering the foods to the devotees. It is necessary to realize first that the devotees who come to the temple from the fast of the day will be spoiled for the purpose of fasting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X