For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாசிவராத்திரி,மாசி மகம் - மாசி மாத முக்கிய விஷேச நாட்கள்

மாசி மாதம் மகாசிவராத்திரி, மாசி மகம் உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்கள் உள்ளன. இந்த நாட்களில் விரதம் இருந்து சிவ ஆலயம் சென்று வணங்கினால் நன்மைகள் நடைபெறும்.

Google Oneindia Tamil News

மதுரை: மாசி மாதம் சூரியன் கும்பம் ராசியில் பயணிக்கிறார். கும்ப மாதம் என்று அழைக்கப்படும் இந்த மாதத்தில்தான் மகாசிவராத்திரியும், மாசி மகம் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் மன வலிமை தரக்கூடிய மாதம் மகத்துவம் நிறைந்த மாதம். இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர். சிவத்தோடு சக்தி இணைந்து முழுமை பெறுவதால் தன் கணவனின் நலனுக்காக பெண்கள் இந்த மாசி மாதத்தில் தாலிக் கயிற்றினை புதிதாக மாற்றிக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த மாசி மாதத்தில் என்னென்ன விஷேச நாட்கள் எந்தெந்த தேதிகளில் கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியத் தீர்த்தங்களிலும், சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். கும்ப மாதத்தில் நடைபெறும் விழா என்பதால் இது கும்பமேளா. பொதுவாக அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆனால், கிரஹண காலம் தவிர்த்து, பௌர்ணமி நாளில் தர்ப்பணம் செய்வது என்பது மாசி மாதத்தில் மட்டுமே.

விநாயகர் விரதம்

விநாயகர் விரதம்

மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான். மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.

மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி

மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள். மாசி மாதம் சிவனுக்கு உரிய மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான். மாசி மாதத்தில் மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.

மாசி அமாவாசை

மாசி அமாவாசை

மாசிமாத அமாவாசை நாளில் கும்ப ராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்து சஞ்சரிப்பர். மாசி மாத அமாவாசை நாளில் மயானக் கொல்லை திருவிழா நடைபெறுகிறது. அங்காள பரமேஸ்வரி அம்மன், மயானத்திற்குச் சென்று சூறையாடுவதாக ஐதீகம். கதி இல்லாமல் மயானத்தில் பேயாய் அலைவோருக்கு அம்பாள் மோட்சகதி தரும் வகையில் இந்த மயானக்கொல்லை விழா கொண்டாடப்படுகிறது.

முக்கிய விஷேச நாட்கள்

முக்கிய விஷேச நாட்கள்

பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த மாசி மாதத்தில் என்னென்ன விஷேச நாட்கள் எந்தெந்த தேதிகளில் கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம்.

  • மாசி 01ஆம் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம்ஆரம்பமாகிறது.
  • மாசி 04 தேய்பிறை அஷ்டமி - காலாஷ்டமி
  • மாசி 07 ஷட்திலா ஏகாதசி
  • மாசி 08 தில துவாதசி பிரதோஷம் வியாதீபாத சிரர்த்தம்
  • மாசி 09 மகாசிவராத்திரி சிரவண தீபம்
  • மாசி 12 சிறிய திருவடி இன்று ராமரையும் ஆஞ்சநேயரையும்
    தரிசனம் செய்ய பிரிந்த நண்பர்கள் ஒன்று கூடுவார்கள்.
  • மாசி 22 வாஸ்து நாள் வீடு கட்ட பூமி பூஜை செய்ய நல்ல நாள்
  • மாசி 24 சனிப்பிரதோஷம்
  • மாசி 25 மாசி மகம் இன்று ஆறுகள், நதிகளில் புனித நீராட
    தோஷங்கள் நீங்கும்.
  • மாசி 30 ரங்க பஞ்சமி கிருஷ்ண பஞ்சமி

English summary
Maasi Month 2020 is auspicious masam in Tamil calendar. Maha Sivarathiri and Masi Maham is the major festival celebrated during Masi month, on New Moon day and Full Moon day in the month of Masi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X