For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்கழி மாதத்தில் திருப்பாவை கேட்டு கண் விழிக்கும் திருப்பதி ஏழுமலையான்

மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட வைணவ தளங்களில் சுப்ரபாதத்திற்கு பதிலாக அதிகாலைப் பாடலாகவும் மூலவரை நித்திரையில் இருந்து எழுப்பிடவும் திருப்பாவை, திருவெம்பாவை ப

Google Oneindia Tamil News

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் பிரபல இசையரசி எம்.எஸ்.சுப்பலட்சுமியின் பாடப்பட்ட சுப்ரபாதம் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. தைமாதம் தொடங்கி கார்த்திகை மாதம் வரை 11 மாதங்கள் சுப்ரபாதம் ஒலிபரப்பிய பின்னர் மார்கழி மாதத்தில் 30 நாட்களும் திருப்பாவை திருவெம்பாவை பாடல்கள் ஒலிபரப்படுகிறது.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை மார்கழி முதல் நாள் தொடங்கி அடுத்த முப்பது நாட்களும் ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட ஸ்ரீரங்கநாதர் கோயில் ஸ்ரீராமர் கோயில்களில் திருப்பாவை அதிகாலைப் பாடலாக ஒலிபரப்பப்படுகிறது.

Margazhi masam Thiruppavai to replace Suprabhata Seva on Tirupathi

12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் எழுதிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் அதிகாலை 3 மணிக்கு பாடப்பட்டு ஏழுமலையானை எழுப்புவார்கள். இந்த திருப்பாவையை கேட்டுத்தான் ஏழுமலையான் இனி கண்விழிப்பார்.

Margazhi masam Thiruppavai to replace Suprabhata Seva on Tirupathi

திருப்பாவை சேவை ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படுகிறது. மார்கழி மாதம் நிறைவு பெறும் வரை அதாவது ஜனவரி 14ஆம் தேதிவரை திருப்பாவை சேவை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தை மாதம் பிறந்ததும் ஜனவரி 15ஆம் தேதி முதல் மீண்டும் சுப்ரபாத சேவை நடக்கும்.

Margazhi masam Thiruppavai to replace Suprabhata Seva on Tirupathi

தினந்தோறும் ஏகாந்த சேவையின் போது சீனிவாச மூர்த்திக்கு பூஜைகள் செய்யக்கூடிய நிலையில் மார்கழி மாதத்தில் கிருஷ்ணருக்கும் ஏகாந்த சேவை பூஜைகள் செய்யப்பட உள்ளது.

English summary
The TTD has suspended the Suprabhata Seva at the famous hill temple of Lord Venkateswara from December 16 in connection with the month-long auspicious Dhanurmasam or Margazhi matha festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X