For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாசிவராத்திரி 2020 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்யலாம்

மகா சிவராத்திரியில் எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது நல்லது என்று பார்க்கலாம்.

Google Oneindia Tamil News

மதுரை: மகாசிவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இன்று விரதம் இருந்து விடிய விடிய கண் விழித்து சிவ தரிசனம் செய்வதன் மூலம் இறைவனின் அருளை பெறலாம். சிவ பெரமான் அபிஷேகப்பிரியர். இந்த நாளில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் அவரவர் ராசிக்கு உரிய பொருட்களால் அபிஷேகம் செய்வதன் மூலம் சிவபுண்ணியம் கிடைக்கும்.

மனிதர்களுக்கு அத்தியாவசிய தேவை உணவு, உறக்கம். இந்த இரண்டையும் விலக்கி சிவனுக்காக விரதம் இருக்கும் நாள்தான் மகாசிவராத்திரி விரதம்.
சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கும் என்பது நம்பிக்கை.

மகா சிவராத்திரி நாளில் நாள் முழுவதும் சிவனை நினைத்து விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். எந்த ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்து சிவனின் அருளை பெறலாம் என்று பார்க்கலாம்.

மேஷ ராசி

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று வெல்லம் கலந்த நீரை சிவலிங்கத்திற்குப் படைத்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை சொல்ல வேண்டும். இதனால் நினைத்தது அனைத்தும் நடக்கும்.

ரிஷப ராசி

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்கள், தயிரைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

மிதுன ராசி

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்கள், சிவலிங்கத்தை கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் ஆசைகள் நிறைவேறும். பாவங்கள் நீங்கும்.

கடக ராசி

கடக ராசி

கடக ராசிக்காரர்கள், சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, மந்தாரைப் பூவால் அலங்கரித்தால், நினைக்கும் காரியம் கூடிய விரைவில் நடக்கும்.

சிம்ம ராசி

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று சிவப்பு சந்தனம் கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், சிவன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்குவார்.

கன்னி ராசி

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்கள், பால் மற்றும் நீரால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்தால், நல்ல ஆரோக்கியத்தை அருள்வார். நோய் நொடிகள் நீங்கும்.

துலாம் ராசி

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்கள், பசு மாட்டுப் பாலால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வாழ்வில் நல்ல செல்வ செழிப்போடு இருக்க அருள்புரிவார்.

விருச்சக ராசி

விருச்சக ராசி

விருச்சிக ராசிக்காரர்கள், தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது.

தனுசு ராசி

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்கள், குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தைப் படிக்க வேண்டும். இதனால் வாழ்வில் உள்ள இன்னல்கள் நீங்கும்.

மகர ராசி

மகர ராசி

மகர ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வில்வ பழத்தைப் படைத்தால், வாழ்வில் எதிலும் வெற்றிக் கிட்டச் செய்வார்.

கும்ப ராசி

கும்ப ராசி

மகாசிவராத்திரி அன்று கும்ப ராசிக்காரர்கள், இளநீர் அல்லது கடுகு எண்ணெய் கொண்டு சிவலிங்கத்தை அபிஷேகம் செய்தால், நிதி ஆதாயம், லாபம் கிடைக்க அருள்புரிவார்.

மீன ராசி

மீன ராசி

மீன ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், செல்வ செழிப்போடு இருக்க சிவன் அருள்புரிவார்.

English summary
Mahashivratri 2020: Astrology says these abishekam for according to your horoscope can be beneficial for you
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X