• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மங்கலமும் மகிழ்ச்சியும் தரும் மகத்தான பொங்கல்!

By Staff
|

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: தைமாதம் முதல் நாளிலிருந்து முப்பது நாளுமே பக்திமயமாகவும், விழாமயமாகவும் இருக்கும். முதல் நாள் தைப்பொங்கல். சூரியனை பொங்கலிட்டு நன்றியுணர்வோடு வழிபாடு செய்கிறோம். இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல். மாடுகளுக்கு பொங்கல் வைத்து வணக்கம் செலுத்துகிறோம். மூன்றாம் நாள் சிலபகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்னும் வீர விளையாட்டு நடைபெறும். சில பகுதிகளில், உறவினர்களோடு கூடி மகிழும் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆறு, கடல் பகுதிகளில் உறவினர்கள், நண்பர்கள் கூடி மகிழ்வர்.

உத்தராயண புண்யகாலம்:

உத்தராயண புண்யகாலம்:

தமிழ் மாதங்களில் தை முதல் ஆனி வரையிலும் வடதிசையிலும், ஆடி முதல் மார்கழி வரையிலும் தென்திசையிலும் சூரியன் பயணிக்கிறார். இதை உத்தராயணம், தட்சிணாயனம் என்று கூறுவர். நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களின் ஒரு நாள். அதில் உத்திராயணம் என்பது பகல் பொழுது. தக்‌ஷிணாயனம் என்பது இரவுப்பொழுது. அதில் தை மாதம் என்பது தேவர்களின் சூரியோதய காலமாகிய காலை பொழுதாகும். சுபகாரியங்கள் செய்வதற்கு உத்தராயண காலமே சிறந்தது.

முக்கூட்டு கிரகங்களின் முத்தான பொங்கல்:

முக்கூட்டு கிரகங்களின் முத்தான பொங்கல்:

நவ கிரகங்களில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் மூவரும் எப்போதும் ஒன்றாக (சில விதிகளுக்குட்பட்டு) பயணம் செய்வர். எனவே அவர்களை முக்கூட்டுகிரகங்கள் என்பர். சுக்கிரனும், புதனும் சூரியனுக்கு முன்னும், பின்னும் எப்பொழுதும் சுற்றி வரும். இவர்களின் இணைவே வாழ்வில் "கல்யாணம் முதல் காதல் வரை" போன்ற முக்கிய நிகழ்வுகளெல்லாம் ஏற்படுகின்றன. உலக பயிர்கள் சுபிட்சமாக வாழ மழையைத் தருவது சூரியன்

ஆறுமாதமாக தென்திசையில் பயணித்த சூரியன் வடதிசைக்கு திரும்பும் நாளே தைமுதல் நாள். இந்த நாளையே மகரசங்கராந்தி என்பர். இந்நாளில் சூரியனை வழிபாடு செய்வதால் வாழ்வு செழிக்கும் என்று கூறுவர்.

போகிக்கு மறுநாளான தை முதல் தேதி பொங்கல் திருநாள். அன்று, புதுப்பானையில் புது அரிசியில் பொங்கலிடுவது தமிழர்களின் வழக்கம். அப்போது மஞ்சள், கரும்பு, நெல், வாழை என்று, வயலில் விளைந்தவற்றை எல்லாம் சூரிய பகவானுக்கு படைப்பார்கள். தொடர்ந்து, பொங்கல் வைத்து, பொங்கி வந்த பொங்கலை தலை வாழை இலையில் இட்டு, முதலில் சூரிய பகவானுக்கு படைப்பார்கள். தொடர்ந்து, பொங்கலை அனைவரும் உண்டு மகிழ்வார்கள். இந்த ஆண்டு சூரிய பகவானுக்கு நன்றி சொல்ல ஏற்ற தினமாக ஞாயிற்றுகிழமையில் பொங்கல் அமைந்திருப்பதும் சிறப்பு தான்.

"புதிய" என்ற வார்தையின் நாயகனே நம்ம சுக்கிரன் தான். புத்தாடை, புத்துணர்சி,புது வீடு, புதிய வாகனம். இப்படி புதிய என தொடங்குமிடத்திலெல்லாம் சுக்கிரனின் ஆட்சிதான். ஆக போகியன்று பழைய கஷ்டங்கள், பழைய பொருட்கள், பழமையை குறிக்கும் இருட்டு ஆகிய அனைத்தும் விலகி புதிய விடியலை ஏற்படுத்தும் தினம் என்பதால் சுக்கிரனுக்குறிய தினம்தானே! அதிலும் சுக்கிர வாரத்திலேயே அமைந்தது சிறப்பு தானே!

பொங்கலன்றும் பாருங்கள். புதிய பானை, புதிய அரிசி ஆக எல்லாம் சுக்கிர மயம்தான். மண்ணின் அதிபதி சனி. அது பானையாகி உருப்பெற்றால் அதன் காரகன் சுக்கிரன். செந்நெல்லின் அதிபதி சந்திரன். அது விளைய காரணம் சுக்கிரன். மஞ்சளுக்கும் இனிய செங்கரும்பிற்க்கும் அதிபதி குரு. அது விளைய காரணம் சுக்கிரன். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கவும் பானையில் பொங்கல் பொங்கவும் காரணன் சுக்கிர பகவான் தாங்க. பொங்கல் பொங்கும்போது இடும் குலவை சத்தம் என்னும் இசைக்கும் காரகன் சுக்கிரனே.

மாட்டுப்பொங்கல்:

மாட்டுப்பொங்கல்:

பொங்கலுக்கு அடுத்தநாள் மாட்டுப் பொங்கல். வயலும், வயல் சார்ந்த இடமுமான, மருத நிலத்துக்குரிய தெய்வம் இந்திரன். . நிலத்தை உழுவதற்கு பயன்படுவது மாடுகள். இவர்களை நன்றியுடன் நினைத்து 3 நாட்கள் மக்கள் விழா எடுத்து மகிழ்கின்றனர். உழவு தொழில் சிறப்பாக நடைபெற மனிதனுக்கு உதவியாக இருப்பவை மாடுகள். அந்த வாயில்லா ஜீவன்களுக்கு இந்த நாளில் நன்றி தெரிவிக்கப்படுகிறது. அதோடு, பசுவையும், அதன் கன்றுவையும் நீராட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, அவற்றின் கொம்பிலும், கழுத்திலும் சலங்கை, மாலைகள் அணிவித்து அலங்கரித்து பூஜை செய்வார்கள். சுவைமிகு பொங்கலும் உண்ணக் கொடுப்பார்கள்.

பசுவை ஸ்ரீமகாலக்ஷமியின் அம்சம் என்போம். ஆக பால் தரும் பசுவும் சுக்கிரனின் அம்சமே. அனைத்து கால்நடைகளும் சந்திர அம்சமாகும். நீர் மற்றும் மழையின் காரகர்களும் சந்திர பகவானும் சுக்கிரபகவானுமே ஆவர். விவசாயத்தின் காரகனும் சந்திரனும் சுக்கிரனுமே! பண்டைய தமிழர்கள் மாட்டை செல்வமாக கருதினார்கள். மாடு என்றால் செல்வம் என்ற பொருளும் உண்டு. இதனால்தான் அவர்கள் மாட்டை ‘ஆநிரை' என்றும் அழைத்தார்கள். செல்வத்தின் காரகனும் மஹாலக்‌ஷ்மியின் சகோதரர் மற்றும் ராஜ கிரகமான சந்திரனும் மஹாலக்‌ஷ்மியை அதிதேவதையாக கொண்ட சுக்கிரனும்மே ஆகும்.

பொங்கல் கொண்டாட்டத்தின் கடைசி நாள் காணும் பொங்கல். இது உறவினர்களையும், நண்பர்களையும் காணும் நாளாகும். இந்த நாளில் சுற்றுலா செல்வது விருப்பமானதாக மேற்கொள்ளப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள வர்கள் கடற்கரை அல்லது ஆற்றங்கரைகளுக்கோ, அந்த வாய்ப்பு இல்லாதவர்கள் வயல்வெளிகளுக்கோ குடும்பத்தோடு சென்று மகிழ்கிறார்கள்.

காணும் பொங்கல்:

காணும் பொங்கல்:

காணும் பொங்கலுக்கு ‘கன்னிப் பொங்கல்', ‘கன்றுப் பொங்கல்', ‘காளையர் பொங்கல்' என்ற வேறு பெயர்களும் உண்டு. நவகிரகங்களில் பெண்களை குறிப்பவர் சந்திரன், சுக்கிரன் மற்றும் புதன் ஆவர். சில ஊர்களில் ‘மாரியம்மன் பொங்கல்' என்றும் இதை அழைக்கிறார்கள். தங்களை தேடி வரும் எளியவர்களுக்கு பொருட்களை தானமாக வழங்கி, அதனால் அவர்கள் அடையும் மகிழ்ச்சியை கண்டு நாமும் மகிழ்வதே காணும் பொங்கலின் நோக்கம். இந்த நாளில் எந்தவொரு ஏழை உதவி கேட்டாலும் ‘இல்லை' என்று சொல்லாமல் உதவ வேண்டும்.

நட்பினை வளர்ப்பவர்கள் புதனும் சுக்கிரனும்தான். மகிழ்ச்சியை பெருக்குபவரும் சுக்கிரனேதான். ஆக எப்படி பார்தாலும் போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், கானும் பொங்கல் என அனைத்தும்

முக்கூட்டு கிரகங்களோடு சந்திரனின் அருளும் பெற ஏற்ற தினங்களாகவே அமைகிறது. அதை அனைவரும் சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Thai Pongal is a Tamil harvest festival. It is commonly known as Pongal and is celebrated for four-days-long harvest festival celebrated in Tamil Nadu, a southern state of India that is from 13 to 16 January. This day coincides with Makara Sankranthi, a winter harvest festival celebrated throughout India. . Pongal, one of the most important popular Hindu festivals of the year. is held in the month of Thai (January-February) during the season when rice and other cereals, sugar-cane, and turmeric (an essential ingredient in Tamil cooking) are harvested.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more