• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க குழந்தை சுறுசுறுப்பாகவும் புத்திசாலியாகவும் இருக்கனுமா? மாங்கிஃபெரா இண்டிகா சாப்பிட கொடுங்க!

|

சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு ஜீன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்போவதாக ஒரு செய்தி நிலவுகிறது.விடுமுறை முடிந்து பள்ளிகள் வெகுவிரைவில் திறக்கப்போகிறார்கள். விடுமுறைகாலத்தில் ஆடி பாடி ஒடி விளையாடி களைப்படைந்த உங்கள் குழந்தைகள் பள்ளி திறந்தவுடன் ஆரோக்யத்துடனும் சுறுசுறுப்புடனும் மிகுந்த புத்திசாலியாகவும் திகழ வேண்டுமல்லவா? குழந்தைகளோடு ஊர் ஊராய் சுற்றியலைந்து சோர்வுடன் இருக்கும் தாய்மார்கள் சுறுசுறுப்புடன் உற்சாகமடைய வேண்டுமா?

குழந்தைகளோடும் மனைவியோடும் பல இடங்களுக்கு அலைந்து திரிந்துவிட்டு கையில் இருந்த காசையெல்லாம் செலவழித்துவிட்டு உடலாலும் மனதாலும் சோர்வுடன் இருக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் சாப்பிட வேண்டிய மருந்து மேங்கிஃபெரா இண்டிகாதான் என்கிறது மருத்துவ ஜோதிடம். கிழக்காசியாவிலும் இந்தியாவிலும் அதிகம் காணப்படும் இது மருத்துவ குணம் நிறைந்த மரவகையாகும்.

மேங்கிஃபெரா இண்டிகா:

மேங்கிஃபெரா இண்டிகா:

மேங்கி ஃபெரா இண்டிகா என்பது மருத்துவ குணம் நிறைந்த தாவரமாகும். இதன் பெயர் ஆங்கிலத்தில் இருந்தாலும் "நான் தமிழண்டா" என பெருமைபட்டுக்கொள்ளும் தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட தாவர வகையாகும். இதன் இலை,பூ, பிஞ்சு, காய், பழம், கொட்டை, மரத்தின் வேர் என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் நிறைந்ததாகும்.

மேங்கி ஃபெராவின் மருத்துவ குணங்கள்:

மேங்கி ஃபெராவின் மருத்துவ குணங்கள்:

1.மேங்கிஃபெரா இண்டிகாவின் கொழுந்து இலையை மென்று பல்தேய்க்க பற்களில் உள்ள மஞசள் கறை நீங்குவதோடு பற்கூச்ச நோயும் நீங்குகிறது.

2.இந்த மேங்கிஃபெரா இண்டிகாவின் கொழுநுது இலையை நீரில் இட்டு கொதிக்கவைத்து அந்த கஷாயத்தை அருந்தி வர நீரிழிவு நோய் நீங்குகிறது.

3.மேங்கிஃபெரா இண்டிகாவின் பிஞ்சுகளை காம்புடன் கூடியதாக பறித்து சிறிய காம்புடன் நறுக்கி கடுகு மிளகாய் விழுது உப்பு விளக்கெண்ணையுடன் சேர்த்து ஊறவைத்த ஊறுகாயின் சுவையும் வாசமும் "தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ" என பாடவைக்கும்.

4. மேங்கிஃபெரா இண்டிகா பழுக்காத நிலையில் காயாக கன்னிப்பெண்கள் அதிகமாக உண்டால் மணம் பதருவார்கள் தாய்மார்கள். ஆனால் கல்யாணமான இளம் பெண்கள் உண்டால் "என்ன! விஷேஷமா?" என கண் சிமிட்டி குறும்பாக கேட்பார்கள்.

5. மேங்கிஃபெரா இண்டிகாவை நன்றாக நறுக்கி உப்பு மிளகாயுடன் ஊறுகாய் போட்டுவிட்டால் தயிர்சாதம் பிடிக்காதவர்கள் கூட அரைபடி சாதம் சேர்த்து சாப்பிடுவார்கள்.

6. இந்த மேங்கிஃபெரா இண்டிகாவின் காய்த கொட்டைக்குள் இருக்கும் பருப்பு வயிர்கடுப்பு நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

7. மேங்கிஃபெரா இண்டிகாவின் பிசின் கால் பித்த வெடிப்புக்கு மிகச்சிறந்த மருந்து என்கிறது ஆயுர்வேதம்.

8. மேங்கிஃபெரா இண்டிகாவின் பதினோரு இலைகளை தோரணமாக கட்ட வாஸ்து தோஷம் நீங்கும் என்றும் வீட்டின் முன் இந்தமரம் இருந்தால் வீட்டில் அதிர்ஷ்டம் கொழிக்கும் என்றும் பெங்சுயி எனும் சீன வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

9. இதன் பழத்தின் சுவையில் மயங்காதவர்களே இருக்கமுடியாது எனலாம். இந்த பழத்திற்க்காக சில புகழ்பெற்ற குடும்பங்களில் சகோதர சன்டையே நடத்திருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

10. அழகான பெண்களின் கன்னத்தை மேங்கி ஃபெராவோடு ஒப்பிடுமளவுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

அப்படி என்ன பழங்க அது? அட நான் ஒரு "மாங்கா" மடையங்க. அந்த பழத்தை நம்ம ஊர்ல மாம்பழம்ன்னு சொல்றாங்க. அதை சொல்ல மறந்திட்டேன் பாருங்க!

மாம்பழமும் ஜோதிடமும்:

மாம்பழமும் ஜோதிடமும்:

1. மாம்பழத்தின் காரக கிரகம் குருதான். அதனால் தான் இதற்க்கு ராஜ கனி என்றும் ஞான பழம் என்ற பெயரும் ஏற்பட்டது. புரண இதிகாசங்களிலேயே மாம்பழத்தின் சிறப்பு போற்றப்பட்டுள்ளது. என்றாலும் அதன் சுவை மற்றும் மருத்துவ பயன்களை பொருத்து சூரியன், சுக்கிரன், சனி காரகர்கள் ஆகின்றனர்.

2. இனிப்பான பழங்களுக்கும் மஞ்சள் தன்மையாலும் குரு காரகர் ஆகின்றார். மேலும் இதில் பி-6 எனும் வைட்டமினும் பி-12எனும் ரிபோஃப்ளோவின் எனும் வைட்டமின் அதிகமிருக்கிறது. இந்த இரண்டு வைட்டமின்களுக்கும் காரகர் புத்திரகாரகனான குருபகவான் ஆவார். வைட்டமின் பி-6 கருவளர்சிக்கு இன்றியமையாதது என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. மாம்பழம் ஒரு உஷ்னம் நிறைந்த பழம் என்பதாலும் உஷ்ன கிரகமான குருவின் காரகம் பொருத்தமானதே.

3. மாம்பழத்தில் 76% வைட்டமின் சி இருப்பதாக அறிவியல் கூறுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும் சுறுசுறுப்பும் அளிக்கவல்ல வைட்டமின் சியின் காரகர் சனைஸ்வரபகவான் என்கிறது மருத்துவ ஜோதிடம். உடல் கட்டு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் காரகர் சனி என்பது குறிப்பிடத்தக்கது. மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊற வைக்கும்.

4. மாம்பழத்தில் கண்பார்வைக்கு தேவையான விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோடின் மிகுந்து இருக்கிறது. விட்டமின் ஏ மற்றும் கண்பார்வையின் காரக கிரகத் சூரியபகவான் ஆவார். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.

5. மாம்பழத்தில் தாமிரச்சத்து எனும் காப்பர் மிகுந்துள்ளது. காப்பரின் காரகர் சுக்கிரபகவான் என்கிறது மருத்துவ ஜோதிடம். தாமிரச்சத்து ஆண்மை விருத்திக்கும் சிறுநீரக கோளாருகளுக்கும் காம ஊக்கியாகவும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.

6. மாம்பழத்தில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஈ இருப்பதால், அது செக்ஸ் உணர்வை அதிகரிப்பதில் வல்லமை வாய்ந்துள்ளது. இது ஆண்களின் வீரியத்தை அதிகரிக்கும். அதனால் சில நேரங்களில் இதனை காதல் பழம் என்றும் அழைக்கின்றனர்.ஆண்மைக்குறைவு உள்ளவர்களும், மலட்டுத் தன்மை உள்ளவர்களும் தொடர்ந்து மாம்பழம் சாப்பிட அந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

7. அதிக வலியுடன் அதிக உதிரப்போக்குடன் மாதவிலக்கு சீராக இல்லாதவர்கள் மாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை நீங்கும்.

சரி! இந்த மாம்பழத்தை யார் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்?

சரி! இந்த மாம்பழத்தை யார் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்?

1.குரு சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றவர்கள் மாம்பழம் அதிகம் சாப்பிடுவார்கள் என ஜோதிட ஆய்வு தெரிவிக்கிறது.

2. குருவின் வீட்டில் சனியின் உத்திரட்டாதி நக்ஷத்திரத்தில் சுக்கிரன் நின்றால் சுவைமிகுந்த மாம்பழங்களை தேடித்தேடி உண்பார்கள்.

3. உஷ்ண ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகளில் இந்த குரு சுக்ர சனி ஏற்பட்டால் மாம்பழத்தையே உணவாக கொள்வார்கள்.மேலும் சர்க்கரை நோயாளிகளும் டாக்டர் திட்டுவதை கூட பொருட்படுத்தாமல் உண்டுகளிப்பர்.

4. காலபுருஷனுக்கு போஜன ஸ்தானமான ரிஷபத்தில் அல்லது ஜாதக இரண்டாம் பாவத்திலோ குரு சுக்கிர சனி சேர்க்கை பெற்றவர்கள் மாம்பழத்தை அதிகம் விரும்பி உண்பார்கள்.

இந்தியாவை பொருத்தவரை வைகாசியில் தான் மாம்பழத்தின் சுவை அதிகம் எனப்படுகிறது. இந்த மாதத்தில் சுவை மிகுந்த மாம்பழத்தை அதிகம் உண்டு மகிழ்வோம் வாருங்கள்.

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

9498098786

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Mangifera indica,also known as Mango, Aam, it has been an important herb in the Ayurvedic and indigenous medical systems for over 4000 years. Mangoes belong to genus Mangifera which consists of about 30 species of tropical fruiting trees in the flowering plant family Anacardiaceae. According to ayurveda, varied medicinal properties are attributed to different parts of mango tree. The name mango, almost identical in countless languages, is derived from Tamil, and was transferred to the West by the Portuguese. The general term for
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more