For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மஹாளய அமாவாசை 2019: புரட்டாசி சனி மஹாளய அமாவாசையில் தானம் கொடுங்க தோஷங்கள் நீங்கும்

Google Oneindia Tamil News

Recommended Video

    மஹாளய அமாவாசை 2019 -வீடியோ

    சென்னை: நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று நாம் அவர்களுக்கு விருந்து கொடுப்போம். அதுபோல பித்ரு லோகத்தில் இருந்து நம்மை காண வரும் முன்னோர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஏழைகளுக்கு தானம் கொடுக்க வேண்டும் அன்னதானம் செய்ய வேண்டும் இதன் மூலம் நம் பித்ருக்கள் மகிழ்ச்சியடைந்து நம்மை ஆசிர்வாதம் செய்வார்கள். இதன் மூலம் எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் நீங்கும். நாளை சனிக்கிழமை மஹாளய அமாவாசை தினமாகும். இந்த நாளில் நாம் தானம் செய்தல் நம் தலைமுறை மட்டுமல்லாது மூன்று தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்.

    மஹாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறப்பான நாளாகும். இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன என்பதைப் பார்ப்போம். அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப் பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டு மகாளய அமாவாசை புரட்டாசி சனிக்கிழமை தினத்தில் வருவது மிகவும் விசேஷமாகப் பார்க்கப்படுகின்றது.

    மஹாளய பட்சம் எனும் 15 நாட்கள் கொண்ட இந்த புண்ணிய தினத்தின் இறுதியில் வருகின்றது மகாளய அமாவாசை. பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவை குறிப்பதாகும். மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பெளர்ணமிக்கு பின்னர் வரும் 15 நாட்களைக் குறிப்பதாகும். இந்த ஆண்டு மகாளய பட்சம் 2019 செப்டம்பர் 14 முதல் 28 செப்டம்பர் 2019 வரை உள்ளது. நாளை 28ம் தேதி மஹாளய அமாவாசை தினம் சனிக்கிழமையில் வருகின்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு புரட்டாசி சனிக்கிழமை வருவதால் அது சிறப்பான மஹாளய அமாவாசையாக கடைபிடிக்கப்படுகிறது.

    மஹாளயத்தை மறக்காதீங்க

    மஹாளயத்தை மறக்காதீங்க

    இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு எங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர்.எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ தர்ப்பணம் அளிக்க

    வேண்டும் என்கிறார்கள். அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும்.

    ஏழைகளளுக்கு உதவி பண்ணுங்க

    ஏழைகளளுக்கு உதவி பண்ணுங்க

    சனி அமாவாசை தினத்தில் ஏழை எளியோருக்கு உதவி செய்ய வேண்டும். அன்னதானம் கொடுக்கலாம் இயன்றவர்கள் மிதியடி, போர்வைகள் வாங்கிக் கொடுக்கலாம். ஏழை மக்களின் உருவில் சனி பகவான் இருக்கிறார். அவர்களுக்கு உதவி செய்வதால் சனி பகவானின் ஆசி கிடைக்கும். ஏழைகளுக்கு உதவியும் மரியாதையும் கொடுத்தால் போதும் சனி பகவானின் ஆசி கிடைக்கும்.

    முன்னோர்களுக்குப் படையல்

    முன்னோர்களுக்குப் படையல்

    மஹாளய தினத்தில் நம் முன்னோர்களுக்கு பிடித்தமான சைவ உணவுகளை ஆக்கிப்படைத்து அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவதாக அமைகின்றது. படைத்த உணவின் சிறு பகுதியை மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக கொடுப்பதும், மிகுதியை, உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்து உண்பதும் மஹாளய அமாவாசையின் சிறப்பாகும். இந்த நாளில் நம் முன்னோர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணம் மூலம் நமது மூன்று தலைமுறைக்கும் ஆசியை பெற்றுத்தரும்.

    முன்னோர்கள் ஆசி

    முன்னோர்கள் ஆசி

    இந்த மஹாளய அமாவாசை தினத்தில் எறும்பு, பசு, காகம், நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து அவர்களின் வயிற்றை நிறைத்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். அதோடு சிவ பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பான அம்சம். முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய்,தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும். சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    அன்னதானம்

    அன்னதானம்

    மஹாளய அமாவாசை தினத்தில் என்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு செய்தால், அந்த நாள் சிறப்பாக அமைவதோடு, நம் முன்னோர்களின் ஆசி மற்றும் இறைவனின் ஆசி கிடைக்கும். கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உடைகள், பார்லி ஆகியவை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிட்டும். தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் என்பார்கள். அதே போல் தண்ணீர் தானமும் சிறப்பானது. தேவையான மக்களுக்குத் தண்ணீர் தானம் கொடுப்பது, குடிக்க இனிப்பு கலந்த தண்ணீர் கொடுப்பது மிகவும் சிறந்தது.

    விநாயகர் வழிபாடு

    விநாயகர் வழிபாடு

    மரங்களில் மிக புனிதத்தன்மை வாய்ந்த மரம் அரச மரம். அப்படி அரச மரத்தடியில் அமர்ந்து காட்சி தருபவர் விநாயகர். இந்த தினத்தில் அரசமரத்தைச் சுற்றி வந்து பிள்ளையாரை வணங்குவது மிகச் சிறந்த புண்ணியத்தைத் தரும். முன்னோர்களின் ஆசி கிட்டுவதோடு, நம் உடலின் நோய் குறைந்து நலம் பெறலாம். நீண்ட நாள் வாழ முடியும்.

    தென் திசையில் தீபம்

    தென் திசையில் தீபம்

    ஒரு திறந்த வெளியில் தெற்கு திசை பார்த்து ஒரு விளக்கு அல்லது தீபத்தை பார்த்து வணங்குவது மிகவும் நல்லது. உங்களின் முன்னோர்களை நினைத்து வழிபடுவதும், கடவுளிடம் பிரார்த்திப்பதும் உங்களுக்கு மன நிம்மதியையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுத்தரும்.

    English summary
    Mahalaya This is a mysterious, mystical and fascinating day. The pitri paksha, the fortnight named after forefathers, pitris Mahalaya Amavasya is one of the most essential and auspicious days. Mahalaya Amavasya means It is the great universal period where all the ancestors of families come for accepting the offerings from their families.
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X