For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாளய அமாவாசை 2020: பித்ரு கடன் போக்கினால் தடைகள் நீங்கி நல்லது நடக்கும்

பித்ரு கடனை நிவர்த்தி செய்யாமல் நாம் செய்யும் எந்த ஒரு பூஜையோ பரிகாரமும் வேலைக்கு உதவாது, பலனும் தராது. ஆகவே தான், நாம் முதலில் பித்ரு கடன் போக்கி தோஷம் நீங்க வேண்டியது அவசியமாகும்.

Google Oneindia Tamil News

மதுரை: நம்முடைய முன்னோர்கள் கொடுக்கும் சாபமானது தெய்வத்தின் அருளையும் கூட தடை செய்யும் சக்தி பெற்றது. முறையாக பித்ரு கடன்களை செலுத்தாவிட்டால், நம்மை படைத்த கடவுளால் கூட நமக்கு கருணை காட்ட முடியாது. அவ்வளவு வலிமையானவர்கள் நம்முடைய பித்ருக்கள் தான். எனவேதான் அமாவாசை நாட்களில் தவறாமல் பித்ரு கடன் செய்து தானம் கொடுக்க வேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Recommended Video

    பித்ரு கடன் போக்கினால் தடைகள் நீங்கி நல்லது நடக்கும்

    மனிதனாக பிறந்த ஒவ்வொரும், தான் முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்றவாறே மீண்டும், மீண்டும் மறுபிறவி எடுத்து, முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பலா பலன்களை அனுபவித்து வாழ்ந்து மடிந்தது கடைசியில் இறைவனோடு கலந்து விடுகிறான்.

    ஒரு ஆன்மா மனிதனாக பிறவி எடுத்து, பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பலா பலன்களை அனுபவித்துவிட்டு இறந்து போனால், இறந்த உடனேயே மீண்டும் ஒரு மனிதப் பிறவி எடுப்பது கிடையாது. இறந்த பின்பு ஆன்மாக்களின் உலகம் எனப்படும் பித்ரு லோகத்திற்கு சென்று, அங்கேயே தங்கியிருந்து, தனக்காக தன்னுடைய வாரிசுகள் செய்யும் பித்ரு கடன் எனப்படும் தர்ப்பணத்தை பெற்றுக்கொள்ளும் வரை ஆன்மாவாகவே சுற்றித் திரியும்.

    மகாளய அமாவாசை 2020: கொரோனா தடையை மீறி முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் - கோவில்களில் வழிபாடு மகாளய அமாவாசை 2020: கொரோனா தடையை மீறி முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் - கோவில்களில் வழிபாடு

    பித்ரு கடன் அவசியம்

    பித்ரு கடன் அவசியம்

    பித்ரு என்பது, இறந்துபோன நமது தந்தை, தாய், உள்ளிட்ட முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழி மற்றும் தாய் வழி சொந்தம் என இறந்துபோன நம்முடைய அனைத்து முன்னோர்களுமே நமது பித்ருக்கள் தான். நமது தந்தை வழியில் இருந்து போன முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் என்றும், தாய் வழியில் இறந்த முன்னோர்கள் அனைவரும் மாத்ரு வழி பித்ருக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். சுருக்கமாக சொல்வதென்றால், நமது ரத்த சொந்தத்தில் இறந்து முன்னோர்கள் அனைவருமே பித்ருக்கள் தான்.

    முன்னோர்கள் செய்த பாவ புண்ணியம்

    முன்னோர்கள் செய்த பாவ புண்ணியம்

    நம்முடைய உடல், பொருள், ஆன்மா அனைத்துமே, நம்முடைய பித்ருக்கள் நமக்கு அளித்த பிச்சை தான். அவர்கள் போட்ட பிச்சையில் தான் நாம் இவற்றை சுகபோகமாக அனுபவித்து வருகிறோம். அப்படி நாம் அனுபவிக்கும் போது, அந்த பித்ருக்கள் செய்த பாவ புண்ணியத்தையும் சேர்த்தே தான் நாம் அனுபவித்து வருகிறோம்.

    பசியை போக்க வேண்டும்

    பசியை போக்க வேண்டும்

    நம்மோடு வாழ்ந்து மறைந்துவிட்ட நமது முன்னோர்களான பித்ருக்கள் அனைவருமே, நாமும் நம்முடைய சந்ததிகளும் நலமுடன் வாழவேண்டும் என்று தான் விரும்புவார்கள். எனவே தான், அவர்கள் உயிரோடு இருந்தபோது, அவர்களை முறையாக பேணி காத்து அவர்களின் பசியை போக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட, அவர்கள் இறந்த பிறகாவது அவர்களின் பசியை போக்கி அவர்களின் ஆன்மாவை சாந்தப்படுத்த வேண்டும். இது தான் பிதுர்க்கடன் என கூறப்படுகிறது.

    முன்னோர்களின் ஆசி

    முன்னோர்களின் ஆசி

    நமது பித்ருக்களுக்கு நாம் செய்யும் பித்ரு கடன் வழிபாடு என்பது பழந்தமிழர்களின் மூதாதையர் வழிபாட்டு முறையாகும். இந்த வழிபாடு தற்போது மறைந்து வருகிறது. ஆனால், கிராமங்களில் இன்றும் இந்த மூதாதையர் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நம்முடைய முன்னோர்கள் எப்போதுமோ நம்முடைய நலனில் பெரிதும் அக்கரை கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

    பித்ருக்களின் வலிமை

    பித்ருக்களின் வலிமை

    அமாவாசை திதியன்று நாம் முறையாக பித்ருக்களை வழிபட்டு அவர்களின் பசியை போக்கவேண்டும். இல்லாவிட்டால், பசியோடும் வருத்தத்துடன் பிதுர்லோகம் சென்று விடுவார்கள். இது பித்ரு கடனாக மாறும். பித்ரு கடன் இருந்தால் நமக்கு நிறைய தடைகள் ஏற்படும். நம்மை படைத்த கடவுளால் கூட நமக்கு கருணை காட்ட முடியாது. அவ்வளவு வலிமையானவர்கள் நம்முடைய பித்ருக்கள் தான்.

    தோஷம் நீக்கும் பித்ருக்கள்

    தோஷம் நீக்கும் பித்ருக்கள்

    ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள தோஷத்திலேயே மிகக் கடுமையான தோஷமே பித்ரு தோஷம் தான். பித்ரு தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு முதல், வேலை, தாம்பத்ய வாழ்க்கை, குழந்தை என இவற்றில் ஏதாவது ஒன்றில் தீராத பிரச்சனையும் சிக்கலும் இருந்து வரும். நாம் முறையாக பித்ரு கடன் செய்து அவர்களின் பசியை போக்கி அவர்களை சாந்தப்படுத்த வேண்டும்.

    தடைகளை தரும் பித்ரு தோஷம்

    தடைகளை தரும் பித்ரு தோஷம்

    பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்யாமல் நாம் செய்யும் எந்த ஒரு பூஜையோ பரிகாரமும் வேலைக்கு உதவாது, பலனும் தராது. ஆகவே தான், நாம் முதலில் பிதுர் தோஷத்தை போக்கிட வேண்டியது அவசியமாகும். பித்ரு தோஷம் நீங்கினால்தான் தடைகள் நீங்கி வீட்டில் எந்த நல்லதும் நடைபெறும்.

    தடைகள் நீங்கும்

    தடைகள் நீங்கும்

    நமது பித்ருக்கள் தான், நமக்கும் இறைவனுக்கும் நடுவில் இருந்து இறைவின் அருளாசியை நமக்கு பெற்றுத் தருவதோடு, நமது வேண்டுதல்களையும் இறைவனிடம் கொண்டு சேர்த்து வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தருவார்கள். நம்மை தேடி வரும் நமது முன்னோர்களுக்கு நாம் முறையாக செய்யும் வழிபாடு தான் பித்ருகடன் அல்லது தர்ப்பணம் என கூறப்படுகிறது.

    பசியை போக்க வேண்டும்

    பசியை போக்க வேண்டும்

    நம் மீதும் நம்முடைய சந்ததிகள் மீதும் அதிக அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவரிகளின் பசியைப் போக்க வேண்டியது நமது கடமையாகும். அப்படி இல்லாமல் பித்ருக்களின் பசியை போக்காமல், அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு நாம் ஏன் மரியாதை செலுத்த வேண்டும் என்று உதாசீனப்படுத்தினால், நமது பித்ருக்கள் பசியால் வாடுவர். அப்படி பசியால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசை திதியிலும் நமது வீட்டிலுள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவார்கள். சிலர் காக வடிவத்திலும் நம்மை தேடி வருவார்கள். இந்த நாளில் நாம் முன்னோர்களுக்கு உணவிட்டு எள்ளும் தண்ணீரும் இறைத்து வணங்குவோம்.

    English summary
    On the day of the new moon we should regularly worship the Pitrus and satisfy their hunger. Otherwise, our fathers will go to the world of fathers with great sorrow. It will turn into a patriarchal debt. If we do not pay our debts properly, we will face a lot of obstacles.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X