For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரு, சுக்கிரன், சனி - மாம்பழத்திற்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் என்ன பொருத்தம் பாருங்க

ஜோதிடத்திற்கும் மாம்பழத்திற்கும் என்ன தொடர்பு உள்ளதோ அதேபோல சர்க்கரை நோயாளிகளுக்கும் மாம்பழத்திற்கும் தொடர்பு உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பழங்கனின் அரசனான மாம்பழத்தை சுவைக்க அனைவருமே விரும்புவார்கள். ஜாதகத்தில் குரு, சுக்கிரன், சனி சேர்க்கை பெற்றவர்கள் மாங்கனியை ருசிக்க ஆசைப்படுவார்கள். மாம்பழத்திற்கும் ஜோதிடத்திற்கும் எப்படி தொடர்பு உள்ளதோ அதே போல சர்க்கரை நோயாளிகளுக்கும் குரு, சுக்கிரன், சனி கிரகங்களுக்கும் இடையே தொடர்பு உள்ளது.

முக்கனிகளில் முதன்மையானது மா. இதன் ருசி அலாதியானது. எனவேதான் மாம்பழம் பழங்களின் அரசனான போற்றப்படுகிறது. மாதா ஊட்டாத சோறு மாங்கனி ஊட்டும் என்பது பழமொழி. மாம்பழ சீசன் காலம் என்பதால் காணும் இடமெங்கும் கொட்டி கிடக்கிறது.

இந்தியாவை பொருத்தவரை வைகாசியில் தான் மாம்பழத்தின் சுவை அதிகம். பழத்தின் சுவையில் மயங்காதவர்களே இருக்கமுடியாது

ஒருவரின் ஜாதகத்தில் குரு சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றவர்கள் மாம்பழம் அதிகம் சாப்பிடுவார்கள் என ஜோதிட ஆய்வு தெரிவிக்கிறது.

சூரியன் சனி சேர்க்கை

சூரியன் சனி சேர்க்கை

மாம்பழத்தில் கண்பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோடின் அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் கண்பார்வையின் காரக கிரகம் சூரியபகவான். மாம்பழம் கோடை மயக்கத்தைத் தீர்க்கும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.

மாம்பழத்தில் 76% வைட்டமின் சி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்திக்கும் சுறுசுறுப்பும் அளிக்கவல்ல வைட்டமின் சியின் காரகர் சனைஸ்வரபகவான் என்கிறது மருத்துவ ஜோதிடம். உடல் கட்டு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் காரகர் சனி என்பது குறிப்பிடத்தக்கது. மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊற வைக்கும்.

ஆண்மை அதிகரிக்கும் மாம்பழம்

ஆண்மை அதிகரிக்கும் மாம்பழம்

மாம்பழத்தில் தாமிரச்சத்து உள்ளது. தாமிரத்தின் காரகர் சுக்கிரபகவான். தாமிரச்சத்து ஆண்மை விருத்திக்கும் சிறுநீரக கோளாருகளுக்கும் காம ஊக்கியாகவும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. மாம்பழத்தில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஈ இருப்பதால், அது அதீத பாலுணர்வை அதிகரிப்பதில் வல்லமை வாய்ந்துள்ளது. இது ஆண்களின் வீரியத்தை அதிகரிக்கும். அதனால் சில நேரங்களில் இதனை காதல் பழம் என்றும் அழைக்கின்றனர்.ஆண்மைக்குறைவு உள்ளவர்களும், மலட்டுத் தன்மை உள்ளவர்களும் தொடர்ந்து மாம்பழம் சாப்பிட அந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

சுவையான மாம்பழம்

சுவையான மாம்பழம்

குரு சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றவர்கள் மாம்பழம் அதிகம் சாப்பிடுவார்கள் என ஜோதிட ஆய்வு தெரிவிக்கிறது. குருவின் வீட்டில் சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சுக்கிரன் நின்றால் சுவைமிகுந்த மாம்பழங்களை தேடித்தேடி உண்பார்கள். உஷ்ண ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகளில் இந்த குரு சுக்ர சனி ஏற்பட்டால் மாம்பழத்தையே உணவாக கொள்வார்கள். ரிஷபத்தில் அல்லது ஜாதக இரண்டாம் பாவத்திலோ குரு சுக்கிர சனி சேர்க்கை பெற்றவர்கள் மாம்பழத்தை அதிகம் விரும்பி உண்பார்கள். மாம்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.

ஜோதிடமும் சர்க்கரை நோயும்

ஜோதிடமும் சர்க்கரை நோயும்

ஜாதகத்தில் 6வது இடம் ருண ரோக ஸ்தானம். நோய் ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்கள் நோய் ஸ்தானத்தை பார்க்கும் கிரகங்களைப் பொறுத்தே நோய்கள் பாதிக்கின்றன. குரு மற்றும் சுக்கிரன் ஜாதகத்தில் வலுவிழக்கும்போது சர்க்கரை நோய் உண்டாகிறது. சுக்கிரன் சர்க்கரை நோயை முதலில் உடலில் ஆரம்பித்து வைக்கும். குரு அதைத் தீவிரப்படுத்தும். பிறகு அதை நிரந்தரமாக்கி விடுவது சனி. வெல்லம், நாட்டுச் சர்க்கரை, வெல்லப்பாகு ஆகியவைக்கு குருவே காரகம். இதை வெள்ளைச் சர்க்கரையாக மாற்றும்போது சுக்கிரனின் காரகத்துவம் பெறுகின்றது.சர்க்கரை நோயை நீடிக்கச் செய்து பரம்பரை வழியாகக் கடத்தும்போது சனியின் காரகத்துவம் பெறுகிறது. இந்த நோயை அதிகப்படுத்துவது ராகுவின் வேலை.

மாம்பழமும் சர்க்கரை நோயும்

மாம்பழமும் சர்க்கரை நோயும்

நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்த வரை,மாம்பழத்தைத் தவிர்க்க வேண்டும். உட்கொண்டால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று சிலர் கூறினாலும் ஆய்வின் முடிவுகளோ, சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று மாம்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன் சர்க்கரை நோயினை உண்டாக்கும் இன்சுலின் சுரப்பி மற்றும் அதன் கெட்ட கொழுப்பினை எதிர்க்கும் மருந்துகளைப் போல் செயல்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

மாம்பழங்களில் அதிக அளவில் கரோட்டீன் சத்து உள்ளது. அல்போன்சா வகை மாம்பழத்தில் எக்கச்சக்கமான பீட்டா கரோட்டீன் சத்தும், பங்கனப் பள்ளி மற்றும் பெத்தராசலு வகைகளில் மிதமான அளவு பீட்டா கரோட்டீன் சத்தும் உள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

எனவே மாலைக்கண் போன்ற கண் தொடர்பான நோய்களுக்கு மாம்பழம் சாப்பிடுவது நல்லது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலில் ரத்த ஓட்டம் சீராகி நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் வலுவடையும். காரணம் மாம்பழத்துக்கு ரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு.

மருத்துவரின் ஆலோசனை

மருத்துவரின் ஆலோசனை

இது மட்டுமல்ல, இதயத்தையும், மூளையையும் பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும். கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டமாக இருக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளதால் மருத்துவரின் ஆலோசனை பெற்ற அளவாக மாம்பழம் சாப்பிடுவதே நல்லது.

English summary
Mango lovers are people with fixed ideas. They cannot be easily influenced. They are also extremists with strong likes and dislikes.They like to control situations. Hence they are not very good followers. Mango lovers love activities that mentally challenge them. Are mangoes good for diabetes? Can people with diabetes eat mango this is the story link with astrology.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X