For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண்கள் நுழைய தடை உள்ள சந்தோஷி மாதா கோவில் - பஞ்சுபராஹி கோவில்

சந்தோஷி மாதா கோவில் கன்னிப்பெண்களின் விரத முறைகளுக்கு புகழ் பெற்றதாக விளங்குகிறது. இந்த கோவிலில் வாரத்தின் 6 நாட்களில் ஆண்கள் அனுமதிக்கப்படுவார்கள். வெள்ளிக்கிழமை மட்டும் ஆண்களுக்கு இந்த கோவிலில் நுழ

Google Oneindia Tamil News

மதுரை: சந்தோஷி மாதா கோவில் வட இந்தியாவில் பிரபலமான கோவில் ஆகும். சந்தோஷி மாதா கோவில் கன்னிப்பெண்களின் விரத முறைகளுக்கு புகழ் பெற்றதாக விளங்குகிறது. இந்த கோவிலில் வாரத்தின் 6 நாட்களில் ஆண்கள் அனுமதிக்கப்படுவார்கள். வெள்ளிக்கிழமை மட்டும் ஆண்களுக்கு இந்த கோவிலில் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. சபரிமலையில் பத்து வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படும் நிலையில் இந்தியாவில் சில கோவில்களில் ஆண்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. அந்த கோவில்களை பற்றி அறிந்து கொள்வோம்.

விரதம் இருக்கும் பெண்கள், தங்கள் விரதம் முடிந்து காரியம் நிறைவேறிவிட்டால், எட்டு ஆண் பிள்ளைகளுக்கு விருந்து வைக்க வேண்டும். ஆனால் பணம் எதுவும் தரக்கூடாது. பணமாக தந்தால் அந்த பணத்தில் புளிப்பான பண்டங்களை சாப்பிடுவார்கள் என்பதால், விரதம் இருந்தவர்கள் தாங்களோ நேரடியாக விருந்து வைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

விநாயகரின் மகன்களான சுபம், லாபம் இருவரும், விநாயகரிடம் தங்களுக்கும் ஒரு சகோதரி வேண்டும் என்று வேண்டினர். விநாயகரும் தன்னுடைய மகன்களின் விருப்பம் நிறைவேற வரம் அளித்தார். அதன்படியே விநாயகப்பெருமானுக்கு ஒரு பெண் குழந்தை அவதரித்தது. அந்த குழந்தைக்கு சந்தோஷி என்று பெயரிட்டனர். அந்த குழந்தை அன்னை பார்வதியின் சக்தியையும், மஹாலட்சுமியின் செல்வத்தையும், சர்ஸ்வதி தேவியின் கல்விச் செல்வத்தையும் பெற்று திகழ்ந்தது. வேண்டுபவர்களுக்கு வேண்டிய வரம் அளிப்பவர் என்பதனாலேயே அவருக்கு சந்தோஷி மாதா என்ற பெயர் வந்தது.

கன்னிப்பெண்கள் விரதம்

கன்னிப்பெண்கள் விரதம்

நாட்டில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் ஏதாவது அதிசயம் நிகழ்த்துவதற்காகவே உருவாக்கப்பட்டவையாகவே இருக்கும் என்பது நிச்சயம். அந்தந்த கோவில்களைப் பற்றிய தலபுராணங்களை படித்து பார்த்தாலே அது பற்றி அதிசயங்கள் நமக்கு தெரியும். அதனைப் பற்றி நாம் அறிந்தால் நமக்கும் மெய் சிலிர்த்துப் போகும். அதே போல் ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு விதமான பூஜை முறைகளுக்கும், விரத முறைகளுக்கும் பேர் போனதாக இருக்கும். அந்த வகையில் சந்தோஷிமாதா கோவில் கன்னிப்பெண்களின் விரத முறைகளுக்கு புகழ் பெற்றதாக விளங்குகிறது. இந்த கோவிலில் வாரத்தின் 6 நாட்களில் ஆண்கள் அனுமதிக்கப்படுவார்கள். வெள்ளிக்கிழமை மட்டும் ஆண்களுக்கு இந்த கோவிலில் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.

ஊறுகாய் வேண்டாம்

ஊறுகாய் வேண்டாம்

விரதம் இருக்கும் கன்னிப்பெண்கள் தொடர்ந்து 16 வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வரவேண்டும். அந்த நாட்களில் விரதம் இருக்கும் போது, புளிப்பான பழங்கள், ஊறுகாய் ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்து விட்டு விரதம் இருக்க வேண்டும். அப்படி தொடர்ந்து 16 வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்துவந்தால் தாங்கள் நினைத்த காரியம் ஜெயமாகும் என்று நம்புகின்றனர்.

விநாயகரின் மகள்

விநாயகரின் மகள்

வெள்ளிக்கிழமையில் விரதம் இருப்பதற்கு காரணம் சந்தோஷிமாதா வெள்ளிக்கிழமையில் அவதரித்த காரணத்தினாலேயே அன்றைக்கு விரதம் இருப்பதாக கூறுகின்றனர். சந்தோஷிமாதா கடவுள் அவதாரம் பற்றிய தல புராணத்தின் படி சந்தோஷிமாதா, முழுமுதற்கடவுளான விநாயகரின் மகளாக அவதரித்ததாக கூறப்படுகிறது.

சித்தி புத்தி விநாயகர்

சித்தி புத்தி விநாயகர்

விநாயகப் பெருமானின் இரு மனைவியர்களான சித்தி (ஆன்மீக அறிவு) புத்தி (அறிவு) என்ற இருவரின் மகன்களான சுபம், லாபம் என்ற இரு மகன்கள் உள்ளனர். ஒரு முறை விநாயகப் பெருமான் தன்னுடைய மனைவியர் மற்றும் இரு மகன்களுடன் பூலோகம் வந்தபோது, எல்லோரும் ரக்ஷாபந்தன் என்ற பெயரில் தங்களுடைய சகோதரர்களின் கைகளில் கயிறு கட்டி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தனர். அதைக் கண்ட விநாயகரின் மகன்களான சுபம், லாபம் இருவரும், விநாயகரிடம் தங்களுக்கும் ஒரு சகோதரி வேண்டும் என்று வேண்டினர். விநாயகரும் தன்னுடைய மகன்களின் விருப்பம் நிறைவேற வரம் அளித்தார். அதன்படியே விநாயகப்பெருமானுக்கு ஒரு பெண் குழந்தை அவதரித்தது. அந்த குழந்தைக்கு சந்தோஷி என்று பெயரிட்டனர். அந்த குழந்தை அன்னை பார்வதியின் சக்தியையும், மஹாலட்சுமியின் செல்வத்தையும், சர்ஸ்வதி தேவியின் கல்விச் செல்வத்தையும் பெற்று திகழ்ந்தது.

சந்தோஷி மாதா கோவில்

சந்தோஷி மாதா கோவில்

வேண்டுபவர்களுக்கு வேண்டிய வரம் அளிப்பவர் என்பதனாலேயே அவருக்கு சந்தோஷி மாதா என்ற பெயர் வந்தது. சந்தோஷி மாதாவை நினைத்து விரதம் இருப்பவர்களுக்கு விநாயகரின் பூரண அருளாசியும் கிடைக்க வேண்டும் என்று நாரதர் விநாயகரிடம் வேண்டிக்கொண்டதாக தலபுராணம் கூறுகிறது. சந்தோஷி மாதா கோவில் வட இந்தியாவில் பிரபலமான கோவில் ஆகும். விரதம் இருக்கும் பெண்கள், தங்கள் விரதம் முடிந்து காரியம் நிறைவேறிவிட்டால், எட்டு ஆண் பிள்ளைகளுக்கு விருந்து வைக்க வேண்டும். ஆனால் பணம் எதுவும் தரக்கூடாது. பணமாக தந்தால் அந்த பணத்தில் புளிப்பான பண்டங்களை சாப்பிடுவார்கள் என்பதால், விரதம் இருந்தவர்கள் தாங்களோ நேரடியாக விருந்து வைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

கருவறையில் மீனவ பெண்கள்

கருவறையில் மீனவ பெண்கள்

சந்தோஷி மாதா கோவில் போலவே, ஒடிசா மாநிலத்தில் கடற்கரை மீனவ கிராமத்தில் உள்ள கோவில் தான் மா பஞ்சுபராஹி கோவில். இங்கு பட்டியலிடப்பட்ட இனத்தைச் சேர்ந்த மீனவ பெண்கள் தான் கோவில் கருவறைக்குள் நுழைந்து கடவுளுக்கு பூஜைகள் செய்ய முடியும். ஆண்கள் இந்த கோவிலுக்குள் நுழைவதற்கே அனுமதி கிடையாது. மா பஞ்சுபராஹி கோவில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால், தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடல் அரிப்புகளால், கடல் நீர் கிராமத்திற்குள்ளும் கோவிலுக்குள்ளும் சூழ்ந்துவிடுகிறது.

ஆண்கள் தொட்டால் தீட்டு

ஆண்கள் தொட்டால் தீட்டு

கோவிலில் பூஜை நடைபெறுவது தடைபடுகின்றது. வேறு வழியில்லாத கோவில் நிர்வாகம், அந்த கடவுள் சிலைகளை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்தனர். இதனையடுத்து, சுமார் 400 ஆண்டுகளாக ஆண்கள் கை படாமல் இருந்து வந்த இந்த கோவில் சிற்பங்களை, அங்கிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்றனர். ஒவ்வொரு சிலையும் சுமார் 1500 கிலோ எடையுள்ளதாகும். இந்த கோவிலில் ஆண்கள் நுழைவதே தீட்டு என்ற நம்பிக்கையால், ஆண்கள் கை பட்டதை அடுத்து, அந்த கோவில் சிற்பங்களை மீண்டும் புனித நீரைக்கொண்டு புனிதப்படுத்தப்பட்டன.

English summary
Lord Ganesha's sons, Subham and Labam, both prayed that they wants a sister. Lord Ganesha also granted his son’s wishes to be fulfilled. Accordingly, Lord Ganesha incarnated a baby girl. The child was named Santhoshi Matha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X